திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் OTT வெளியீட்டுக்காக காத்திருந்து வீட்டிலிருந்து பார்க்கும் ரசிகர்களும் மறுபக்கம் உண்டு. இப்படி ஒவ்வொரு படமும் வெளியாகி திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டதும், ஏதாவது OTT தலத்தில் வெளியாக போட்டி நிலவும்.
செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் OTT தளங்களில் வெளியாகும் படங்கள் பட்டியல்.
ரகு தாத்தா

கீர்த்தி சுரேஷ், எம் எஸ் பாஸ்கர், தேவா தர்ஷினி, ரவீந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ரகு தாத்தா’. கயல்விழி பாண்டியன் என்ற வாங்கி ஊழியர் ‘க. பாண்டியன்’ என்ற புனைப்பெயரில் சமூக மாற்றம், பெண்ணியம் மற்றும் ஹிந்தி திணிப்பு பற்றிய கதைகளை வார பிரதிகளாக வெளியிட்டு வருபவர். இவர் தனிப்பட்ட கருத்துக்களும் வாழ்க்கை சுழலும் சேரும்போது நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையான கதியாயாக எடுத்துள்ளார் இயக்குனர் சுமன் குமார். இந்த படம் செப்டம்பர் 13ம் தேதி Zee5 OTT தளத்தில் வெளியாகிறது.
இந்தி திணிப்பும் பெண்ணியமும் பேசும் ‘ரகு தாத்தா’ – தமிழ் திரை விமர்சனம்!
Teenz

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சிறுவர்களை வைத்து எடுத்துள்ள படம் தான் ‘Teenz’. பள்ளியில் இருந்து 13 சிறுவர்கள் தப்பித்து செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் த்ரில்லிங் ஆன கதைக்களமாக அமைந்த படம். ஜூன் 7ம் தேதி வெளியாகி சமீபத்தில் திரையரங்குகளில் இருந்து Amazon Prime Video OTT தளத்தில் வெளியாகிறது.
நண்பன் ஒருவன் வந்த பிறகு

இன்றிய இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்கள் சந்திக்கும் தோல்விகள், கஷ்டங்களை பேசும் படமாக வெளியானது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. ஒரு நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும் நட்பு, காதல், சிக்கல்கள், தனிப்பட்ட வேறுபாடுகள் என்பதை கதையாக எடுத்துள்ளதுள்ளனர். இந்த படம் தற்போது Aha OTT தளத்தில் செப்டம்பர் 13 வெளியாகிறது.
Goli Soda Rising

Disney Plus Hotstar தளத்தில் நடிகர் ஷ்யாம், சேரன், புகழ் நடிப்பில் Goli Soda Rising தொடர் செப்டம்பர் 13 முதல் ஒளிபரப்பாகிறது. 2014ல் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் sequal ஆக உருவாகியுள்ளது இந்த தொடர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]