Kurangu Pedal! அழகான கிராமத்தில் நடக்கும் இயல்பான கதையை எழுதி இந்த கோடை விடுமுறைக்கு மக்கள் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.
காளி வெங்கட் நடிப்பில் கமலக்கண்ணன் இயக்கி வெளியான படம் ‘Kurangu Pedal’. நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் தரமான படங்கள் பல வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் ‘Kurangu Pedal’ இடம்பெற்றுள்ளது.

காளி வெங்கட்டின் கதாபாத்திரங்கள் எப்படியோ படம் பார்ப்பவர்களை தன் வசம் ஈர்த்து அவருடன் ஒன்றி படத்தோடு எடுத்து செல்லும். இந்த படத்திலும் இவரின் பாத்திரம் இயல்பாக எழுதப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்து சைக்கிள் ஓட்ட பழக முடியாமல் இருக்கும் ஒரு கிராமத்து மனிதர், எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறார். இதனை அந்த ஊரார் கேலிக் கிண்டல் செய்கிறார்கள். காளி வெங்கட்டின் மகன் இதே கேலி பேச்சுக்கு ஆளாக, தன் தந்தையால் முடியாததை அவன் கற்றுக்கொண்டு சாதிப்பதாக சூளுரைப்பது தான் கதை.
அதற்கு நடுவில் அவன் செய்யும் சேட்டைகள், தவறுகள், வாடகை சைக்கிள் எடுப்பதற்காக அவன் செய்யும் சிறு சிறு திருட்டு, அப்பாவிடம் கோபம் என அனைத்தும் அடங்கிய படம் தான் ‘குரங்கு பெடல்’. படத்தின் கதை என்னவோ கேட்க எளிதாக இருந்தாலும் அதை எழுதி இயக்கிய விதம் படத்திற்கு மேலும் அழகூட்டி உள்ளது. அப்பா மகன் உறவை அழகாகவும் அன்றாட வாழ்க்கையையும் அதில் இருக்கும் சின்ன சின்ன சண்டைகள் சிக்கல்கள் என அனைத்தையும் பேசியுள்ள படம் ‘Kurangu Pedal’.
Star Movie Review: 5 Star வாங்கினாரா Kavin… ‘Star’ சினிமா எப்படியிருக்கிறது?!
இந்த மொபைல் போன், வலைதளங்கள், ஊடகங்களின் வளர்ச்சி எல்லாம் பெரிதும் இல்லாத காலத்தில் பள்ளி விடுமுறையின் போது கிராமத்து சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளை தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர். கோழி குண்டு விளையாடுவது, கம்பு சுத்துவது, குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவது என சிறுவர்களின் ஆனந்த பொழுதுபோக்கு காட்சிகள் புத்துணர்ச்சி அளிக்கும். சிறுவர்கள் அவர்களுக்குள் நடக்கும் சின்ன போட்டிகள், பந்தயங்கள் என அந்த காட்சிகளில் நம்முடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து செல்லும் ஒரு எளிமையான கதை. ஜிப்ரானின் பின்னனி இசையும் படத்தின் கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.
காளி வெங்கட்டின் கிராமத்து தமிழ் எப்போதும் போல மிக பொருத்தமாக உள்ளது. சந்தோஷ் வேல்முருகன் , ராகவன், ரத்தீஷ், சாய் கணேஷ் தெளிந்த நடிப்பை வெளிப்படுத்தினார்கள். இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் அனைவரும் பார்த்து மகிழும் ஒரு நல்ல படம் ‘குரங்கு பெடல்’.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]