தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக பல தமிழ் திரைப்படங்கள் 2025 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடைபோட்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது உள்ள ஓடிடி காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மேல் வெள்ளித்திரையில் திரையிடப்படுவது மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் படங்கள் வெளியான 1 அல்லது 2 மாதங்களில் ஓடிடியில் வெளியாவது தான்.
திரையரங்கிற்கு செல்ல முடியாத, வாய்ப்பு இல்லாத பல சினிமா ரசிகர்களுக்கு ஓடிடி தளத்தின் அசூர வளர்ச்சி, பேருதவி புரிந்துள்ளது. கிளாசிக் படங்கள் முதல் லேட்டஸ்ட் திரைப்படங்கள் வரை, காண முடிகிறது. இவ்வாறு January 19-24 ஓடிடி தளத்திற்கு வருகை தரும் தமிழ் படங்களின் பட்டியலை இந்த கட்டுரையில் காணலாம்.
1.அலங்கு
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் ‘அலங்கு’. தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள கிராமங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடி மக்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த அரிசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய யுத்தம் இந்த படத்தின் ஆழமாக பின்னணி.
இயக்குனர் – S.P.சக்திவேல்
நடிகர்கள் – குணநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பாணி சரத், ஸ்ரீ ரேகா
IMDb ரேட்டிங் – 8.9/10
ஓடிடி ரிலீஸ் தேதி – ஜனவரி 19, 2025
ஓடிடி – Amazon Prime Video
2.விடுதலை பாகம் 2
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான முதல் sequel படம் ‘விடுத்தலை பாகம் 2’ விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதை நிரூபணம் செய்யும் விதமாக 50 நாள் வெற்றிகரமாக திரையரங்கில் திரையிடப்பட்டதை முன்னிட்டு நன்றி அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். “பெருமாள் வாத்தியார்” என்ற முக்கிய கதாபாத்திரம் சென்ற பாகத்தில் ஒரு கருவியாக பயணித்து, இரண்டாம் பாகத்தில் மொத்த படத்தையும் நாயகனாக நிலைநிறுத்தும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டது பலரின் பாராட்டுகளைப் பெற்றது. ஆக்ஷன் மற்றும் சமூக கருத்துக்கள் கூறும் படங்களை விரும்பும் ரசிகர்கள் இந்த படத்தை மிகுதியாக விரும்புவர்.
இயக்குனர் – வெற்றிமாறன்
நடிகர்கள் – விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், போஸ் வெங்கட், கென் கருணாஸ்
IMDb ரேட்டிங் – 8.4/10
ஓடிடி ரிலீஸ் தேதி – ஜனவரி 19, 2025
ஓடிடி – Amazon Prime Video
3.திரு.மாணிக்கம்
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சாமானிய மக்களுக்கு மிகவும் பரிச்சயமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்த திரைப்படம் “திரு.மாணிக்கம்”. ஒரு தனி மனிதனின் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் ஒரு சிறு சம்பவம் அதன் எதிர்வினைகள், காண்போருக்கு பல விதமான உணர்ச்சிகளை உணரச் செய்யும்.
இயக்குனர் – நந்தா பெரியசாமி
நடிகர்கள் – சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா,இளவரசு, சின்னி ஜெயந்த்
IMDb ரேட்டிங் – 9.2/10
ஓடிடி ரிலீஸ் தேதி – ஜனவரி 24, 2025
ஓடிடி – Zee5
4.The Smile Man
இந்த வாரம் வெளியாகும் மற்றொரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் “The Smile Man” திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் என்று கோலிவுட்டில் அழைக்கப்படும் நடிகர் சரத்குமார் Alzheimer’s என்ற ஞாபக மறதி நோயால் அவதிப்படும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மருத்துவ ரீதியாக பின்னடைவில் உள்ள நாயகன் எவ்வாறு ஒரு சீரியல் கில்லரை கண்டு பிடிப்பார் என்பது தான் படத்தின் மையக்கரு.
இயக்குனர் – ஷ்யாம் பிரவீன்
நடிகர்கள் – சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, சுரேஷ் சந்திர மேனன், ஜார்ஜ் மர்யன்
IMDb ரேட்டிங் – 8.5/10
ஓடிடி ரிலீஸ் தேதி – ஜனவரி 24, 2025
ஓடிடி – ஆஹா தமிழ்
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]