Home Movie Reviews சூர்யா நடிப்பில் ‘Kanguva’ எப்படி இருக்கிறது? – திரை விமர்சனம் 

சூர்யா நடிப்பில் ‘Kanguva’ எப்படி இருக்கிறது? – திரை விமர்சனம் 

இயக்குநர் சிறுத்தை சிவா தன்னுடைய இயல்பான கதைகளில் ஒன்றாக கங்குவா படத்தை இயக்க முயன்று, அதில் அதிரடியான சண்டைக் காட்சிகளையும், வியக்கவைக்கும் கடந்தகால கதைக்களத்தையும் உருவாக்கி, தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் அதே சமயம் கலங்கடிக்கும் உணர்ச்சிகளைத் திரைக்கதையில் சேர்க்க முயன்று அரைத்த மாவை மீண்டும் அரைத்திருப்பது இரண்டாம் பாதியை முற்றிலும் கணிக்க வைக்கிறது, 'கங்குவா' பல கோடி மதிப்பில் உருவான சற்றே தளர்வான கமர்ஷியல் படம்.

by Vinodhini Kumar

சூர்யா, பாபி தியோல், திஷா பாட்னி, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ள ‘Kanguva’ திரைப்படம் பல தடைகளைத் தாண்டி வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படம், கடந்த காலம் முதல் தொடரும் பந்தங்களையும், அதன் உணர்ச்சிகரமான உள்ளுணர்வையும் பேசும் ஒரு கமர்ஷியல் கலவையாக வெளியாகியுள்ளது. 

‘கங்குவா’ படத்தின் கதைக்களம் 

பல நூறு ஆண்டுகள் முன்னர், ஐந்து தீவுகளின் வரலாறு, அந்த தீவுகளின் தொழில், வாழ்வியல் ஆகியவற்றை விளக்கி 1070ல் வீராதிவீரனான ‘கங்குவா’, தன்னுடைய தீவினருக்காக எதையும் செய்யும் அந்த குடியின் இளவரசர் ஆவார். இவருக்கும் 2024ல் கோவாவில் வசிக்கும் Bounty Hunter, பிரான்சிஸ் என்பவருக்கும் என்ன தொடர்பு? இவர்களை இணைக்கும் கயிறு யார்? என்பது தான் இரண்டரை மணி நேரப்படம். 

‘கங்குவா’ திரைக்கதை 

Kanguva trailer relase date

நடிகர் சூர்யா ‘கங்குவா’ மற்றும் ‘பிரான்சிஸ்’ என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதும், அதில் அதிகம் எதிர்பார்த்த கடந்தகால ‘கங்குவா’ பாத்திரத்தை முதலில் காட்டாமல் கோவாவில் காவல் துறையினரால் பிடிக்கமுடியாத குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் Bounty Hunter பாத்திரத்தை முதலில் காண்பித்து, அதிலிருந்து ‘கங்குவா’ பாத்திரத்தைத் திரைக்குக் காட்டியது  கரதோஷத்தையும் விசில்களையும் பெறுகிறது. 

ஐந்தீவு பகுதியை விவரித்து, அதில் உள்ள ஐந்து தீவுகளின் தலைவர்களையும், அதற்கு முன்னரே அயல்நாட்டு எதிராளிகளையும் காட்டி, ‘கங்குவா என்ற பாத்திரத்தைத் திரையில் காட்டாமல் ரசிகர்களைக் காக்க வைத்து பின்னர் இந்த திரைப்படத்தின் கருக்கதையை ஒவ்வொன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். 

நிகழ்காலத்தில் நக்கலான, எதையும் பற்றி பெரிதும் கவலைப் படாமல், மற்றவர்களைக் கடுப்பாகி மகிழும் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா வித்தியாசம் காட்டியுள்ளார். மேலும் இவருடன் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் சேர்ந்து நகைச்சுவை செய்ய முயற்சித்துள்ளனர். 

கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை வேறுபாடுகளுடன் காட்டி, முதல் பாதியில் இரண்டு காலகட்டத்திலும் நடக்கும் விபரீதங்களை முடிச்சு போட்டு, அனைவரும் ஏற்கனவே கணித்து வாய்த்த உணர்ச்சிகளைப் பதியவைத்துள்ளார் இயக்குநர் சிவா. 

திரைக்கதையில் எதிர்பார்க்காத கதாபாத்திரங்கள் அனைவரும் 1070ல் காட்டப்படும் கதையில் தான், அதிலும் இரண்டாம் பாதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ள உணர்வுப்பூர்வமான காட்சிகள் அதிகமாக உள்ளது. இரண்டு ரத்த சொந்தமில்லாத உறவை மேம்படுத்திக் காட்டி, அதனின் நீட்சியாகப் பலநூறு வருடங்கள் கழித்தும் கதை தொடர்கிறது, 

கதாபாத்திரங்களும் நடிகர்களும் 

நடிகர் சூர்யா இரண்டு வெவேறு குணாதிசயங்களைக் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். படத்தைத் தூக்கி நிறுத்தும் தூணாக, அதிரடியான சண்டைக் காட்சிகளைப் போலவே உணர்வுகளை வெளிப்படுத்தும் உருக்கமான காட்சிகளையும் எளிதில் திரை வழியாகப் பார்ப்பவர்களுக்குக் கடத்துகிறார். 

