Home Reviews Suzhal:The Vortex 2 வெப் சீரிஸ் விமர்சனம் – சிறந்த கதை, சிக்கலான சஸ்பென்ஸ்!

Suzhal:The Vortex 2 வெப் சீரிஸ் விமர்சனம் – சிறந்த கதை, சிக்கலான சஸ்பென்ஸ்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது “Suzhal:The Vortex 2”. இந்த சீசனில் மீண்டும் மர்மமான கொலை வழக்கை விசாரிக்கிறார் சக்கரை.

by Shanmuga Lakshmi

இந்த வாரம் தமிழில் வெளியாகும் ஒரே ஒரு வெப் தொடர் ‘Suzhal: The Vortex 2’. அசைக்க முடியாத கூட்டணியான இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘Suzhal: The Vortex’ என்ற தமிழ் வெப் தொடர் யாரும் எதிர்பாராத மிக சிறந்த வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் வெளியாகும் என்று அறிவித்த நாள் முதல் அதன் வெளியீட்டு நாள் வரை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர், இதற்கு முற்றுப்புள்ளி இன்று வைக்கப்பட்டது. அமேசான் ப்ரைமில் 8 எபிசொட்டுடன் பிப்ரவரி 28, 2025 அதாவது இன்று வெளியானது.

‘Suzhal: The Vortex 2’ : கதைக்களம் 

ஏற்கனவே, ட்ரைலரில் காண்பிக்கப்பட்டது போல் சென்ற சீசனில் நந்தினி செய்த கொலை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அவளுக்கு ஆதரவாக மிகச் சிறந்த  கிரிமினல் வழக்கறிஞர் ஆன செல்லப்பா வாதாடுகிறார். அவரின் ஆற்றல் மிக்க வழக்காடும் திறமையால் நந்தினி விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவாள் என்று எதிர்பார்க்கும் தருணத்தில், மர்ம நபரால் செல்லப்பா கொலை செய்யப்படுகிறார். இனி நந்தினியின் நிலை என்ன ஆகும்? இந்த கொலை நடக்க காரணம் யார்? என்ற கோணத்தில், இந்த சீசன் முழுவதும் பயணமாகிறது.

‘Suzhal: The Vortex 2’: முழுமையான விமர்சனம் 

கன்னியாகுமரி மாவட்டம், காளிபட்டணம் கிராமத்தில் தொடங்கும் இந்த கதை நந்தினி கொலை வழக்கு, செல்லப்பாவின் திடீர் மரணம், கொலையா தற்கொலையா என்ற குழப்பத்தில் பயணிக்கும் விசாரணை, இறந்து போன செல்லப்பா குறித்த யாரும் அறியாத ரகசியம், மனித கடத்தல், அஷ்ட காளி பூஜையுடன் அறிமுகம் ஆகும் புது கதாபாத்திரங்கள் என இந்த வெப் தொடரில் ஏராளமான புது உபக் கதைக்களத்துடன், முதன்மை கதை சுவாரஸ்யத்துடன் பயணிக்கிறது.

சென்ற சீசன் கொடுத்த த்ரில்லிங்கான நிமிடங்கள் இந்த தொடரில் பெருவாரியாக இடம் பெற்றுள்ளது, அது கதைக்கு ஊக்கத்தையும் தருகிறது என்றே கூறலாம். சக்கரை கதாபாத்திரத்தில் நமது மனதில் நீங்கா இடம் பெற்ற கதிர், இந்த சீசனிலும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி, வெப் தொடர் நாம் கண்டு களித்த பிறகு மனதில் நிற்கும் ஒரு பாத்திரமாக திகழ்கிறார். மேலும், ஆழமான எழுத்தால் சிறந்து விளங்கிய மற்ற பாத்திரங்கள் என்று நோக்கினால், செல்லப்பா, நாகம்மா, நந்தினி, மூர்த்தி, முத்து, மற்றும் முப்பி ஆகியோர். அனைத்து கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களின் உணர்வுகளை வலுவூட்டும் வகையில் அமைந்தது சாம் CS-ன் பின்னணி இசை மற்றும் ஆங்காங்கே வரும் பாடல்கள்.   

கண்களை கவரும் வண்ணம், பல இடங்களில் குறியீடு வைக்கப்பட்டு காட்சி அமைக்கப்பட்டது, ‘Suzhal: The Vortex 2’-வின் சிறப்பு. ஒரு கொலையில் தொடங்கும் இந்த கதை மிகப்பெரிய அமைப்பை நோக்கி பயணிக்கும் பொழுது இது வெப் தொடர் என்ற உணர்வையும் தாண்டி திரைப்படம் போல் காட்சியளிக்கிறது. 

இறுக்கமாக செல்லும் தொடருக்கு இடையில், சக்கரை நந்தினியிடம் அவளுக்கு பிடித்த இனிப்பு வழங்கும் பொழுது  “நீ சொன்னத செய்றதுக்கு கொடுக்குற லஞ்சமா?” என நந்தினி புன்னகையுடன் கூறுகையில் மெல்லிய பூங்காற்று இதமாக வருடி செல்வது போல் தோன்றியது. மேலும், மனித வாழ்க்கையில் இருக்கும் நிறை குறை, தான் என்ற கர்வத்தை இறக்கி வைக்கும் தருணம், தவறு செய்வது இயல்பு அதையும் தாண்டி நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிகவும் முக்கியம், ஒரு அம்மா, அக்கா, தோழி என பல்வேறு பரிணாமத்தில் தனக்கவர்களுக்காக நியாயத்தை நிலைநாட்ட செய்யும் அசாதாரணமான தருணங்கள், பார்ப்பவர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.  

‘Suzhal: The Vortex 2’: குறைகள் 

“குழந்தை வன்முறை” என்பது முக்கிய பிரச்சனை ஆனால், பல தருணங்களில் காட்சி படுத்திய முறை யூகிக்கும் வகையில், நாம் பார்த்து பழகிய பாணியில் இருந்ததால் கதைக்கு சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. சென்ற சீசன் ஒரே குறிக்கோளை நோக்கி சென்ற காரணத்தால் விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்து காணப்பட்டது. ஆனால், இரண்டாவது சீசன் எபிசொட் 1 கடந்த பிறகு பல கோணங்களில் பயணிப்பதால் கதையில் எதிர்பார்த்த விறுவிறுப்பு குறைவாகவே இருக்கிறது. சிறையில் இருக்கும் கைதி மிக எளிதாக வெளியே வருவதும் இரவில் தனது கூட்டாளிகளுடன் பேசுவது போன்ற காட்சி சாத்தியமில்லாத ஒன்று. இது போன்ற சிறு சிறு காட்சி பிழைகள், மிகப்பெரிய கதைகளுக்கு மத்தியில் மறைந்தாலும், சிறப்பாக செல்லும் திரைக்கதையை செயலிழக்க செய்கிறது.

Suzhal: The Vortex 2 – பார்க்கலாமா? வேண்டாமா?

இன்று வெளியான தமிழ் வெப் தொடர் ‘Suzhal: The Vortex 2’, நல்ல திருப்பங்களுடன், பல விதமான உணர்ச்சிகளுடன் மக்களை மகிழ்விக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய வெப் தொடர் இது என்று கூறலாம். 

நடிகர் Vimal நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.