Home OTT மெகா ஹிட்டான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மெகா ஹிட்டான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மலையாளத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீஸான சர்வைவல் த்ரில்லர் ஜானர் படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. மெகா ஹிட்டான இப்படம் வருகிற மே 3-ஆம் தேதி பிரபல OTT தளமான 'டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்'ல் வெளியாகவிருக்கிறது.

by Santhiya Lakshmi

மலையாளத்தில் இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீஸான சர்வைவல் த்ரில்லர் ஜானர் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்‘. இந்த படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருந்தார்

இதில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், காலித் ரஹ்மான், தீபக் பரம்போல், அருண் குரியன், ஜார்ஜ் மரியன், ராமச்சந்திரன் துரைராஜ், விஜய் முத்து, கதிரேசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Manjummel Boys 11712388053

2006-ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள ‘குணா’ குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும், உலக அளவில் இந்த படம் ரூ.225 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. தற்போது, இப்படத்தை வருகிற மே 3-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.