கோடைவிடுமுறையில் இருக்கும் சிறுவர்களை பயமுறுத்தவும், குடும்பத்தோடு சேர்ந்து சிரிக்கவைக்கவும் Aranmanai 4 movie review -தாயாக Tamannaah… பேயாக யாரு? படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.
வீட்டைவிட்டு ஓடிச்சென்று காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை தமன்னா தற்கொலை செய்து இறந்துவிட்டதாகவும், அவரது கணவன் சந்தோஷும் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் அண்ணன் சுந்தர்.சிக்கு தகவல் வருகிறது. வழக்கறிஞரான சுந்தர்.சி தங்கை தமன்னா வீட்டுக்குள் போய் தங்கையின் மகளை பேயிடம் இருந்து காப்பாற்றினாரா, வீட்டுக்குள் என்ன மர்மம் ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்தாரா என்பதே அரண்மனை-4 படத்தின் கதை. கூடவே பேய்கள் தண்ணீர்மூலம் பரவிவரும் என்கிற ‘BAK’ எனும் புது கான்செப்ட்டையும் சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி.

கவர்ச்சியைக் குறைத்து நடிப்பில் கவனம் செலுத்தவைத்து தமன்னாவை தாயாக உருமாற்றியிருக்கிறார் சுந்தர்.சி. சிறப்பாக நடித்திருக்கிறார் தமன்னா. ராஷி கண்ணா கவர்ச்சியில் கொஞ்சம் படத்தை கலர்ஃபுல்லாக்கியிருக்கிறார்.
காமெடிக்கு பஞ்சமே இல்லாத அளவுக்கு யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், லொள்ளு சபா சேசு, டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் எனப்பலர் இருக்கிறார்கள். ஆனால் காமெடியில் கலக்கியது என்னவோ சமீபத்தில் மறைந்த சேசுதான். சேசு – சரளா காமெடிகள் சிரிக்கவைக்கின்றன. கே.ஜி.எஃப் படத்தில் கருடா ராம் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டிய ராமச்சந்திர ராஜு அரண்மனை -4ல் சாமியாராக மிரளவைத்திருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதியின் படத்துக்கு பெரியபலம். ”கொல கொலயா முந்திரிக்கா”, ”அச்சச்சோ” பாடல்கள் ஆட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையிலும் சிறப்பு செய்திருக்கிறார் ஆதி. ஒளிப்பதிவில் கிச்சாவும் பயமுறத்தியிருக்கிறார். க்ளமேக்ஸில் குஷ்புவையும், சிம்ரனையும் ஆடவைத்து 90-ஸ் ரசிகர்களையும் படத்துக்குள் இழுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.
கலகலப்பாக இருந்தாலும் கலர்ஃபுல்லாக இருந்தாலும் அரண்மனை 4 பெரிய கொண்டாட்டமாக இல்லை!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]