Home Movie Reviews Movie review- சந்தானம் நடித்துள்ள இங்க நான்தான் கிங்கு திரைவிமர்ச்னம்!

Movie review- சந்தானம் நடித்துள்ள இங்க நான்தான் கிங்கு திரைவிமர்ச்னம்!

by Santhiya Lakshmi

Tamil movie Review: ‘’கல்யாணம் ஆகிட்டா போதும் லைஃப் செட்டில்டுடா’’ என ஒரு பெரிய பணக்காரப்பெண்ணை பிடிப்பதற்காகவே பல லட்சம் கடன்பட்டு, கடைசியில் அவனைவிட பல கோடி கடன் இருக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் கட்டும் ஒருவனின் கதையே ‘இங்க நான்தான் கிங்கு’!

WhatsApp Image 2024 05 17 at 12.05.29 PM 2

கல்யாணத்துக்காக காத்திருக்கும் வெற்றிவேலாக சந்தானம். சொந்த வீடு இருந்தால்தான் பெண் தருவார்கள் என்பதால் லோன் வாங்கி வீடுவாங்கிவிடுகிறார். அவர் ஆசைப்பட்டதுபோலவே பெரிய ஜமீனின் வாரிசு தேன்மொழி மனைவியாக அமைகிறாள். ஆனால், கல்யாணம் முடிந்தப்பிறகுதான் தெரிகிறது ஜமீனுக்கு பல கோடி கடன் இருப்பதும், கல்யாணம் முடிந்ததும் ஜமீனை விற்று அவர் கடன் செட்டில் பண்ண வேண்டியிருப்பதும். பணமும் இல்லை ஒன்றும் இல்லை என நொந்துப்போகும் வெற்றிவேலுக்குத் துணையாக மனைவியோடு சேர்த்து அவளது, அப்பாவும், தம்பியும் எக்ஸ்ட்ரா பேகேஜாக கூடவே வருகிறார்கள். 

மனைவி, மாமனார், மச்சான் என ஒரு பேக்கேஜாக சந்தானம் சென்னை வந்திறங்க, சென்னையில் தீவிரவாதிகள் பெரிய அட்டாக்குக்கு திட்டமிடுகிறார்கள். இதற்கிடையே சந்தானத்துக்கு 50 லட்சம் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பும் வருகிறது. சந்தானம் 50 லட்சத்தை வென்றாரா, தீவிரவாதிகளின் சதியை முறியடித்தாரா என்பதே மீதிக்கதை!

லாஜிக்கெல்லாம் வேண்டாம், காமெடி மட்டும் போதும் என்றால் ‘இங்கநான் தான் கிங்கு‘ படத்தை தாரளமாக ரசிக்கலாம். சந்தானத்தின் ஒன்லைனர்கள் வழக்கம்போல சிரிக்கவைக்கிறன. அதில் குறையொன்றும் இல்லை. ஆனால், குடும்ப சென்ட்டிமெண்ட் காட்சிகள் மட்டும் இன்னும் சந்தானத்துக்கு நடிக்கவரவில்லை என்பதை காட்டிக்கொடுத்துவிடுகின்றன.

PT SIR Movie review

படத்துக்கு பெரிய பலம் தம்பி ராமையா. அவருடைய ஓவர் ஆக்ட்டிங்கால் குலுங்க குலுங்க சிரிக்கவைக்கிறார். புதிய ஹீரோயின் பிரயாலாயா சிரிக்கவைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. பாலசரவணன் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிக்கவைக்கிறது. முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா எனப்படத்தில் பலத்தில் பலரும் காமெடிக்கெனவே ஸ்பெஷல் டியூட்டியில் இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பேர் இருந்தும் நல்ல காமெடிக்குப் படத்தில் பஞ்சம்தான்.

சில சீன்கள் சிரிக்கவைத்தால், சில சீன்கள் ‘’டேய் யப்பா… இதெல்லாம் ஒரு காமெடியா’’ என சலிக்கவைக்கிறது. அடுத்து ஒரு நல்ல காமெடி சீன் வந்து படத்தைக்காப்பாற்றுகிறது. அடுத்த சீன் சொதப்புகிறது என ஒரு முழு நீள காமெடி படமாக ‘இங்க நான்தான் கிங்கு’ இல்லை. அடுத்து இதான் நடக்கப்போகுது என யூகேஜி பையனே யூகிக்கும் அளவுக்குத்தான் ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன.இமானின் பாடல்கள் தியேட்டரில் ஸ்கிப் பட்டன் எங்கப்பா எனக்கேட்க வைக்கிறது. 

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மூளையை எல்லாம் கழட்டிவைத்துவிட்டு, லாஜிக்கும் வேண்டாம், மேஜிக்கும் வேண்டாம்… கொஞ்சூண்டு காமெடி மட்டும்போதும் என்றால் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தைப்பார்க்கலாம்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.