Home Movie Reviews களமிறங்கி Sixer அடித்துள்ளது ‘லப்பர் பந்து’ – திரை விமர்சனம் 

களமிறங்கி Sixer அடித்துள்ளது ‘லப்பர் பந்து’ – திரை விமர்சனம் 

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா நடிப்பில் சுவாரசியமான கதையில் வெளியாகியுள்ளது ‘லப்பர் பந்து' 

by Vinodhini Kumar

2011ல் ஒரு லப்பர் பந்தின் விலை 15 ரூபாயாக இருந்தபோது கதை தொடங்குகிறது. பள்ளி படிக்கும் முதல் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமுடன் இருக்கும் ‘அன்பு’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். அப்படி ஒரு நாள் பக்கத்து ஊருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்து நண்பருடன் செல்கிறார். அங்கு அந்த ஊரின் நட்சத்திர வீரர் ‘கெத்து’ தன்னுடைய Batting திறமையால் கொண்டாடப்படுகிறார். 

லப்பர் பந்து

‘கெத்து’ பாத்திரத்தில் அட்டக்கத்தி தினேஷ், அவரது ‘Sachin Boys’ அணியின் கலக்கல் Batsman. பல ஆண்டுகளுக்கு பின் இந்த இரண்டு திறமையான கிரிக்கெட் வீரர்களின் சந்திப்பு இருவருமே எதிர்பார்க்காத வகையில் அமைய திரைக்கதை சூடு பிடிக்கிறது. 

‘லப்பர் பந்து’ படத்தின் திரைக்கதை

இந்தியாவில் அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் Gully கிரிக்கெட் அதாவது சின்ன சின்ன குழுக்களாக சேர்ந்து விளையாடும் கிளப் கிரிக்கெட் போட்டி கலாச்சாரம் இன்றளவும் செழிப்பாக இருந்து கற்கிறது. அப்படி இரண்டு ஊர்களின் கிரிக்கெட் டீம்கள் மோதும் காட்சிகளில் நடிங்கர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். 

முக்கியமாக ‘கெத்து’ கதாபாத்திரத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் திரையில் தோன்றும் காட்சிகள் விசில் பறக்கிறது. அவருக்கான trademark பாடளுடன் அவருடைய காட்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவு கண்ணோட்டத்திலும், அவரிங்கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ள கண்ணொட்டத்திலும் தனித்து தெரிகிறது. 

கிரிக்கெட் கதை என்று எளிதாக ‘லப்பர் பந்து’ கதையை சுறுக்கிவிட முடியாது. ஒரு கிராமத்துக்கே உரித்தான மறைமுகமாக பேசப்பட்டுள்ள சாத்திய வேறுபாடும், அதிலும் மிக எளிதாக சாதியால் இன்றளவும் எப்படி திறமைகள் தள்ளிவைக்கப்படுகிறார்கள் என்பதையும் மேலோட்டமாக பேசியுள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. 

காதல் கதையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சஞ்சனாவிற்கு இடையே உள்ள காதலை எவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதியுளாரோ, அதே வகையில் தினேஷ் மற்றும் சுவாசிகாவின் காதலும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளது. 

கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதையை செலுத்தும் வகையில் படத்தில் பலமுறை அவரின் Referenceகள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் Sehwag, Sachin, Ganguly, Gambir, Dhoni, Ashwin என பல கிரிக்கெட் வீரர்களின் trademark வசனங்களும் காட்சிகளும் அருமையாக பொருந்தியுள்ளது.  

படத்தின் பலம் 

சாதி என்பதை கத்தியின் மையமாக எடுக்காமல், பல இடங்களில் மிக எளிதாக பேசியிருப்பதும் ‘லப்பர் பந்து’ படகின் பெரிய பலம். 

விறுவிறுப்பான விளையாட்டு காட்சிகளில் நகைச்சுவையான Commentary மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு துணையாக நிற்கும் ரசிகர்களுக்கு இடையே நடக்கும்  உரையாடல் படத்துக்கு பலம். நடிகர் பாலசரவணன் உடைய Timing காமெடிய பல இடங்களில் இயல்பாக ஒன்றியுள்ளது. 

