Home OTT “பொன் ஒன்று கண்டேன்” OTT இல் வெளியானது- எங்கு பார்க்கலாம்?

“பொன் ஒன்று கண்டேன்” OTT இல் வெளியானது- எங்கு பார்க்கலாம்?

by Santhiya Lakshmi

இயக்குனர் பிரியா அவர்களின் இயக்கத்தில் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபதிரமாக நடித்துள்ள படம் தான் பொன் ஒன்று கண்டேன். முக்கோண காதல் கதையான இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி (சித்திரைக்கனி) அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை கலர்ஸ் தமிழ் மற்றும் ஜியோ சினிமா-வில் வெளியிடப்படவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் இளம் கதானாயகர்களுள் ஒருவரான அசோக் செல்வன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் சூது கவ்வும் படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. ஓ மை கடவுளே படத்தின் மூலம் இளைஞர்களால் மிகவும் ஆராவாரமாக பேசப்பட்ட கதாநாயகர். இதன் பின் இவரது திரைபயணம் சூடுபிடித்தது. அதன் பின் ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தார்.

கேரளா மாநில நடிகையான ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழில் பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின் செல்ல அய்யாவு இயக்கத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் புதுவிதமாக நடித்து அனைவரையும் ரசிக்கவைத்தார்.

நடிகர் வசந்த் ரவி 2017 இம் ஆண்டு வெளிவந்த தரமணி எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் அதன் பின் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதன் பின் பல படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வெளிவந்த ஜெயிலர்  படத்தில் ரஜினிகாந்திற்கு மகனாக நடித்திருந்தது மக்களிடையே பரவலாக பேசப்பட்டது.

இயக்குனர் கெளதம் மேனன் கைவிட்டதாக கூறப்படுகின்ற பொன் ஒன்று கண்டேன் படத்தை இயக்குனர் பிரியா அவர்கள் இயக்கியுள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பொன் ஒன்று கண்டேன் படத்தின் பெயரையே இந்த படத்திற்கும் வைத்துள்ளனர். இயக்குனர் பிரியா அவர்கள் இதற்க்கு முன் பல படங்களை இயக்கியுள்ளார், இப்பொழுது இந்த படம் தயாராகியுள்ளது. ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் பொன் ஒன்று கண்டேன் படத்தை பார்த்து மகிழலாம்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.