நடிகர் தனுஷ் இயக்கிய மூன்றாவது படமான ஜாலியான ரொமான்டிக் காதல் கதையை கொண்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் பிப்ரவரி 21 ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பவிஷ் நாராயன், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் போன்ற இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். இது ஒரு காமெடி நிறைந்த சாதரண காதல் கதையையும் நட்பையும் ஜாலியான காட்சிகளில் எடுத்துக்காட்டும் சிறப்பான படமாக உள்ளது.
காதல், காதல் தோல்வி, மற்றும் முன்னாள் காதலியின் திருமணம் என இப்படி அனைத்து உணர்வுகளையும் கொண்டுள்ள நகைச்சுவை கலந்த படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். சமீபத்தில் காதல் கதை களத்துடைய படங்கள் வருவது அரிதாகிவிட்ட நிலையின் தற்போது ஒரு ரொமான்டிக் காதல் மற்றும் காமெடி கலந்த உணர்வுகளோடு ஒரு நல்ல “ஃபீல் குட் மூவி” பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்படம் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
#NEEK #NilavukkuEnmelEnnadiKobam 3.5/5 A breezy rom-com that will bring a smile on our faces with new bunch of promising actors.
— sridevi sreedhar (@sridevisreedhar) February 21, 2025
It’s a new genre for @dhanushkraja, the director 🙌 as the film is a refreshing take on love, friendship, relationship, breakups and rebound. New… pic.twitter.com/KWUHUEaIG1
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் கதைக்களம்
இந்த படத்தின் மூலம் இக்காலத்து காதல் கதையையும் அதில் வரும் பிரச்சனைகளையும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் நடிகர் தனுஷ். படத்தின் இரண்டு பாகங்களிலும் எந்த ஒரு காட்சியும் சலிப்படைய வைக்காத அளவிற்கு அழகாக கட்டப்பட்டுள்ளது.
படத்தின் தொடக்கமே அனைவரும் வைப் செய்யும் அளவிற்கு உற்சாகமாக துவங்குகிறது. அதை தொடர்ந்து, காதல் தோல்வியில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஹீரோ பிரபு (பவிஷ் நாராயன்) தன் பெற்றோர் விருப்பத்திற்காக பிரபுவின் தோழி ப்ரீத்தியை (பிரியா பிரகாஷ் வாரியர்) பெண் பார்க்க செல்கிறார். அதன் பின், சில நாட்கள் இருவரும் பேசி பழகிய பிறகு பிரபு தன் முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்க போவதை பற்றியும் தன் முன்னாள் காதலை பற்றியும் ப்ரீதியிடம் கூறுகிறார். அதை தொடர்ந்து கதை பிரபுவின் முன்னாள் வாழ்க்கைக்கு சென்று அவரின் காதல் கதையையும், பிரபுவின் முன்னாள் காதலி நிலா (அனிகா சுரேந்திரன்) திருமண நிகழ்ச்சியையும் அழகாக காண்பித்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா? அல்லது பிரபுவின் முன்னாள் காதலிக்கு வேறு திருமணம் நடக்குமா? என்பதை மையமாக வைத்து ஒரு ஜாலியான ரொமான்டிக் காதலையும் நட்பையும் அழகாக சித்தரித்து காட்டப்பட்டுள்ள படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.

தனித்துவ கதாபாத்திரங்கள்
அறிமுக நடிகராக இருந்தாலும் இப்படத்தின் ஹீரோ பவிஷ் நாராயன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நேர்த்தியாகவும் அழகாகவும் நடித்துள்ளார். மேத்யூ தாமஸ் அனைத்து காட்சிகளிலும் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி அனைவரையும் கவரும் வகையில் சிறு சிறு கவுண்டர்கள் கொடுத்து தனது கதாபாத்திரத்தை தனித்துவமாக காட்டியுள்ளார். மேலும் நடிகை அனிகா சுரேந்திரன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு காதல் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிமிகு காட்சிகளிலும் சரி தனது பாத்திரத்தை அழகாக காட்டியுள்ளார். நடிகை சரண்யா பொன்வண்ணன் எப்பொழுதும் போல் அம்மா கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறும் சில இடங்களில் நகைச்சுவையாக பேச்சிக்கு கவுண்டர் கொடுத்தும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளார். நடிகர் சரத்குமார், ஆடுகளம் நரேன், ரம்யா ரங்கநாதன் வெங்கடேஷ் மேனன் மற்றும் ராபியா ஆகியோர் தங்களது பாத்திரங்களுக்கு ஏற்ப அழகாகவும் நேர்த்தியாகவும் நடித்துள்ளனர்.
படத்தின் பலம்
இக்காலத்து இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் ஜாலியான ரொமான்டிக் காதலையும் ஒரு ஆணின் காதல் வலியையும், நட்பையும் சம அளவில் எடுத்துக்காட்டியுள்ளது இப்படத்தின் சிறப்பான ஒன்றாக உள்ளது. மேலும் இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்துமே பார்ப்பதற்கும் கேட்பதற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் திரையரங்க அனுபவத்தில் கேட்பதற்கு ஏற்றவாறும் இருப்பது முக்கியமான சிறப்பாகும். இது காதல் சார்ந்த படமாக இருப்பினும் அனைத்து காட்சிகளிலும் நகைச்சுவை நிறைந்த பேச்சுக்கள் இருப்பது பார்ப்பவர்கள் சிரித்து கொண்டே பார்ப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
படத்தின் பலவீனம்
காதல் படம் என்பதற்கு ஏற்றவாறு காதல், காமெடி, நக்கல் பேச்சு, காதல் வலி, அழுகை என எல்லா உணர்வுகளும் கலந்து அனைத்து காட்சிகளும் காட்டப்பட்டிருந்தாலும், ஒரு சில இடத்தில் கூட ஆக்ஷன், சண்டை காட்சிகள் இடம்பெறாமல் இருப்பது இப்படத்திற்கு சற்று பலவீனமான ஒன்றாக உள்ளது. இந்த படத்தில் சிறு சிறு ட்விஸ்ட் இருந்தாலும் பெரிதாக திருப்புமுனை எதுவும் இல்லாததால் பார்ப்பவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சற்று ஜாலியாக மட்டுமே பார்க்கும் வகையில் இப்படம் உள்ளது.மேலும் இப்படம் எந்த வித முற்றும் இல்லாமல் இருப்பது போல் நிறைவடைந்திருப்பது சற்று சலிப்பை கொடுக்கிறது.
விமர்சனம்
இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் நடித்துள்ளனர். ‘ஜாலியா போயிட்டு ஜாலியா வாங்க’ என நடிகரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இயக்குனருமான தனுஷ் கூறிய படி இப்படம் ஒரு நல்ல எண்டெர்டைன்மெண்ட் படமாகவும் அனைவரும் ஜாலியாக திரையரங்க அனுபவத்தில் பார்ப்பதற்கு ஏற்ற காதல் கதையுடைய ஃபீல் குட் மூவியாகவும் உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]