மஹாசிவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த சிவ வழிபாடு மேற்கொள்ளும் இரவு ஆகும். மேலும், இந்நாள் புனித நாளாக வழிபாடு செய்யப்படுகிறது. ஈசன் வழிபாட்டிற்கு மிக உகந்த நாளான மஹா சிவராத்திரி இந்த வருடம் பிப்ரவரி 26 ம் தேதி 6 மணிக்கு மேல் துவங்கவுள்ளது. வானில் நட்சத்திரங்கள் ஒளிரும் இந்த அற்புதமான இரவில் மக்கள் அனைவரும் சிவபெருமானை நினைத்து மனம் உருகி இரவு முழுவது மஹா சிவராத்திரி வழிபாடு செய்வர். இந்நாளில் பல அரசியல் தலைவர்கள், மற்றும் பல பிரபலங்கள் கோயம்புத்தூரில் ஈஷா யோகா மையத்திற்கு சென்று நேரடியாக தியானம், பூஜை மற்றும் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டு தெய்வீக மஹா சிவராத்திரியை கொண்டாடுவர்.
கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவனை நினைத்து, தியானங்கள் மற்றம் சிவ பக்தி பாடல்கள் பாடி மஹாசிவராத்திரி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். இந்த வழிபாட்டை மேலும் சிறப்பிக்க JioHotstar-ல் மஹா சிவராத்திரி வழிபாடு உலகளவில் 12 மணி நேரம் நேரலை செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 26 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 27 ம் தேதி காலை 6 மணி வரை நிகழும்.
— JioHotstar (@JioHotstar) February 25, 2025
இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கிய ஜோதி லிங்க திருத்தலங்களில் நடைபெறும் 20 க்கும் மேற்றப்பட்ட நேரடி ஆராதனைகள் நடைபெறும். மேலும், ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஆகியோர் பக்தர்களுக்காக ஆன்மீக உரைகள் வழங்கவுள்ளார். JioHotstar மூலம் பக்தர்கள் உலகம் முழுவதும் நேரடியாக பக்திப் பூர்வமாக இந்த விழாவினை காணலாம். JioHotstar- ன் நேரலையுடன் இணைந்து மஹாசிவராத்திரியில் ஒரு ஆன்மிக வழிபாட்டிற்கு தயாராகுங்கள்.
JioHotstar – ன் மஹாசிவராத்திரி 2025 நேரலை விவரங்கள்
நிகழ்ச்சி பெயர் | Mahashivratri – The Divine Night |
ஓளிபரப்பு தளம் | JioHotstar |
தேதி | 26 பிப்ரவரி 2025 – 27 பிப்ரவரி 2025 |
நேரம் | மாலை 6 மணி முதல் காலை 6 மணி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]