மூன்றாம் உலகப் போர் உருவானால், அதன் நோக்கம் என்ன, அதன் விளைவுகளை அரசியல் ரீதியாக இயக்கியுள்ள படம் தான் ‘கடைசி உலகப் போர்’. 2029ம் ஆண்டில் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரம் மற்றும் அதை தற்போதைய அரசியலுடன் ஒப்பிட்டு ‘King Maker’ நடராஜன் உடைய பாத்திரத்தின் வழியாக கதை நகர்கிறது.

தொடக்கத்தில் “இது என்னுடைய கதை, ஆனால் இதுல நான் Hero இல்லை” என நடராஜன் கதையை சொல்ல ஆரம்பித்து, அவர் ஒரு அரசியல் மேதை என்ற போக்கில் அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சராணா நாசர் உடைய மச்சான் பாத்திரத்தில் அவருடைய முன்னோட்டம் அமைந்தது.
பின்னர் ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகமாகி அதோடு உலகத்தில் ஐநா சாமையில் இருந்து சீனா, ரஷ்யா போன்ற 72 நாடுகள் விலகியதாக செய்தி பரவுகிறது. இந்த வெளியேறிய நாடுகள் சேர்ந்து ‘The Republic’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். அந்த அமைப்பு மீதமுள்ள நாடுகள் மீது அவர்களுடைய ஆளுமையை பரப்ப தொடங்குகிறது.
‘கடைசி உலகப் போர்’ படத்தின் திரைக்கதை
அரசியல் என்ற விளையாட்டில் அரசியல்வாதிகளை ஆட்டி படைக்கும் பின்னணியிலுள்ள பல உண்மைகளை விளக்கும் பாத்திரத்தில் ‘நட்டி’ நடராஜன் இந்த படத்துக்கு தேவையான கதைக்களத்தை பதிவு செய்கிறார். தன்னுடைய வாரிசு ஒன்றை பதவியில் எர்த்தி, அதற்காக மக்களை ஏமாற்றியும், பதவி மோகத்தை நடிகை அனகாவின் பாத்திரத்துக்கு திணிக்க நினைப்பது என அரசியல் ரீதியான கதை ஒரு பக்கம்.
கதாநாயகன் ஆதி ‘தமிழரசன்’ பாத்திரம் கல்வியின் உண்மை நிலை, அன்றாடம் மக்களின் நிலைமைகளை எடுத்துரைக்க தொடக்கி, அவர் உண்மையில் யார் என்று முதல் பாதியில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. முதலமைச்சரின் மகளை நல்லது செய்ய தூண்டும் காரணியாக அவர் வருகிறார்.
படத்தின் பலம்
இயக்குனராக Hiphop Tamizha Adhi ஒரு வித்தியாசமான கதையை எழுதி அதை தன்னுடைய தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுத்திருப்பதும், பார்ப்பதற்கு நம்பக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஒரு போர் நடக்கும் பகுதியும், அதில் ஏற்படும் ராணுவ ரீதியான மாற்றங்கள் என இப்படத்தை நம்பகத்தன்மையுடன் set போட்டு எடுத்துள்ளார்.
இயக்குனராக மட்டுமல்லாமல் இப்படத்துக்கு இசையும் அமைத்துள்ளார் ஆதி. கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் வரும் ‘Boombastic’ பாடலும், பிரமாண்டமான Bomb Blast இவரின் பின்னணி இசை வலு சேர்க்கிறது.

சக்திவாய்ந்த அணுகுண்டுகளை, போர் கருவிகளும், வெடித்து சிதறும் கட்டிடங்கள் என படத்தின் VFX வேலைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
‘நட்டி’ நடராஜன், ஹரிஷ் உத்தமன், அழகம் பெருமாள், Chu Khoy Sheng ஆகியோரின் தேர்வும், அவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள பாத்திரங்களும் கதையின் போக்கை அங்கங்கே நேர்த்தியாக திருப்பி, திரைக்கதையை நகர்த்துகிறது.
படத்தின் பலவீனம்
‘கடைசி உலகப் போர்‘ என்ற தலைப்புக்கு தகுந்தவாறு இந்த படம் ஒரு Survival படம் என்ற எண்ணத்தை ட்ரைலர் வழியாக பலர் நினைத்தாலும், இப்படத்தில் தொடர்ந்து பேசப்படும் அரசியல் நுணுக்கங்களும், இந்த அரசியல் மேதைகளினால் நினைத்தால் நடக்கும் சமூக மாற்றங்களும் என கதை ஒரே திசையில் சுற்றிவருவது இரண்டாம் பத்தியில் சோர்வை ஏற்படுத்துகிறது.