Suriya in Kanguva

நடிகர் பாபி தியோல் ‘அரத்தி’ என்ற தீவின் தலைவராக, திரையில் தோன்றும் முதல் காட்சியிலிருந்து மக்களை ஈர்க்கிறார். பெரிதும் வசனங்கள் இல்லாமலேயே தன்னுடைய முகத்திலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

நடிகை திஷா பாட்னி முதல் பாதியில் கிளாமர் காட்டுவதற்கும், Yolo பாடலில் நடனமாடுவதற்கும் மட்டுமே வருகிறார். இவருக்கான பங்கு பெரிதாகக் கதையில் எழுதப்படவில்லை. யோகி பாபு மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி  ஆகியோரும் முதல் பாதியில் குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றி ஓரிரண்டு இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். 

நடிகர்கள் கருணாஸ், நட்டி நடராஜன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காத்திரங்களை, திரையில் தோன்றும் குறைவான நேரத்திலும் கச்சிதமாகச் செய்துள்ளனர்.  

Kanguva Pre-release Event
Kanguva Pre-release Event

Kanguva படத்தின் பலம் 

இயக்குநர் சிவா, ஆழமான புரிதலுடன், வியக்கவைக்கும் கடந்த கால கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் உருவாகியிருப்பது தெரிகிறது. 

படத்தின் பெரும்பாலான வியக்கவைக்கும் காட்சிகள் CGI மற்றும் VFX தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரைலரில் வந்த முதலை சண்டைக் காட்சிகள் அற்புதமான நம்பகத்தன்மையுடன் காட்டப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா இந்த படத்திற்காகக் கடுமையாக உழைத்திருப்பது வெளிப்படையாகத் திரையில் தெரிகிறது. உடலளவில் நடிகர் சூர்யாவின் உழைப்பு, சண்டைக் காட்சிகளை மேலும் நம்பும் படியாகவும் மேம்படுத்திக் காட்டுகிறது. 

படத்தின் பலவீனம் 

முதல் பாதியிலேயே பார்வையாளர்களுக்குத் தெரியவேண்டிய அணைத்து கதாபாத்திரங்களும், கதைக்களமும் தெரியப்படுத்தி, இரண்டாம் பாதியில் அனைத்தையும் எளிதில் கணிக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது பலவீனம். 

முதல் பாதி முதல் முன்வைத்த அதே உணர்ச்சிகளை இரண்டாம் பாதியிலும் காட்டி, ரசிகர்களை தளர்வடைய வைத்துள்ளனர். குறிப்பாக மீண்டும் மீண்டும் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தின் ஒற்றுமையை இணைத்துப் பதிவான காட்சியை மீண்டும் பதிவு படுத்துவது சோர்வாகத் தெரிகிறது. 

கங்குவாவாக நடிகர் சூர்யாவை முதலில் அறிமுகப்படுத்தும் காட்சியிலும், அவருக்கான சண்டைக் காட்சியிலும் அதிரடி காட்டியுள்ள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,  கிளைமாக்ஸ் காட்சியில் சொதப்பியுள்ளார். 

Studio Green Release issue

இறுதியில் இரண்டாம் அத்தியாயத்திற்கான விதையைச் சமீபத்தில் வெளியாகும் அணைத்து படங்களைப் போலவே ‘கங்குவா’ படத்திலும் காட்டிவிட்டு, முதல் பாதியில் ரஷ்ய ராணுவம் நடத்தும் பரிசோதனை பற்றி எந்தவித புரிதலையும் ஏற்படுத்தாமல் விட்டிருப்பது, அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறியுள்ளது. 

இயக்குநர் சிறுத்தை சிவா தன்னுடைய இயல்பான கதைகளில் ஒன்றாக கங்குவா படத்தை இயக்க முயன்று, அதில் அதிரடியான சண்டைக் காட்சிகளையும், வியக்கவைக்கும் கடந்தகால கதைக்களத்தையும் உருவாக்கி, தேர்ச்சி பெற்றுள்ளார்.  ஆனால் அதே சமயம் கலங்கடிக்கும் உணர்ச்சிகளைத் திரைக்கதையில் சேர்க்க முயன்று அரைத்த மாவை மீண்டும் அரைத்திருப்பது இரண்டாம் பாதியை முற்றிலும் கணிக்க வைக்கிறது, ‘கங்குவா’ பல கோடி மதிப்பில் உருவான சற்றே தளர்வான கமர்ஷியல் படம். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.