28 பிப்ரவரி 2025 அன்று பல திரைப்படங்கள் பிரபலமான OTT தளங்களில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் ஏற்கெனவே வெளியானவை மட்டுமல்லாமல், நேரடியாக OTT வெளியீட்டிற்காக தயாரான படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. திரையரங்குகளுக்கு செல்ல முடியாத சினிமா ரசிகர்கள் OTT தளங்கள் மூலம் புதிய திரைப்படங்களையும், OTT வெளியீட்டு படங்களையும் சுலபமாக காண முடியும். OTT வெளியீட்டு பற்றிய விவரங்களை விளக்கும் வகையில், எந்தெந்த OTT தளங்களில்எந்தெந்த படங்கள் வெளியாகவுள்ள என்பதையும், படங்களை பற்றிய விவரங்களையும் பின்வரும் பட்டியல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1. சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2
சூழல் முதல் சீசன், 8 எபிசோடுகளுடன் 2022 ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த சூழல் தி வோர்டெக்ஸ் சீசன் 2 தற்போது வெளியாக தயாராகவுள்ளது. திரில்லர் மற்றும் மர்மம் நிறைந்த கதை களத்தை கொண்டு முதல் சீசனின் மர்மத்தை கண்டறிந்து, தொடர்ச்சியை முற்றுவிக்கும் வகையில் அனைவரையும் மீண்டும் எதிர்பார்ப்புகளுடன் பார்க்க வைக்கும் திரில்லர் திரைப்படமாக சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் – பிரம்மா & அனுசரண் முருகையன்
- நடிகர்கள் – கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், ‘கயல்’ சந்திரன், கௌரி ஜி கிஷன், சம்யுக்தா வியோலா விஸ்வநாதன், மோனிஷா ப்ளெஸ்சி, ரினி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், கலைவாணி பாஸ்கர், அஷ்வினி நம்பியார், சந்தினி தமிழரசன்.
- IMDb ரேட்டிங் – 8.3/10
- OTT ரிலீஸ் தேதி – பிப்ரவரி 28
- OTT தளம் – அமேசான் பிரைம்
2. பராரி
பராரி திரைப்படம் 22 நவம்பர் 2024 திரையரங்குகளில் வெளியாகிய கிராமத்து பின்னணியை கொண்டு, காதல் பரிணாமத்தை வெளிப்படுத்துவதன் மூலம் சாதி மற்றும் அரசில் போன்றவற்றால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ள கதை.
- இயக்குனர் – எழில் பெரியவேதி
- நடிகர்கள் – ஹரிசங்கர், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன்
- IMDb ரேட்டிங் – 5.4/10
- OTT ரிலீஸ் தேதி – பிப்ரவரி 28
- OTT தளம் – ஆஹா
3. பிளட் அண்ட் பிளாக்
ஒரு திரில்லரான திகில் திரைப்படமாக திரையரங்குகளில் பிளட் அண்ட் பிளாக் திரைப்படம் டிசம்பர் 26, 2024 வெளியாகியது. மலை பகுதியில் தனியாக இருக்கும் வீட்டில் நிகழும் திகிலான பல மர்ம காட்சிகளை மையமாக கொண்ட திரைப்படமாக பிளட் அண்ட் பிளாக் படம் உள்ளது.
- இயக்குனர் – குரு கார்த்திகேயன்
- நடிகர்கள் – சுகி விஜய், யானி ஜாக்சன், ஷர்மி, கிஷோர் ராம், சஞ்சய்.
- IMDb ரேட்டிங் – 7.4/10
- OTT ரிலீஸ் தேதி – பிப்ரவரி 28
- OTT தளம் – டென்ட்கொட்டா
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]