நாம் 90களில் பார்த்த ஜென்டில்மேன் மற்றும் சிட்டிசன் போன்ற படங்களின் கதைக்களம் இன்று கிளாசிக் என்று புகழப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த மாதிரியான படங்களின் இயக்கம் குறைந்திருந்த நிலையில், இப்பொது விஜய் ஆண்டனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹிட்லர்’ படம் சமூக மாற்றத்துக்காக போராடும் கதையை பேசுகிறது.
சென்னைக்கு வேலை தேடி நண்பனுடன் தங்கி பல இடங்களுக்கு அலையும் கதாநாயகன் விஜய் ஆண்டனி, ஒரு நாள் ரயிலில் பயணிக்க, அன்று பல கோடி ரூபாய் பணம் திருட்டு போகிறது. இதை தொடர்ந்து நகரத்தில் பல இடங்களில் இதுபோன்ற திருட்டு நடக்கிறது. இதற்கு பின்னணியில் நடப்பது என்ன? யார் இந்த கோடிக்கணக்கான பணத்தை திருடுகிறார்கள் என்பது மிதி கதை.
ஹிட்லர் படத்தின் திரைக்கதை
வழக்கமான கமர்ஷியல் கதைக்களத்தில், ஊருக்காக குரல் கொடுக்கும் போராளி, பணக்கார அரசியல்வாதிகளை எதிர்த்து மக்களுக்கு நன்மை செய்யும் 90 களின் கதையில், காதல், ஆக்ஷன், ஊழல் ஆகியவற்றை பேசுகிறார் இயக்குனர் தனா.
விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ள திரைக்கதையில், அங்கங்கே உள்ள காதல் காட்சிகளும், பணத்தை திருடியவர்களை கண்டிபிடிக்க ஒரு திறமையான போலீஸ் அதிகாரி, சண்டை காட்சிகள் என படத்தில் எந்த இடத்திலும் தளர்வில்லாமல் எடுத்துள்ளனர்.

வருகிற தேர்தலில் வெற்றிபெற்றால் நிச்சயமாக முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நிலையில், அதற்காக தன்னுடைய தொகுதியில் உள்ள மக்களுக்கு பணத்தை வாரி இறைக்க முடிவெடுக்கும் அமைச்சர் பாத்திரத்தில் சரண்ராஜ் நடித்துள்ளார். இவரின் பணம் தான் கொள்ளையடிக்கப்படுகிறது.
இந்த பணத்தையும் அதை திருடும் நபரையும் காவல் துறைக்கு தெரியாமல் கண்டுபிடிக்க அவர் அளித்துள்ள அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் வருகிறார். அவரும் பல வழிகளில் திருடனை தேடி, அலைந்து ஒரு கட்டத்தில் கதாநாயகன் விஜய் ஆண்டனி தான் என சுற்றிவளைக்கிறார்.
இந்த ஊழல் பணத்தை அவர் என் திருடினார், அவருக்குள் புதைந்துள்ள காரணம் என்ன, உண்மை தெரியவந்ததும் நடக்கும் சச்சரவு என்ன என பல கேள்விகளுக்கு வெறும் 2 மணி நேரத்தில் கூறி விறுவிறுப்பான படத்தை உருவாக்கியுள்ளனர்.
விஜய் ஆண்டனி படத்தை சத்தம் இல்லாமல் இயக்கும் ‘அருவி’ அருண் பிரபு!
ஹிட்லர் படத்தின் கதாபாத்திரங்கள்
விஜய் ஆண்டனி இதுவரை உணர்வுபூர்வமான, திரில்லர் கதைகளில் நடித்தவர் என்றாலும் இந்த முறை சமூகத்தில் நடக்கும் ஊழலையும் அநியாயத்தையும் தட்டி கேட்கும் இளைஞராக, ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். முக்கியமாக ரயிலை நடக்கும் சண்டை காட்சியிலும், காதல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

