Home OTT Netflix OTT -ல் வரவிருக்கும் தளபதி Vijay – யின் GOAT.     

Netflix OTT -ல் வரவிருக்கும் தளபதி Vijay – யின் GOAT.     

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி Vijay நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்ற GOAT படம் வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி முதல் Netflix OTT தளத்தில் வெளியாகவுள்ளது. 

by Sudhakaran Eswaran

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி Vijay நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்ற GOAT படம் வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி முதல் Netflix OTT தளத்தில் வெளியாகவுள்ளது. 

வாரிசு, லியோ படத்தின் கலவையான விமர்சனத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் முதன் முதலில் கூட்டணி சேர்ந்த vijay  GOAT படத்தில் நடித்திருந்தார். விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்த படம் என்றே கூறலாம். ஏனெனில் விஜய் அரசியல் கட்சி பெயர், கொடி என அரசியலில் எண்ட்ரி தர தயாராகும் நிலையில் GOAT படம் வெளியானது

கிட்டத்தட்ட விஜய்யின் சினிமா வாழ்வில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே இனி நடிக்கப்போவதாக தகவல் வந்த வண்ணம் இருப்பதால் GOAT படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. 

GOAT படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செப்டம்பர் 5 – ஆம் தேதி GOAT படம் வெளியாகி நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. இதுவரை 450 கோடி வரை வசூல் செய்தது. 2024 -ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது. 

The greatest of all time - vijay
Source: X page (vijay)

விஜய்யுடன் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, மோகன், அஜ்மல் அமீர், சினேகா, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, யோகி பாபு, லைலா என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, AGS என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.  

விஜய் இரட்டை வேடத்தில் காந்தி மற்றும் ஜீவன் கேரக்டரில் நடித்திருந்தார். வெளியாகி 25 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி Netflix OTT தளத்தில் GOAT திரைப்படம் வெளியாகவுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. GOAT படத்தின் டிஜிட்டல் உரிமம் 110 கோடிக்கு Netflix நிறுவனம் பெற்றிருந்தது.  

அடுத்து விஜய் நடிக்கும் விஜய் 69 படத்தை H. வினோத் இயக்கவுள்ளதாக தெரிகிறது. விஜய் அரசியல் பயணம் தொடங்கியுள்ள நிலையில் வினோத்தின் படம் தான் இறுதியாக இருக்கும் என தெரிகிறது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.