‘கீர்த்தனா’ என்ற பாத்திரத்தில் நடிகை அனகா உடைய பங்கு இப்படத்தில் நடிகர் ஆதியின் பாத்திரத்தையும் நட்டி நடராஜனின் பாத்திரத்தையும் இணைக்கும் ஒரு பாத்திரமாக மட்டுமே உள்ளது. ஆதியை சந்தித்ததும் காதலில் விழுவதும், அரசியியலில் நுழைந்து தன்னை சுற்றி நடப்பதை புரிந்துகொள்ள முடியாத குழப்பமான பாத்திரமாக இது உள்ளது.
முதல் பாதியில் நிரம்பியுள்ள பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நேரமும், இரண்டாம் பத்தியில் அதே பாத்திரங்களை பயன்படுத்தியுள்ள விதமும் ஏற்புடையதாக பல இடங்களில் இல்லை. சில பாத்திரங்களும் கதையின் போக்கும் சேராமல் அமைவது பலவீனமாக அமைந்துள்ளது.
‘கடைசி உலகப் போர்’ கதாபாத்திரங்கள்
Hiphop Tamizha Adhi இந்த படத்தில் கதாநாயகனாக, இயக்குனராக, பாடலாசிரியராக என பல பொறுப்புகளை சுமந்து தன்னுடைய கதாபாத்திரத்தை தனித்துவப்படுத்த தவறியுளார். முதல் பாதியில் உள்ள ரத்தம் கசியும் அசத்தலான சண்டை கட்சியை தொடர்ந்து இரண்டாம் பாதியில் அதே போல் ஒரு சண்டை காட்சியில் தான் அவருக்கான முக்கியத்துவம் தெரிகிறது.
‘நட்டி’ நடராஜன் ஒரு King Maker என்ற ஒரு கச்சித்தமான பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆதியுடைய Screen time ஐ விடவும் இவரின் பாத்திரத்திற்கான பங்கு அதிகமாக அமைந்து, அதை அவர் நேர்த்தியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட ‘சதுரங்க வேட்டை’ படத்தின் பாத்திரத்தை போல புத்திசாலியான பாத்திரமாக அமைந்துள்ளது.

நடிகர் நாசர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த பாத்திரத்தை தன்னுடையதாக மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர். ஆனால் இந்த படத்தில் ஒரு நாட்டின் முதலமைச்சராக, தன்னுடைய மகளை அரசியல் வாரிசாக அமர்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் முதல் பாதியும், இரண்டாம் பத்தியில் போரின் அவளத்தால் மக்கள் படும் அவஸ்தைக்கு கருணை காட்டுவதாக இரண்டாம் பாதியிலும் இருந்தார்.
ஹரிஷ் உத்தமன், Major Prabjoth Singh என்ற தைரியமான ராணுவ அதிகாரியாக கதையின் முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் பங்கை தெளிவாக செய்துள்ளார்.
‘பிரகாஷ் அமுதவனான்’ கதாபாத்திரத்தில் நாடன் கலைஞர் கல்யாண், ‘பிரியங்கா பெரேரா’, ‘Bhai’ பாத்திரத்தில் நடிகர் இளங்கோ குமாரவேல், ‘தாஸ்’ பாத்திரத்தில் முனீஸ்காந்த என பல நல்ல நடிகர்கள் இப்படத்தின் திரைக்கதையில் பலமாக அமைந்துள்ளனர்.
‘கடைசி உலகப் போர்’ எதிர்காலத்தில் நமக்கு நடக்கக்கூடும் ஒரு அசம்பாவிதத்தை தவிர்க்க மனிதர்கள் எந்த வித பிரிவினையும் இல்லாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், பல இடங்களில் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]