கவுதம் வாசுதேவ் மேனன் மற்ற படங்களை போல இந்த படத்திலும் ஒரு தைரியமான காவல் அதிகாரியாக மிக அருமையாக நடித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் ஹீரோ என்றே அவரை குறிப்பிடலாம், அந்த அளவிற்கு அவரின் நடிப்பும் பாத்திரமும் பொருந்தியுள்ளது.
நடிகை ரியா சுமன் அழகாக காதல் காட்சிகளில் வந்து செல்கிறார். ஒரு புதுமுகமாக இருந்தாலும் படத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஊழல் செய்து முதலமைச்சர் பதவியை பெற நினைக்கும் அமைச்சர் பாத்திரத்தில் நடிகர் சரண்ராஜ் நடித்துள்ளார். மற்ற தமிழ் படங்களை போலவே இந்த படத்திலும் ஒரு வில்லத்தனம் செய்யும் அமைச்சராக சிறப்பாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனராக சினிமாவில் தன்னை நிரூபித்த Vijay Antony
ஆடுகளம் நரேஷ் மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் தங்களின் கதாபாத்திரம் என்ன என்று புரிந்துகொண்ட அதற்கு ஏற்றமாதிரியான நடிப்பை ‘ஹிட்லர்’ படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
‘ஹிட்லர்’ படத்தின் நிறை
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே தங்களின் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். எந்த இடத்திலும் வித்தியாசமாக, கதையுடன் ஒன்றாமல் இல்லாமல், படம் முழுவதும் பாராட்டத்தக்க நடிப்பை காட்டியுள்ளனர்.
படத்தின் நேரத்திற்கும், திரைக்கதையின் வேகமும் படத்துக்கு பலம். 2 மணி நேரம் ஒரு சுறுசுறுப்பான கதையை திரைக்கதை மூலம் தெரிந்த கதையை ஒரு முறை பற்கும் வகையில் எடுத்துள்ளார்கள்.
படத்தின் இசை விவேக் மேர்வின் அமைத்துள்ளார். படத்தின் வேகத்துக்கு ஏற்ப அமைந்த பின்னணி இசை ‘ஹிட்லர்’ படத்துடன் பயணிக்க வைக்கிறது. பாடல்களை விட பின்னணி இசை பார்வையாளர்களை கதையுடன் கோர்த்து சென்றது.
ஹிட்லர் படத்தின் குறை

இந்த மாதிரியான படத்தின் கதைகளை ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ மற்றும் அஜித் நடித்த ‘சிட்டிசன்’ ஆகிய படங்களிலும் பல கேப்டன் விஜயகாந்த் படங்களிலும் பார்த்த ஞாபகம் ‘ஹிட்லர்’ படத்தை பார்க்கும்போது அங்கங்கே தோன்றுகிறது.
சில இடங்களில் லாஜிக் இல்லாமல் கதையை நகர்த்தி செல்ல காட்சிகளை சேர்ந்திருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு கமர்ஷியல் படம் பார்க்க நினைப்பவர்கள் இப்படத்தை விரும்புவார்கள்.
விஜய் ஆண்டனி பல படங்களில் வேலை செய்து, வரிசையாக படங்களை வெளியிட்டு பெரிதும் மக்களுக்கு சென்றடைய வேண்டிய கருத்துள்ள படமோ, அல்லது அவரின் திரை பயணத்தின் ஆரம்பத்தில் ‘சலீம்’ போன்ற கதைகளை சீண்டாமல் கமர்ஷியல் ரீதியாக ஒரு entertainment கொடுக்கும் எண்ணத்தில் இருப்பது தெரிகிறது.
ஹிட்லர் என்ற பெயரிட்டு ஹீரோக்கான முத்திரைகளை படம் முழுவதும் சுட்டி காட்டி ஒரு entertainment ஆன ஆக்ஷன் படமாக, வார இறுதியில் பார்க்கக்கூடிய ஆவெரேஜ் படமாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]