Disney+Hotstar ஓடிடி தளத்தில் புதிதாக “Office” என்ற வெப் தொடர் வெளியாக உள்ளது. இதற்கான முன் அறிவிப்பு சென்ற வருடம் ஒரு கிலிம்ஸ் வடிவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த வெப் தொடரின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம் பெற்ற பாடல் வெளியானது.
“Office” – பாடல், வெப் தொடரின் குழு
“Office” என்ற இதே தலைப்பில் விஜய் டிவியில் 2013 ஆம் ஆண்டு மெகா தொடர் ஒன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 2025 ஆம் ஆண்டு Disney+Hotstar தயாரிப்பில் “Office” என்ற அதே தலைப்பு இடப்பட்ட மற்றொரு அலுவலக காமெடி தொடராக உருவாகி உள்ளது. இந்த வெப் தொடரின் பாடல் வழியாக, கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் மக்களுக்கு அறிமுகம் ஆகிறது.
வட்டாச்சியர் அலுவலகத்தில் பல்வேறு பொறுப்பில் பணிபுரியும் நபர்களாக குரு லக்ஷ்மன், ஸ்மெஹா மணிமேகலை, தங்கதுரை, கேமி, ஆகியோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வெப் தொடரின் காலை இயக்கம், பின்னணி இசை காண்பவர்களை கவரும் வண்ணம் இடம்பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஸ்ட்ரீமிங் முடிவடைந்த rom com வெப் தொடர் ஆன “உப்பு புளி காரம்” வெகுவான ரசிகர்களின் பாராட்டை பெற்று, அடுத்து என்ன வெப் தொடர் வரும் என்ற ஆர்வத்தை தூண்டியது. தற்போது வெளியான “Office” வெப் தொடரின் அப்டேட் ஓடிடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- இயக்குனர்கள் – அப்துல் கபீஸ், வெற்றி
- நடிகர்கள் – குரு லக்ஷ்மன், ஸ்மெஹா, பரந்தாமன், கேமி, RJ சிரித்திரன், தங்கதுரை, ப்ராங்க்ஸ்டெர் ராகுல்
- இசை – Flute நவீன்
இயக்குனர் அப்துல் கபீஸ், Disney+Hotstarல் வெளியான ‘Heartbeat’ வெப் சீரிஸின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]