Home OTT திரையரங்குகளில் வெளியாகி 2 வாரம் தான் ஆச்சு… அதற்குள் OTT-யில் ரிலீஸான ஜி.வி.பிரகாஷின் ‘Rebel’!

திரையரங்குகளில் வெளியாகி 2 வாரம் தான் ஆச்சு… அதற்குள் OTT-யில் ரிலீஸான ஜி.வி.பிரகாஷின் ‘Rebel’!

by Sivaanantham RB

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். இவர் நடித்த ‘ரெபல்’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் 22-ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது.

தற்போது, இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் எந்தவித முன்னறிவிப்புமின்றி இன்று ரிலீஸாகியிருக்கிறது. 

1220558

கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை நிகேஷ்.ஆர்.எஸ் என்பவர் இயக்கியிருந்தார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு டூயட் பாடி ஆடியிருந்தார்.

மேலும், கருணாஸ், சுப்பிரமண்ய சிவா, ஆதித்யா பாஸ்கர், வெங்கிடேஷ், ஷாலு ரஹீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருந்தார், அஃப்ரோ பின்னணி இசையமைத்திருந்தார், அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.