புது இயக்குனர், தெரிந்த கதைக்களம், புதிய கதாபாத்திரங்களுடன் நாம் அனைவரும் அறிந்த ஒரு இயல்பான தினசரி வாழ்க்கையை ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவனின் கண்ணோட்டத்தில் நகைச்சுவையாகவும் உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார் யுடியூப் பிரபலமான ‘நக்கலைட்ஸ்’ இயக்குனர் ராஜேஸ்வர் காளிஸ்வாமி.
‘குடும்பஸ்தன்’ திரைக்கதை
கோயம்புத்தூரில் காதலர்கள் நவீன் மற்றும் வெண்ணிலா இருவரும் ஓற்றோரின் சம்பந்தம் கிடைக்காமல் நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துகொண்டு, திருமண வாழ்க்கையை தொடர்கிறார்கள். மாமனார் மாமியார் வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் ஒரு ஆண்டு ஆனபின்னரும் அவர்களின் திருமணத்தை பற்றிய குறைப்பேச்சு தொடர்கிறது. இதற்கிடையில் தன்னுடைய வேளையில் ஏற்படும் சிக்கலால் தன்மானத்தை காக்க செய்த செயலால் வேலை பேறிபோகிறது.
நடுத்தர குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக IAS கனவுடன் இருக்கும் மனைவியை, வயதான பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற வேலை இல்லாமல் அவர் திண்டாடும் வாழ்க்கையை படமாக்கியுள்ளனர். இதற்கிடையில் தருபமான உறவினர்களாகட்டும், இன்று பெரும்பாலான நடுத்தர மக்கள் கடந்து செல்லும் மாதாந்திர சிக்கல்களை நவீன் என்ற பாத்திரம் எப்படி கடக்கிறார், அவரின் குடும்பம், கனவுகள் ஆகியவற்றை எப்படி வழிநடத்துகிறார் என்பது தான் ‘குடும்பஸ்தன்’ படத்தின் கதை.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
நவீன் என்ற பாத்திரத்தில் நடிகர் மணிகண்டன் தன்னுடைய இயல்பான, பரிட்சயமான தோற்றத்துடன் நடித்துள்ளார். முதல் பாதியில் நகைச்சுவையும், இரண்டாம் பாதியில் உணர்ச்சிகரமான உருக்கமான கருத்துகளையும் மிக எளிதாக திறமையாக பார்வையாளர்களிடம் கடத்துகிறார்.
நடிகை சான்வி மேகனா வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தன்னுடைய காதல் கணவனுக்கு முழுமையான உறுதுணையாக, நேர்த்தியான கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
குரு சோமசுந்தரம், நடிகரும் இயக்குநருமான R சுந்தர்ராஜன், பிரபல மலையாள குணச்சித்திர நடிகை கனகா, நக்கலைட்ஸ் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபத்திரங்களை மிக அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக நகைச்சுவையான காட்சிகளில் செயற்கையாக இல்லாமல் எதர்ச்சியாக அமைந்துள்ளது.
படத்தின் பலம்
இயக்குனர் ராஜேஸ்வர் காளிஸ்வாமி மிக எளிமையான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் கத்பாத்திரங்களை சேர்த்து அகங்காரமான மாமன், நக்கலான தந்தை, பக்திமயமான தாய், புறம் பேசும் உறவினர்கள் என நகைச்சுவையான கதியாயாக உருவாக்கி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக ஒரு படத்தை எழுதியுள்ளது படத்தின் முக்கிய பலம்.
எளிமையான கொங்கு நடையுடன் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் நேர்த்தியான பாத்திரங்களை தங்களுடையதாக மாற்றியுள்ளனர். குறிப்பாக நடிகர் மணிகண்டன் முதல் முறையாக கோயம்புத்தூர் தொனியில் பேசியும் அதை உணர்ச்சிகரமான ஒன்றாகவும் மாற்றியுள்ளது சிறப்பு.
#Kudumbasthan from today ❤️
— Manikandan (@Manikabali87) January 24, 2025
Heartfelt thanks to entire team ❤️ pic.twitter.com/u25q64kMiq
படத்தின் இசை இளம் இசையமைப்பாளர் வைசாக் படமுழுக்க கதையுடன் தொடர்கிறது. முதல் பாதியில் ஆரம்பித்த சிரிப்பலை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை தொடர்வதும், முதல் பாதியில் நகைச்சுவைத் தன்மையுடன் காட்டப்பட்ட பாத்திரங்கள் இரண்டாம் பாதியில் அதோடு உணர்வுகளை உருக்கமாக காட்டியதும் பாராட்டத்தக்கது.
படத்தின் பலவீனம்
நடுத்தர குடும்பஸ்தர் ஒவ்வொரு மாதமும் தன்னுடைய குடும்பத்தை நடத்தவும், தனக்கான கனவை சமாளித்து பணம் ரீதியான பிரச்சனைகளை தாண்டி உறவினர்கள் முன்னரும் வாழ்ந்துகாட்ட படும் பாட்டை சிறப்பாக காட்டியிருக்கிறார். அதில் நவீன் என்ற பாத்திரம் தன்னுடைய சுயமரியாதையை இழக்காமல், மாதாந்திர சம்பளத்திற்காக வளைந்து நெளிந்துகொடுக்காமல் வைராக்கியத்துடன் இருப்பதாக காட்டி, அதை பற்றி கடைசியில் எந்தஒரு முடிவும் இல்லாமல் நிர்கதியாக விட்டது மட்டுமே படத்தின் பலவீனம்.
நக்கலைட்ஸ் பாணியில் நகைச்சுவையான ஒரு குடும்ப படமாக அதில் உருக்கமான குடும்பஸ்தரின் உணர்ச்சிகளையும் கலந்து நேர்த்தியாக கொடுத்துள்ளார். பாத்திரங்களை சித்தரிப்பதில் முழுமை இல்லாததை தவிர அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய படமாக குடும்பஸ்தன் அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]