சினிமா ஸ்டாராகத்துடிக்கும் ஒரு சராசரி இளைஞனின் கனவு பலித்ததா, தொலைந்ததா என்பதே ‘Star’ படத்தின் ஒன்லைன்.
படத்தின் இயக்குநர் இளன். ஏற்கெனவே யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்து வெளியிட்ட ‘பியார் பிரேமா காதல்‘ படத்தின் இயக்குநர். இந்தப்படம் பெற்றுத்தந்த வெற்றியின் மூலம் கவினை ஹீரோவாக்கி, யுவனையே மீண்டும் இசையமைப்பாளராக்கி, தன் சொந்த அப்பாவான ஸ்டில்ஸ் பாண்டியனின் கதையையும், தன் கதையையுமே இணைத்துக் கோர்த்துப்படமாக்கியிருக்கிறார் இளன்.

அப்பா ஸ்டில்ஸ் பாண்டியனின் ஆசை மகன் கலையரசைனை சினிமா ஹீரோவாக்கவேண்டும் என்பது. இதற்காக சிறுவயதில் இருந்தே நாடகங்களில் நடிக்க, டான்ஸ் ஆட உற்சாகப்படுத்துகிறார். மகன் கலையரசனும் அப்பாவின் கனவை நிறைவேற்ற ஆர்வம் காட்டுகிறார். ஆனால், ஒரு விபத்து கலையரசனின் முகத்தையே சிதைக்கிறது. நடிகனுக்கு உடம்புதான் முதலீடு என கலையரசனை நிராகரிக்கிறது சினிமா உலகம். கலையரசனின் கலைந்து கனவு மீண்டும் கைகூடியதா என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்!
கவினின் ஒரு ரியல் இளைஞனை திரையில் பிரதிபலிப்பதால் நாமும் அவரோடு கனவு காண ஆரம்பிக்கிறோம். ஆனால், சில இடங்களில் நடிப்பில் தடுமாறுகிறார் கவின். அப்பாவாக நடித்திருக்கும் மலையாள நடிகர் லால் படத்தின் ஸ்டாராக நின்று அப்ளாஸ் அள்ளுகிறார். எதற்கு இரண்டு கதநாயகிகள் என்றே தெரியவில்லை. ஒரு கமர்ஷியல் படத்துக்கு இதெல்லாம் தேவை என்பதுபோல முதல் பாதிக்கு ப்ரீத்தியும், இரண்டாவது பாதிக்கு அதிதி போஹன்கரும் வந்துபோகிறார்கள்.
2000-களின் துவக்கதில் துரை இயக்கி அஜித் நடித்த ‘முகவரி’ படத்தை நினைவூட்டுகிறது ‘ஸ்டார்’. அங்கே சினிமா இசையமைப்பாளராகவேண்டும் எனப்போராடும் அஜித் கடைசியில் கனவு கைகூடாமல் சராசரி வேலைக்குப்போய் விடுவார். அதேப்போன்ற கதைக்களத்தில் ‘ஸ்டார்’ படமும் பயணிப்பதால் கொஞ்சம் அலுப்புத்தடுக்கிறது. இயக்குநர் இளனின் திரைக்கதையிலும் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாதது மைனஸ். எமோஷனை சரியாகப் பிடித்த இயக்குநர் அதற்குதகுந்தாற்போல் திரைக்கதையில் வேகம் கூட்டியிருந்தால் படம் பேசப்பட்டிருக்கும்.
Laapataa Ladies Tamil Review: தொலைந்து போனது பெண்களா, சமூகமா… Laapataa Ladies சொல்வது என்ன?!
யுவன் ஷங்கர் ராஜா தன் இசையால் கட்டிப்போடுகிறார். எழில் அரசுவின் ஒளிப்பதவில் எந்தக் குறையும் இல்லை.
‘ஸ்டார்’ கவினுக்கு மிகப்பெரிய மாஸ் ஹிட்டாக அமையும், சினிமாவில் 5 ஸ்டார் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ஸ்டார்தான் வாங்கியிருக்கிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]