நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோரின் பிரதான நடிப்பில் வெளியாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் இக்காலகட்டத்தின் காதலர்களின் எண்ணங்கள், திருமணம் குழந்தை பற்றிய அவர்களின் கருத்து என்பதை பற்றிய படம். காதல் கதைகளின் வரிசையில் ஒரு புதுமையான முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. வழக்கமான நடையில் இல்லாமல், காதலை வேறு புதிய கண்ணோட்டத்தில் காட்டியுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
காதலிக்க நேரமில்லை திரைக்கதை
பெங்களுருவில் வசித்துவரும் இளைஞர் சித்தார்த் தன்னுடைய காதலி நிச்சயதார்த்தத்தை பொது திருமணம் வேண்டாம் என விட்டு சென்ற விரக்தியில், தன்னுடைய நண்பரின் தூண்டுதலால் தன்னுடைய விந்தணுவை தானம் செய்கிறார். மறுபக்கம் நாயகி ஸ்ரேயா தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதை அறிந்து மனமுடைகிறார். தனக்காக ஒரு குடும்பம் வேண்டி ஆசையில் IVF வழியாக கருவுருகிறார். இப்படி மாறுபட்ட இருவர் இக்கட்டத்தில் சந்திக்க, இருவருக்கும் காதல் மலர அதில் நடக்கும் சிக்கல்கள் ஆகியவை தான் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கதை.
தனித்துவமான நடிகர்கள்
முன்னணி கதாபாத்திரங்களான ஸ்ரேயா மற்றும் சித்தார்த் இருவரின் உணர்வுகளை எளிதாக பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளனர் நடிகர்கள் நித்யா மேனன் மற்றும் ரவி மோகன். இருவரின் நடிப்பும் படத்தில் தனித்துவமான ஒன்றாகும்.
Finally ♥️ The most anticipated #KadhalikkaNeramillai Trailer is out now. Grand release on January 14th in theatres 🌟
— kiruthiga udhayanidh (@astrokiru) January 7, 2025
▶️ https://t.co/TG6bz8Lp7v
An @arrahman musical 🎶@actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @tseriessouth @MashookRahman @shobimaster… pic.twitter.com/ir2Q5u54up
நடிகர் வினை ராய் இப்படத்தின் ஓரின ஈர்ப்பு கொண்டவராக மிக இயல்பாக நடித்துள்ளார். இதுவரை தமிழ் திரைப்படங்களில் ஓரின ஈர்ப்பு கொண்ட நபர்களை கேலி கிண்டல் செய்து தான் பெரும்பாலான கதாபாத்திருங்கள் அமைந்திருப்பதும், இப்படத்தில் அதிலிருந்து மாறுபட்டு காட்டியுள்ளது பாராட்டத்தக்கது.
படத்தின் பலம்
திறமையான மற்றும் கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்தும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருப்பது இப்படத்தின் பெரிய பலம். குறிப்பாக குணச்சித்திர நடிகர்களாக வரும் நடிகர் லால், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர் வினய் ராய் ஆகியோர் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
Get ready to fall in love with #KadhalikkaNeramillai 💟
— kiruthiga udhayanidh (@astrokiru) December 17, 2024
Second single #LavenderNerame out tomorrow at 5 PM 🎧
Stay tuned for the magical melody!@actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @arrahman @tseriessouth @MashookRahman @AdithyarkM @shobimaster @iYogiBabu… pic.twitter.com/0qXK3dFxd4
அதிரடியான ஆக்ஷன் படங்களின் மத்தியில் எந்தவித அதிர்ச்சியான திருப்பங்கள் இல்லாமல் எளிமையான காதல் கதையை மையமாகக் கொண்டு, அதில் இன்றும் ஏற்றுக்கொள படாத பல விஷயங்களை சேர்த்துள்ளது பெரிய பலம். நடிகர் வினையின் பாத்திரம், கணவனில்லாத பெற்றோராக சோகத்துடன் தனக்கென எதையும் செய்யாமல் இருக்கும் பெண்ணாக இல்லாமல் மனதளவில் பலமான பெண்ணாக நாயகி ஸ்ரேயா இருப்பது படத்தின் மற்றொரு பலம்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் வழக்கம்போல் படத்திற்க்கு தேவையான, கதையோட்டத்தில் வழியாக பயணிக்கும் பாடல்களையும் பின்னணி இசையும் அமைத்துள்ளார்.
படத்தின் பலவீனம்
Gen Z என சொல்லக்கூடிய இன்றைய புதிய தலைமுறையினரின் கண்ணோட்டத்தில் காதல், திருமணம், குழந்தைப்பேறு ஆகியவையே முன்னணி நடிகர்களை வைத்து படமாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கதாக இருந்தாலும் அதில் உணர்ச்சிகரமாக பார்வையாளர்கள் திரையில் தோன்றும் பாத்திரங்களுடன் பயணிக்க முடியாமல் ஒரு உணர்ச்சிகர பிணைப்பு ஏற்பட தவறியுள்ளது.
கதையின் போக்கு என்ன? இந்த இரு கதாபாத்திரங்களும் எப்படி ஒன்று சேரப்போகிறார்கள் என்பதை ரசிகர்கள் கணிக்கும்படியான திரைக்கதை அமைந்திருப்பது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கதைக்களத்தை தளர்வடைய செய்துள்ளது. திரைக்கதையில் சிறு மாற்றங்கள் சேர்த்தால் பல நேரங்களில் கதாபாத்திரங்களுடன் ஒன்றி மக்கள் பயணிக்க முடிந்திருக்கும்.
‘காதலிக்க நேரமில்லை‘, இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மற்றொரு எளிமையான, நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள காதல் கதையாக தெரிந்தாலும், தனித்துவமான, வித்தியாசமான கதாபாத்திரங்களும் புதிய கதைக்களமும் ஆச்சரியமானதாக அமைந்தாலும், ஏற்கனவே பார்த்த திரைக்கதையாக அமைந்திருப்பது பின்னடைவு. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளுக்கு சென்று பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக ‘காதலிக்க நேரமில்லை’ அமையும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]