தமிழ் திரையுலகில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தன்னுடைய கடுமையான உழைப்பால் இன்று முன்னணி கதாநாயகியாக உருவெடுத்துள்ளவர் நடிகை நயன்தாரா. இவரின் வாழ்க்கை பற்றிய பல செய்திகள் பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்டு வந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நயன்தாரா யார்? அவரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும், இணையத்தில் பகிர்வதை தாண்டி நடிகை நயன்தாராவின் பலதரப்பட்ட வாழ்க்கை பரிணாமங்களை வெளிப்படுத்த Nayanthara : Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் ஒன்று வெளியாகவுள்ளது.
பிரபல OTT நிறுவனமான Netflix -ல் நடிகை Nayanthara மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடைய திருமணம் நடந்த சமையத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு இப்போது தான் அதன் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் நடிகை நயன்தாரா திரைப்பயணம், ஏற்ற இறக்கங்கள், திருமண வாழ்க்கை என பலவற்றை ரசிகர்கள் பார்க்கலாம்.
நடிகை நயன்தாராவுடன் பணியாற்றிய நடிகர் நடிகைகள், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவருடன் நடித்த நடிகர் உபேந்திரா, நடிகர் நாகார்ஜுனா, இயக்குனர் அட்லீ, நடிகை ராதிகா சரத்குமார், நடிகை டாப்ஸி பண்ணு, நடிகர் ராணா டகுபதி ஆகியோர் இந்த ட்ரைலரில் இடம்பெற்றனர். நயன்தாராவின் திரைப்பயணம் பற்றியும், அவரின் அர்ப்பணிப்பு பற்றியும் பேசுகிறார்கள்.
‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பில் சந்தித்து, அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, அவர்களின் திருமணம் பற்றியும், இந்த Nayanthara : Beyond The Fairy Tale படத்தில் வெளிப்படையாக பேசப்படும் என தெரிகிறது. இவர்களின் காதல் கதை, இப்போது இவர்களின் திருமண பந்தம் ஆகியவற்றை மிக இயல்பாகவும் நகைச்சுவையாகவும் இந்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்று வெளியான ட்ரைலரில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகை நயன்தாராவிடம் கேள்வி கேட்பது போன்ற காட்சிகளும் இருந்ததால், திரைத்துறையில் இருந்து நயன்தாராவின் நண்பர்கள், பணியாற்றியவர்களை தாண்டி அவரை பற்றிய புது கண்ணோட்டம் பிறக்கும் என தெரிகிறது. இந்த டாக்குமெண்டரி வரும் நவம்பர் 18, 2024 Netflix தளத்தில் வெளியாகும்.