பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் முன்னணி இயக்குநராக வளம் வந்தாலும் ராம் சரண், SJ சூர்யா, சமுத்திரக்கனி, கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ‘Game Changer’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தன்னுடைய வழக்கமான நடையில் அரசியல் சம்மந்தப்பட்ட கமர்ஷியல் படத்தை இயக்கியுள்ளார். பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தின் கதைக்களம், விமர்சனம் பின்வருகிறது.
Game Changer திரைக்கதை
The Rampage is unstoppable..😎💥#GameChanger pic.twitter.com/1BK5egRwb3
— Game Changer (@GameChangerOffl) January 10, 2025
தத்தெடுக்கப்பட்ட பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக வளரும் ஒரு கல்லூரி மாணவனாக, துள்ளலாகக் கதாநாயகியைக் காதலிக்கும் ராம் நந்தன், அவரது கோபத்தைக் குறைக்க முடியாமல் பல இடங்களில் சண்டை வளர்க்க, அதைத் தடுக்க கதாநாயகி அவரை பொறுப்பான IAS அதிகாரியாகச் சொல்கிறார். இதைத் தனது வாழ்க்கை லட்சியமாக மாற்றி முதலில் IPS அதிகாரியாக இருந்து பின்னர் IAS அதிகாரியாக உயர்கிறார். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான மோபிதேவி தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்வதைத் தடுக்கும் IAS அதிகரிக்கும் அமைச்சருக்கும் தொடங்கும் மனக்கசப்பு வளர்ந்து இருவரும் எதிர்பார்க்காத அளவிற்கு வளர்கிறது. இதில் உண்மையான ராம் நந்தனின் பெற்றோர் யார்? அவர்களின் பின்கதைக்கும் தற்போதைய அரசியல் கட்சிக்குமான தொடர்பு எனக் கதைக்களம் அமைந்துள்ளது.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
Game Changer படத்தின் முக்கிய பாத்திரங்களாகத் தனித்து நின்று அசத்தியிருப்பவர்கள் நாயகன் ராம் சரண் மற்றும் கதையின் வில்லன் SJ சூர்யா இருவரும் தான். கதாநாயகன் ராம் சரண் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களைச் சிறப்பாக நடித்துள்ளார். IAS அதிகாரி ராம் நந்தன் பாத்திரத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சீற்றமும் காதல் காட்சிகளில் துள்ளலான இளைஞனாகவும் நடித்துள்ளவர் அதற்கு மாறாக முதிர்ச்சியான நேர்த்தியான கடந்த கால பாத்திரத்திலும் நனிநன்றாக நடித்துள்ளார்.
இப்போது தென்னிந்திய சினிமாவின் அதிகம் பார்க்கப்படும் நடிகரான SJ சூர்யா, அமைச்சர் மோபிதேவி என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் உச்சத்திற்குச் சென்று அங்கங்கே நகைச்சுவையும் சேர்த்து மிக அருமையாக நடித்துள்ளார். இந்த இருவரின் நடிப்பில் படத்தின் பல காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது.
படத்தின் பலம்
Game Changer படத்தின் நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாத்திரங்களை எந்த குறையும் இல்லாமல் நடித்திருப்பதும், கமர்ஷியல் மாஸ் படத்துக்கே உரித்தான வசனங்களுடன் பல இடங்களில் அரசியல் ரீதியான வசனங்கள் கைதட்டல்களைக் குவித்தது.
ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் நுட்பமான காட்சியமைப்பும் இயக்குநர் சங்கரின் வழக்கமான இதுவரை காணாத பிரமாண்டமான பாடல் காட்சிகள் எனப் படம் முழுவதும் பல வகையான காட்சித் தொகுப்புகள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
நடிகர் ஜெயராமின் டைமிங் நகைச்சுவை, நடிகர் சமுத்திரக்கனியின் எளிமையான நடிப்பும், படத்தின் முக்கியமான தருணங்களில் எதிர்பார்க்காத சின்ன நகைச்சுவையோ ஒரு புது திருப்பத்தையோ ஏற்படுத்தியது.
இப்படத்திற்குப் பின்னணி இசை பெரும் பலமாக அமைந்துள்ளது இரண்டாம் பாதியில் நடக்கும் பல திருப்பங்களைச் சற்றே சுவாரஸ்யமாகியுள்ளது.
படத்தின் பலவீனம்
அரசியலில் நடக்கும் ஊழல், அரசியல்வாதிகள் செய்யும் சட்டவிரோதமான செயல்களைத் தடுக்கும் கதாநாயகன் என்ற கதை ரசிகர்களுக்குப் புதிதல்ல. இதே கதையை இயக்குநர் சங்கர் அவரின் படங்களில் வழக்கமாக காட்டியுள்ள நிலையில் 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான Game Changer படத்திலும் பயன்படுத்தியுள்ளது அரைத்த மாவை மீண்டும் அரைத்திருப்பதாக உள்ளது.
Everyone's favorite, #NaanaaHyraanaa | #Lyraanaa | #JaanaHairaanSa from #GameChanger
— Game Changer (@GameChangerOffl) January 9, 2025
has been edited out due to technical challenges encountered during the processing of infrared images in the initial prints. Rest assured, we are diligently working towards adding the song back… pic.twitter.com/N1mQO2GAG6
நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் மேலோட்டமாக ஒரு ஆழமான பத்திரமாகத் தெரிந்தாலும் அவரின் பங்கு படத்தில் உணர்ச்சிகரமான காட்சி ரசிகர்களுக்குக் கடத்தும் பத்திரமாக மட்டுமே பயன்படுத்தப்பட, அதிலும் இரண்டாம் பாதியில் முக்கியமான இடங்களில் ஒன்று சேராமல் இருந்தது.
முதல் பாதியில் வரும் கல்லூரி காட்சிகளும் இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்கள் சில கதையின் நகர்வுக்குக் காரணமாக இல்லாமல் நேரத்தை நகர்த்த மட்டுமே சேர்த்திருப்பது ரசிகர்களை தளர்வுடைய செய்கிறது.
மொத்தத்தில் Game Changer படம் இயக்குநர் சங்கருக்கு ஒரு சிறிய முன்னேற்றமாக அமைந்து, கமர்ஷியல் கதையை எந்தவித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கும் வகையில் இந்த பொங்கல் வாரம் வெளியாகியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com