திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, சிறிது நாட்களுக்கு பிறகு OTT தளத்தில் வெளியிட்டு வருவதை படக்குழு வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வகையில் ஜூலை மாதம் OTT-ல் வரவிருக்கும் படங்கள்.
ஒவ்வொரு மாதமும் திரையரங்கில் வெளியாகும் படங்கள் OTT தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் நிலையில், ஒரு சில படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி ஹிட் அடித்தும் உள்ளன.
இங்க நான் தான் கிங்கு:

சந்தானம் நடிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், D. இமான் இசையில் பிரியலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், முனீஷ்காந்த் நடிப்பில் மே 17-ல் வந்த படம் ” இங்க நான் தான் கிங்கு”. ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 2-ல் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது. அனாதையான சந்தானம் விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்று திருமணம் செய்து விடுவார். பின்னர் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மீதி கதை.
கருடன்:

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷ்ணி, மீம் கோபி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து மே 31-ல் வெளியான படம் கருடன். பெரிய அளவில் வரவேற்பை பெற்று சூரியின் சினிமா வாழ்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. சொக்கன் கேரக்டரில் நடிப்பில் அசத்தியிருப்பார். ஜூலை 3-ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஹாரா:

80, 90-களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த மோகன், 16 ஆண்டுகள் கழித்து ஹாரா படத்தின் மூலம் கம்பேக் தந்தார். விஜய் ஸ்ரீ இயக்கத்தில், மோகன், அனுமோல் நடிப்பில் ஜூன் 7-ஆம் தேதி வெளியது. சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 5-ல் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.
மகாராஜா:

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், “சதுரங்க வேட்டை” புகழ் நட்டி, மணிகண்டன், சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மகாராஜா. ஜூன் 14-ஆம் தேதி வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று 100 கோடி வரை வசூல் செய்தது. நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் ஜூலை 12-ஆம் தேதி வெளியானது.
ஹிட் லிஸ்ட்:

விஜய் கனிஷ்கா, சரத் குமார், கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனீஷ்காந்த் நடிப்பில் மே 31-ல் வெளியான படம் ஹிட் லிஸ்ட். KS. ரவிக்குமாரின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர்கள் சூர்யா கதிர், கார்த்திகேயன் ஆகியோர் கூட்டணியில் இயக்கப்பட்டது. ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 19-ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது.
ஹாட் ஸ்பாட்:

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், ஆதித்யா பாஸ்கரன், கௌரி க்ரிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஆகியோர் நடிப்பில் இரண்டு மூன்று ஷார்ட் பிலிம்ஸ் சேர்ந்து வேறு வேறு கதையில் எடுக்கப்பட்ட அந்தோலஜி படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 19-ல் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது.
ஆடுஜீவிதம்(The Goat Life ):

ப்ரிதிவி ராஜ் நடிப்பில், ப்ளேஸிஸி இயக்கத்தில் நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு மார்ச் 28-ல் திரைக்கு வந்த படம் அடுஜீவிதம். பணம் சம்பாரிக்க வளைகுடா நாடுகளுக்கு சென்று அங்கு படம் சிரமத்தை கதையாக கூறியிருப்பார். மலையாள நாவல் அடுஜீவிதம் என்பதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 19-ல் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.
காடுவெட்டி:

சோலை ஆறுமுகம் இயக்கத்தில், RK. சுரேஷ், அகிலன், சுபாஷ் சந்திர போஸ், ஜெயம் கோபி, சாந்தி மணி நடித்து மார்ச் 15-ல் வெளியான படம் காடுவெட்டி. சமூகத்தில் ஜாதி பிரச்சனையால் இரண்டு நபர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை காட்டியிருப்பார். அமேசான் பிரைம் OTT தலத்தில் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சட்னி சாம்பார்:

யோகி பாபு முதன் முதலில் வெப் சீரிஸில் நடித்து நேரடியாக OTT தளத்தில் வெளியாகியுள்ள “சட்னி சாம்பார்” சீரிஸ் ஜூலை 26-ஆம் தேதி ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. காமெடி கலந்த இந்த வெப் சீரிஸில் வாணி போஜன், நித்தின் சத்யா, நிழல்கள் ரவி, க்ரிஷ் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹோட்டலை மையமாக கொண்டு ஊட்டியில் எடுக்கப்பட்டுள்ளது.
படங்கள் | OTT platform | நடிகர்கள் | ரிலீஸ் தேதி |
இங்க நான் தான் கிங்கு | அமேசான் பிரைம் OTT | சந்தானம், பிரியலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், முனீஷ்காந்த் | 2, ஜூலை 2024 |
கருடன் | அமேசான் பிரைம் OTT | சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷ்ணி, மீம் கோபி, சமுத்திரக்கனி | 3, ஜூலை 2024 |
ஹாரா | அமேசான் பிரைம் OTT | மோகன், அனுமோல் | 5, ஜூலை 2024 |
மகாராஜா | நெட்பிலிக்ஸ் OTT | விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், “சதுரங்க வேட்டை” புகழ் நட்டி, மணிகண்டன், சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் | 12, ஜூலை 2024 |
ஹிட் லிஸ்ட் | அமேசான் பிரைம் OTT | விஜய் கனிஷ்கா, சரத் குமார், கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனீஷ்காந்த் | 19, ஜூலை 2024 |
ஹாட் ஸ்பாட்(anthology movie) | அமேசான் பிரைம் OTT | கலையரசன், ஆதித்யா பாஸ்கரன், கௌரி க்ரிஷன், அம்மு அபிராமி, ஜனனி | 19, ஜூலை 2024 |
ஆடுஜீவிதம்(The Goat Life ) | நெட்பிலிக்ஸ் OTT | ப்ரிதிவி ராஜ், அமலாபால் | 19, ஜூலை 2024 |
காடுவெட்டி | அமேசான் பிரைம் OTT | RK. சுரேஷ், அகிலன், சுபாஷ் சந்திர போஸ், ஜெயம் கோபி, சாந்தி மணி | 19, ஜூலை 2024 |
சட்னி சாம்பார்(web series) | ஹாட் ஸ்டார் OTT | யோகி பாபு, வாணி போஜன், நித்தின் சத்யா, நிழல்கள் ரவி, க்ரிஷ் ஹாசன் | 26, ஜூலை 2024 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]