குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் போக குடும்பங்கள் கொண்டாடும் ‘series’ காலம் இது! அதற்கு ஏற்றவாறு தற்போது disney+ hotstarல் வெளியான ‘Uppu Puli Kaaram’ தொடர் அனைவரும் கொண்டாடும் ஒன்றாக உள்ளது.தென் கொரியத் தொலைக்காட்சி தொடரான ‘My Father is Strange‘ கதையை அடிப்படையாகக் கொண்டு, “Uppu Puli Kaaram” எனத் தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு எடுத்துள்ளனர். ஒரு குடும்பத்தைப் பின்புலமாக வைத்து நவீன உறவுகளைச் சித்தரிக்கும் இத்தொடர் மற்ற தொலைக்காட்சி நாடகங்களை போல் இல்லாமல் நகைச்சுவையாகவும் தொடர்புடையதாகவும் இருக்கிறது. வனிதா, பொன்வண்ணன், ஆயிஷா, தீபிகா, நவீன், அஸ்வினி, ராஜ் அய்யப்பா, கிருஷ்ணா போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

பொன்வண்ணன் ஒரு அனுபவமிக்க நடிகராக, அவர் பாத்திரத்திற்கு நம்பகத்தன்மையைக் கொண்டுவருகிறார். பார்த்திபன், சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஷேக் இசையில் உருவாகியுள்ள இத்தொடரை எம்.ரமேஷ் பாரதி இயக்க, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கிறது. ‘பிஸ்தா’ பட இயக்குநரான ரமேஷ் இத்தொடரை இயக்கி தனது OTT பயணத்தை இனிதே தொடங்குகிறார். அணைத்து ‘social media’ தளத்திலும் இத்தொடரின் குடும்ப பாடல் வைரலாகிக்கொண்டு இருக்கிறது.
உப்பு புளி காரம் நடிகர்கள்:
வனிதா சுப்புலட்சுமியாகவும், பொன்வண்ணன் சுப்பிரமணியாகவும் குடும்பத் தலைவர்களாக அறிமுகமாகிறார்கள். அவர்களின் பிள்ளைகளாக ஆயிஷா சின்மையாகவும், அஸ்வினி கீர்த்தியாகவும், தீபிகா யாஷிகாவாகவும் மற்றும் நவீன் உதையாகவும் இத்தொடரில் நடிக்கின்றனர். கூடுதல் கதாபாத்திரங்களாக சோனியாபோஸ் – ஷர்மிளா, அரவிந்த் – சந்திரசேகர், பிரணவ் – மஹி, கிருஷ்ணா – சிவா, ராஜ் அய்யப்பா – திப்பு ஃபரினா – சுசியாகவும் நடித்து வருகின்றனர்.

மே 30 முதல் hotstarல் ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருக்கும் இத்தொடருக்கு தற்போது பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மிக அதிகமாக உள்ளனர். ‘Heartbeat’ என்ற தொடரைத் தொடர்ந்து தற்போது ‘உப்பு புளி காரம்’ தொடரும் hotstarஇல் முன்னணி வகிப்பதோடு மக்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]