தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 15 வருடங்களாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். இரண்டு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் சினிமா துறையினர் பங்கேற்றனர். இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
திருமண சம்பிரதாயங்களையும் இன்று எடுத்த புகைப்படங்களையும் “#ForTheLoveOfNyke ❤️” என்ற வாசகத்துடன் பதிவிட்ட Keerthy Suresh, அதற்கு ரசிங்கர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். ஆண்டனி தட்டில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இனைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் இதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை என்பதும் முதல் முறை இவர்களது புகைப்படங்களை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் Keerthy Suresh -க்கு டும் டும் டும் ..? மாப்பிள்ளை இவருதானா??
இருவரது சொந்த ஊரான கேரளாவின் கொச்சியில் இவர்களின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிகிறது. இந்த விழாவில் பிரபல திரைப்பட கலைஞர்களும், கீர்த்தி சுரேஷின் நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றிய பிரபலங்களும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.