Home OTT செப்டம்பர் மாதம் OTT-யில் வெளியான தமிழ் படங்கள் …

செப்டம்பர் மாதம் OTT-யில் வெளியான தமிழ் படங்கள் …

செப்டம்பர் மாதம் 1 முதல் 30 வரை OTT தளங்களில் வெளியான தமிழ் படங்களின் பட்டியல்.

by Shanmuga Lakshmi

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வெளியான பல தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் வரவேற்பை பெற்றும் பெறாமலும் இருந்தன. திரையரங்கிற்கு செல்லாத ரசிகர்கள் அதன் OTT ரிலீஸுக்காக தற்போது காத்து கொண்டிருக்கின்றனர்.

1)டீன்ஸ்

இயக்குனர் பார்த்திபன் அவர்களின் இயக்கத்தில் ஜூலை 12ஆம் தேதி வெளியானது “டீன்ஸ்” திரைப்படம். Adventure திரில்லர் படமாக அமைந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதற்கான முன்னணி இந்த திரைப்படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

2)வாஸ்கோடகாமா

ஆறு வருடங்களுக்கு பிறகு நடிகர் நகுல் நடிப்பில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பாண்டஸி காமெடி படமாக “வாஸ்கோடகாமா” வெளியானது. இந்த படத்தை இயக்குனர் RG கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

3)ரகு தாத்தா

2024 ஆம் ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மூன்றாவது திரைப்படம் “ரகு தாத்தா”. ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இந்த திரைப்படம் வெளியானது. அரசியலும் காமெடியும் கலந்த கதை களத்தை அமைத்துக் இயக்கி உள்ளார் இயக்குனர் சுமன் குமார்.

4)பேச்சி

இந்த ஆண்டில் நல்ல பாராட்டுகளை பெற்ற மற்றொரு திரைப்படம் “பேச்சி”. ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இந்த படத்தின் இயக்குனர் ராமசந்திரன் B. 

5)Surya’s Saturday

 நடிகர் நானியின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 29 ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. விவேக் ஆத்ரேயாவின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் நூறு கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

6)கொட்டுக்காளி 

சாதி மற்றும் பாலின வேறுபாடுகளை பின்பற்றும் இருக்கும் பெண் எதிர்கொள்ளும் சவாலில், ஒரு நிகழ்வை படமாக்கி சர்வதேச விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கும் “கொட்டுக்காளி” ஆகஸ்ட் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியானது.

7)டிமாண்டி காலனி 2

நல்ல வரவேற்பை பெற்ற இரண்டாம் பாக திரைப்படங்களில் “டிமாண்டி காலனி 2” இடம்பெறும். 2015 ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் நல்ல பாராட்டுகளை மக்கள் மத்தியில் குவித்த நிலையில் இரண்டாம் பாகமும் பாராட்டுக்களை பெற்றது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இரண்டு பாகங்களையும் இயக்குனர் R.அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.  

செப்டம்பர் இரண்டாம் வாரம் OTT யில் வெளியாகும் படங்கள்! 

OTT தளங்களில் செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை வெளியான தமிழ் திரைப்படங்களின் பட்டியல்.  

படம் வெளியான நாள் OTT தளம் படக்குழுவினர் IMDb ரேட்டிங் 
டீன்ஸ் 06.09.2024Amazon Prime Videoரா.பார்த்திபன், கிருத்திகா ஐயர், பிரஷிதா நசீர்,தீபன், தீபேஷ்வரன், அஸ்மிதா மஹாதேவன்,ஜான் பாஸ்கோ 5.6/10
வாஸ்கோடகாமா06.09.2024Amazon Prime Video & AHA Tamilநகுல், கே.எஸ்.ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, அர்த்தனா பினு, ஆனந்தராஜ், முனீஷ்காந்த், மன்சூர் அலி கான் 8.5/10
ரகு தாத்தா  13.09.2024Zee5கீர்த்தி சுரேஷ், M.S.பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்த் சாமி, ராஜீவ் ரவீந்திரநாத், ஜெயக்குமார் 6.3/10
பேச்சி  20.09.2024Amazon Prime Video & AHA Tamilகாயத்ரி, பால சரவணன், தேவ் ராம்நாத், ஜனா, ப்ரீத்தி நெடுமாறன், மகேஸ்வரன் 6/10
Surya’s Saturday  26.09.2024Netflix நானி, பிரியங்கா மோகன், SJ சூர்யா, அபிராமி, அதிதி பாலன், சாய் குமார், முரளி சர்மா, அஜய், ஜான்சி 7.3/10
கொட்டுக்களி 27.09.2024Amazon Prime Video சூரி, அன்னா பென், ஜவஹர் சக்தி, பூபாளம் பிரகதீஸ்வரன், சாய் அபிநயா, முல்லை அரசி  6.6/10
டிமான்டி காலனி -227.09.2024Zee5அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், செரிங் டார்ஜீ, சர்ஜனோ காலித், மீனாட்சி கோவிந்தராஜன், ரமேஷ் திலக்  7.2/10

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.