இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள 2K Love Story திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதா?
புதுமுக நடிகர் ஜெகவீர் நடித்துள்ள 2K Love Story திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Youngster-களின் காதல் காமெடி கதையாக வெளிவந்துள்ள இப்படத்தில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், சிங்கம்புலி, ஜி.பி.முத்து போன்ற பலர் நடித்துள்ளனர்.
2K Love Story- திரைக்கதை
சிறுவயது முதலே நண்பர்களாக இருக்கும் கார்த்திக்( ஜெகவீர் ) மற்றும் மோன(மீனாட்சி கோவிந்தராஜன்) ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.காலேஜ் life-யை முடித்து Wedding Photography Business-யை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்குகின்றனர். அவர்களின் காலேஜ் ஜூனியரான கார்திக்ககிடம் தனது காதலை வெளிப்படுத்த இருவருக்குமிடையே காதல் வளர தொடங்குகிறது.
சிறுவயது முதலே நண்பர்களாக இருப்பதால் கார்த்திக் மற்றும் பவித்ராவின் காதல் விவகாரங்களில் மோனி தலையிட காதலர்களுக்கிடையே பிரச்சனை உருவாகிறது.அனால் அப்பொழுதும் நட்பே முக்கியம் என கார்த்திக் முடிவெடுத்து இருவரும் பிரிகிறார்கள். இவர்களின் பிரிவு மோனிக்கு தெரிந்து இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கிறாள். பவித்ராவிடம் அத்தனைக்கும் காரணம் possesive தான் என்று புரியவைத்து மீண்டும் கார்த்திக் பவித்ரா ஜோடியை ஒன்றிணைக்கிறாள்.
இருவரையும் சந்தோசமாக மூணார் trip-க்கு நண்பர்கள் அனுப்பி வைக்க அனால் அங்கு கார் மோதி பள்ளத்தில் விழுந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறாள். பவித்ராவின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திகை, நண்பர்கள் தேற்றி விட முயற்சி எடுக்கின்றனர்.
அதிலிருந்து மீண்டு வாழத்தொடங்கும் கார்திக்ககிடம் மோனியின் கல்யாண ஏற்பாடு பொறுப்பை, ஒரு கண்டிஷனுடன் மோனாவின் பெற்றோர் ஒப்படைக்கின்றனர்.
கண்டிஷனுக்கு ஏற்றவாறு கல்யாணம் முடிந்ததா இல்லையா என்பதே 2K Love Story -இன் படக்கதை.
After the most youthful songs back to back, 4th single #YethuvaraiUlagamo releases tomorrow at 5 pm from #2KLoveStory for Valentine’s to celebrate 🖊️💞
— D.IMMAN (@immancomposer) February 4, 2025
A #DImmanMusical
Praise God!#2KLoveStoryFrom14thFeb ❤️@Dir_Susi @iamjagaveer @dhananjayang @MeenakshiGovin2 @CityLightPics… pic.twitter.com/x1opCMrXLq
கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பு
முதல் படமாக இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு பிசிரில்லாமல் நடித்திருக்கிறார் ஹீரோ ஜெகவீர். ஹீரோயின் செண்டிமெண்ட் காட்சிகளில் தனது நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார். சிங்கம் புலி மற்றும் ஜி.பி.முத்துவின் காமெடி combo ஹிட் அடித்துள்ளது. அதனைத்தவிர்த்து படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் தனது charecter-க்கு பிசிறில்லாமல் நடித்துள்ளதால் ஒவ்வொரு charecter-களும் மனதில் பதிகின்றன.
படத்தின் பலம்
திரைக்கதையை youngster- களின் காதல் நட்பு வாழ்வியலை ஒவ்வொரு காட்சிகளுடன் கண்முன் கொண்டு வந்துள்ளார் இயக்குனர். இப்படத்தின் முதல் பெரிய பலமே பின்னணி இசையும்,பாடல்களும். ஒவ்வொரு காட்சிகளுக்கேற்றவாறு இசை அமைத்துள்ளார் D.Imman. கோர்வையற்ற காட்சிகள் அங்கங்கு இடம் பெற்றிருந்தாலும் படத்தின் காமெடி காட்சிகள் அதனை சரி செய்கின்றன. இப்படத்தின் புது முக நடிகர் ஜெகவீரே படத்தின் மிகப்பெரிய பலம். nakkalaites channel நடிகர்கள் பலரும் இக்கதைக்கு வலு சேர்ந்துள்ளனர்.
கிளைமாக்ஸ் காட்சிகளை முன்கூட்டியே கணிக்க முடியாததும் படத்தின் பலமே.
படத்தின் பலவீனம்
ஆங்காங்கே கோர்வையற்ற காட்சிகள் தோன்றி, படத்ததிற்கும் ஆடியன்ஸிற்கும் இடையே உள்ள connectivity-யை பாதிக்கிறது. சில காமெடி காட்சிகள் தேவையற்ற நேரத்தில் இருப்பதால் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆங்காங்கே அடிக்கடி வரும் பின்னணி இசை, முகம் சுளிக்க வைக்கிறது. எளிதில் கணிக்கக்கூடிய சில காட்சிகளை ட்விஸ்ட்களாக சேர்த்துள்ளதால், அக்காட்சிகள் அவ்வளவாக கவனம் ஈர்க்கவில்லை.
இயக்குனர் சுசீந்திரன் 2K கிட்ஸ்களின் காதல் மற்றும் நட்பினை மிக அருமையான முறையில் திரையில் காட்டியுள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளது படத்தின் மிகப்பெரிய பலம். காதல்,நட்பு,எதிர்காலம் பற்றிய பயம் என தற்கால இளைஞர்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளை காமெடி கலந்த கோணத்தில் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]