January 30 – February 14 ஆம் தேதி வரை ஓடிடியில் வெளியாகும் தமிழ்/தமிழ் டப்பிங் செய்யப்பட்ட படங்களின் பட்டியலை இந்த கட்டுரையில் காணலாம். சினிமா பொழுதுபோக்கையும் தாண்டி பல மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றே கூறலாம். அதற்கு மிக முக்கிய பாலமாக அமைந்தது இந்த ஓடிடி தளங்களின் வருகையும் வளர்ச்சியும் தான். நமது மனதிற்கு பிடித்த படத்தை எத்தனை முறையானாலும் கண்டு மகிழ பேருதவி செய்கிறது.
திரையரங்கில் காணத் தவறிய பல படங்கள்/காட்சிகளை துல்லியமாக ஓடிடியில் ரிபீட் செய்து காணும் வாய்ப்பு சாமானிய சினிமா ரசிகருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவ்வாறு நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படங்களின் பட்டியல்கள் இதோ,
1.புஷ்பா 2
இந்திய அளவில் ஹிமாலய வெற்றியை எய்தி, உலக ரசிகர்களை கவர்ந்து வசூல் வேட்டையில் வெழுத்து வாங்கியது “புஷ்பா 2 – தி ரூல்” திரைப்படம். 2021 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 1 – தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் வெளியாகி மாபெரும் சாதனை புரிந்த “புஷ்பா 2” படக்குழு அறிவித்தது போல ‘Reloaded version’ செய்யப்பட்டு தற்போது ஓடிடிக்கு வருகை தந்துள்ளது. இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்ற நான்கு மொழிகளில் காணலாம்.
ஓடிடி: Netflix
ஓடிடியில் வெளியாகும் நாள்: ஜனவரி 30, 2025
2.ஐடென்டிட்டி
மலையாள சினிமாவில் பீல் குட் திரைப்படங்களுக்கு எந்த அளவு வரவேற்பும் ரசிகர்களும் இருக்கின்றனரோ, இதை விட சற்று அதிகமாக ‘ஆக்ஷன் திரில்லர்’ படங்களுக்கு உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய் நடிப்பில் உருவான ‘ஐடென்டிட்டி’ திரைப்படம் வெளியாகி பெரும்பாலான மக்களின் பாராட்டுக்களை பெற்றது படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி. மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ஓடிடி: Zee5
ஓடிடியில் வெளியாகும் நாள்: ஜனவரி 31, 2025
3.எமக்குத் தொழில் ரொமான்ஸ்
அசோக் செல்வன் நடிப்பில் 2024 ல் வெளியான மற்றொரு rom-com திரைப்படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. ஆக்ஷன் மற்றும் அதிரடி படங்களை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வந்தாலும், மனதிற்கு இதமான பீல் குட் மற்றும் ரொமான்டிக் படங்களில் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் அசோக் செல்வனுக்கு இளம் தலைமுறை ரசிகர் பட்டாளம் ஏராளம். “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெவ்வேறு நாட்களில் வெளியாகிறது.
ஓடிடி | ஓடிடியில் வெளியாகும் நாள் |
Sun Nxt | ஜனவரி 31, 2025 |
ஆஹா தமிழ் | பிப்ரவரி 14, 2025 |
4.பயாஸ்கோப்
சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் கிராமத்தில் வாழும் மக்களின் இயல்பான பேச்சு வெள்ளந்தியான குணத்தை பிரதிபலிக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 3 ஆம் தேதி வெளியான “பயாஸ்கோப்” திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சேரன் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்தது.
ஓடிடி: ஆஹா தமிழ்
ஓடிடியில் வெளியாகும் நாள்: ஜனவரி 31, 2025
5.Max
கன்னட சினிமாவின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான “Max” இந்தியா முழுவதும் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. காவல் நிலையத்தில் ஏற்படும் திடுக்கிடும் சம்பவத்தால் அங்கு இருக்கும் அனைத்து காவல் அதிகாரிகளின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது. ஒரே இரவில் அந்த ஆபத்தை எப்படி கடக்கின்றனர்? புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட SI ஆக இருக்கும் நாயகன் என்ன செய்யப்போகிறார் என்பதே கதையின் மைய கரு.
ஓடிடி: Zee5
ஓடிடியில் வெளியாகும் நாள்: ஜனவரி 31, 2025 (எதிர்பார்க்கப்படுகிறது)
6.வாகை
முன்னணி கோலிவுட் நடிகர் ராமகிருஷ்ணன் நடித்த “வாகை” திரைப்படம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளை எவ்வாறு தகர்த்து முன்னேறுகிறார் என்பதை கூறும் கதையாக உருவாகியுள்ளது.
ஓடிடி: டென்ட் கொட்டா
ஓடிடியில் வெளியாகும் நாள்: ஜனவரி 31, 2025
7.மெட்ராஸ்காரன்
பொறியாளராக இருந்து விவசாயியாக மாறிய சத்யா வாழ்வில் சிங்கம் என்ற கதாபாத்திரம் நுழைந்து அவனை கொல்ல நினைக்கிறான். அதனால் சத்யாவின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாரா திருப்பங்கள் என்னென்ன? என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் கூற முயற்சித்துள்ளார் இயக்குனர் வாலி மோகன் தாஸ்.
ஓடிடி: ஆஹா தமிழ்
ஓடிடியில் வெளியாகும் நாள்: பிப்ரவரி 7, 2025
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]