தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகளவில் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்த நடிகர் நடிகைகள் பலரும் தங்களின் நிஜ வாழ்க்கையில் தனக்கான துணியை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்வது பெரியளவில் வாழ்த்துக்களை சேகரிக்கும். அப்படி அதிர்ச்சியாகவும், எதிர்பார்ப்புடனும் இந்த 2024ல் திருமணம் செய்துகொண்ட நடிகர் நடிகைகள் சிலர் உண்டு.
ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானி என்பவரை இந்தாண்டு பெப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்துகொண்டார். தமிழில் ‘தீரன் அதிகாரம் 1’, ‘NGK’, ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்த இவர் ஹிந்தி நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை கோவாவில் மணந்தார். இருவரும் அவர்களின் திருமணம், ஹல்தி, வரவேற்பு விழா என அவர்களின் திருமணத்திற் விமரிசையாக நடத்தினர்.
மீதா ரகுநாதன் – மோனிஷ் சண்முகம்
‘முதல் நீ முடிவும் நீ’, ‘குட் நைட்’ ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் கதாநாயகிகளில் தனித்த்துவமான ரசிகர்களை திரட்டியுள்ளவர் நடிகை மீதா ரகுநாதன். யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய காதலர் மோனிஷ் சண்முகம் என்பவரை மார்ச் மாதம் 18, கரம் பிடித்தார். மீதா ரகுநாதன் அடுத்ததாக சித்தார்த்தின் 40 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல்
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் வளர்ந்து வரும் நடிகையாக அசதிவருபவர் நடிகை அபர்ணா தாஸ். இவரும் மலையாள நடிங்கர் தீபக் பாரம்போலும் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கேரளாவில் திருமணம் செய்துகொண்டனர். தமிழில் ‘டாடா’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா – ஜாஹிர் இக்பால்
தமிழில் ரஜினிகாந்த் உடன் ‘லிங்கா’ படத்திலும் ஹிந்தியில் பிரபலமான பல படங்களில் நடித்த நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய காதலர் ஜாஹிர் இக்பாலை ஜூன் மாதம் கரம்பிடித்தார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெற்றோர்களை மட்டும் கொண்டு இவர்களின் திருமணம் மும்பையில் நடந்தது. ஜாஹிர் இக்பாலும் ஹிந்தி படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
பிரேம்ஜி அமரன் – இந்து
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட பிரேம்ஜி அமரன் அவரின் திருமணம் சுற்றி எழுந்த நீண்ட கால கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஜூன் மாதம் 9ம் தேதி இந்து என்பவரை மணந்தார். திருத்தணி முருகன் கோவிலில் எளிமையாக நடந்த திருமணத்தில் இருதரப்பு விட்டார் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.
வரலட்சுமி சரத்குமார் – நிக்கொலாய் சச்தேவ்
தமிழில் ‘போடா போடி’, ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் ஜூலை மாதம் 3ம் தேதி மும்பையை சேர்ந்த நிகோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஏமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக்
‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ‘ஐ’, ‘2.0’, ‘தங்க மகன்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். இவர் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மணந்தார். பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘காசிப் கர்ல்ஸ்’ தொடரில் நடித்து பிரபலமானவர் எட் வெஸ்ட்விக்.
மெகா ஆகாஷ் – சாய் விஷ்ணு
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான பல படங்களில் நடித்த நடிகை மெகா ஆகாஷ் தன்னுடைய 6 வருட காதலை திருமணத்தில் இணைத்துள்ளார். சாய் விஷ்ணு என்பவரை காதலித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதம் 15ம் தேதி இருவருக்கும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.
அதிதி ராவ் ஹைதரி – சித்தார்த்
தமிழில் ‘பாய்ஸ்’, ‘ஆயுத எழுத்து’, ‘காதலில் சுதப்புவது எப்படி’, ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். இவரும் ‘காற்று வெளியிட’, ‘செக்க சிவந்த வானம்’, ‘சைக்கோ’ அகத்திய படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைதரியும் நீண்ட மாதங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தில் நடந்தது.
ரம்யா பாண்டியன் – லொவெல் தவான்
‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’, ‘ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்’ ஆகிய படங்களில் நடித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் யோகா ஆசிரியர் லொவெல் தவான் என்பவரை வாரணாசியில் நவம்பர் மாதம் மணந்தார். நெருக்கமான திருமண நிகழ்வாக அமைந்து பின்னர் ஆரவாரமான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
பிரதீப் ஆண்டனி – பூஜா ஷக்தி
‘வாழ்’, ‘அருவி’ ஆகிய படங்களில் நடித்ததிலும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தன்னுடைய தோழியும் காதலியான பூஜா ஷக்தி என்பவரை நவம்பர் மாதம் 7ம் தேதி சென்னையில் மணந்தார்.
நாக சைதன்யா – சோபிதா துலிப்பாளா
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிப்பாளாவை டிசம்பர் 4ம் தேதி ஆந்திராவில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் மணந்தார். தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சோபிதா, இவர் ஹிந்தி மொழியிலும் பரவலாக நடித்துவருகிறார். நடிகர் நாக சைதன்யா பெருவாரியாக தெலுங்கு படங்களிலும் ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்துவருகிறார்.
காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காலிங்கராயர்
மலையாளம், தமிழ் படங்களில் சிறப்பான தனித்துவமான நடிப்பால் பிரபலமானவர் காளிதாஸ் ஜெயராம். ‘பாவக் கதைகள்’, ‘விக்ரம்’, ‘ராயன்’ என பல படங்களில் நடித்த இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான தாரிணி காளிங்கராயரை இரு வீட்டார் சமந்தத்துடன் டிசம்பர் 8ம் தேதி மணந்தார்.
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில்
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய நீண்ட கால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை அனைவரின் ஆச்சரியத்திற்கும் திருமணம் செய்வதாக அறிவித்தார். டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடந்த திருமணத்தில் ஹிந்து முறைப்படியும் பின்னர் அடுத்த நாள் கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. ஆண்டனி தட்டில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.