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் ‘சில்லாஞ்சிருக்கியே’ பாடழும், அதுவே உணர்வுபூர்வமான நேரங்களில் பின்னணி இசையாகவும் காய் கொடுத்துள்ளது. ‘கெத்து’ மற்றும் ‘அன்பு’ பாத்திரங்களின் மோதல் ஏற்படும் காட்சிகளில் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. 

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ ட்ரைலர் வெளியானது!

படத்தின் பலவீனம் 

திரைக்கதையை தாண்டி படத்தில் மக்களை எதிர்பார்ப்புடன் வைக்கும் காரணி என்று எதுவும் இல்லை. பெரும்பாலான காட்சிகளை மக்கள் கணிக்கும்படியாக இருந்தது படத்தின் மிக சிறிய பலவீனம் என கூறலாம். 

இரண்டாம் பாதியில் நடக்கும் மாற்றங்களும், அதை பார்வையாளர்களுக்கு பதிவு செய்ய இயக்குனர் சில கிரிக்கெட் காட்சிகளை சேர்த்துள்ளதும் சற்றே நிலுவையாக அமைந்துள்ளது. 

‘லப்பர் பந்து’ கதாபாத்திரங்கள்

‘அன்பு’ பாத்திரத்தில் ஆழமான வசனங்களோ, தனித்துவமான பண்புகளோ இல்லாமல் இருந்தாலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் இதுவரை இல்லாத மாறுபாட்டை காண்பித்துள்ளார். நண்பர்களுடன் உரையாடும் காட்சிகள், தன காதலியிடம் வெளிப்படையாக பேசும் காட்சிகளில் எளிதாக பார்வையாளர்களை தன பக்கம் ஈர்க்கிறார். கோபம், காதல், போட்டி, Ego என பல உணர்ச்சிகளை இயல்பாக நடித்து படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளார். 

Lubber Pandhu cast

‘கெத்து’ என்ற பூமாலை பாத்திரத்தை வெவேறு நடிகர்களிடம் நடிக்க கேட்டதாக சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியிருந்தார். ஆனால் அட்டகத்தி தினேஷ் மட்டுமே இந்த படத்திற்கு தேவையான வயதான பாத்திரத்தையும், ஒரு கல்யாண வயது பெண்ணுக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறினார். இப்படத்திற்கு மிக முக்கியமான பத்திரமாக, மிக குறைவான வசனங்களால் தன்னுடைய உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு மிக எளிதாக செய்துள்ளார் தினேஷ். 

‘அசோதை’ என்ற கண்ணியமான, தைரியமான பெண்ணாக நடித்துள்ளார் நடிகை சுவாசிகா. முதல் காட்சி முதல் அவருக்கான பாத்திரத்தை தெளிவாக புரிந்துகொண்டு, பல இடங்களில் தனித்து தெரிகிறார். கோபமான சுபாவத்திலும் தன்னுடைய குடும்பத்துக்காகவும், கணவருக்காகவும் அவர் ஒளித்து வைத்துள்ள அக்கறையை காட்டி, நன்றாக நடித்துள்ளார். 

‘துர்கா’ என்ற அழகான பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சஞ்சனா. காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், இரண்டாம் பாதியில்அவரின்பாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட நடித்துள்ளார். 

இவர்களுடன் நடிகர் காளி வெங்கட், பாலசரவணன், TSK, தேவதர்ஷினி ஆகியோர் அவர்களின் பாத்திரங்களை கனகச்சிதமாக நடித்துள்ளனர். நகைச்சுவை, வெறுப்பும், கோபம் என ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு உணர்வை பதித்துள்ளனர். 

‘லப்பர் பந்து’ படத்தின் முதல் பாதி முழுமையாக மக்களின் கவனத்தை ஈர்த்து, கதையுடன் பயணிக்க வைக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களும், நகைச்சுவையான வாக்கு வாதங்களும் என முதல் பாதி Sixer. இரண்டாம் பாதியில் கணிக்க கூடிய, தொடரும் Ego மோதல்களும் படத்தின் போக்கை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் ‘லப்பர் பந்து’ ஒரு முழுமையாக ரசிக்கும்படியான படமாக அமைந்துள்ளது.  

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.