‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய புதுமையான த்ரில்லர் கதைகளுக்காக தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது அதர்வா, ரஹ்மான், சரத்குமார் ஆகியோரை வைத்து ‘நிறங்கள் மூன்று’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 22ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.
‘நிறங்கள் மூன்று’ படத்தின் திரைக்கதை
மாறுபட்ட திரைக்கதையால் தன்னுடைய முதல் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த கார்த்திக் நரேன், ‘நிறங்கள் மூன்று’ படத்திலும் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஒரு நாள் இரவில் இணைத்து ஒரு நல்ல கதையை இயற்றி, இயக்கியுள்ளார். சினிமாவில் பெரிய இயக்குநராக முயற்சிக்கும் ‘வெற்றி’, இளவயது காதலைச் சொல்லி தயக்கத்திலும் குழப்பத்திலும் சுற்றிவரும் பள்ளி மாணவர் ஸ்ரீ, அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் வசந்த், காணாமல் போன மகளைத் தேடும் பதற்றம் என மூன்று வெவேறு நோக்கங்களும் குழப்பங்களுடனும் இரவில் சந்திக்கும் மூன்று நபர்களின் கதை தான் இப்படம்.

பெரிதும் வித்தியாசமில்லாமல், சாதாரண பின்னணியுடன் சந்திக்கக்கூடிய காரணிகளுடன் மூன்று கதாபாத்திரங்களை எழுதி அவர்களை பிணைக்க சரத்குமாரின் கதாபாத்திரத்தைக் காவல் அதிகாரியாக அறிமுகப்படுத்தி திரைக்கதையில் தேவையான முடிச்சுகளை அமைத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தும் ஒரு பிரச்சனை இருக்க, அனைவரும் தங்களின் விடியலை நோக்கிச் செல்ல, இவர்களின் பிரச்சனைகள் ஒன்றாகச் சேரும் இடமாகக் காவல் நிலையம் இருக்க, அங்கிருந்து ஒரு பிரச்சினையையும் விதைக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். அங்கிருந்து பிறக்கும் பிரச்சனையால் மீண்டும் எதிர்பார்க்காத பிணைப்பு கிடைக்க, இப்படம் Nonlinear படமாகச் சிறப்பாகச் செயல்படுகிறது.
காணாமல் போன ஆசிரியர் வசந்தின் மகளை ஏன் மாணவன் ஸ்ரீ தேடுகிறார்? இருவருக்கும் இடையில் ஏதேனும் பிரச்சனையால் அந்த பெண் காணாமல் போனாரா? இதற்கிடையில் வெற்றியின் காத்தாயி திருடப்பட்ட காரணம் என்ன? ஆகிய கண்ணோட்டத்தில் கதை நகர்கிறது.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
நடிகர் அதர்வா தன்னுடைய வித்தியாசமான நடிப்பால், இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தை தன்னுடையதாக்கியுள்ளார். எப்படியாவது திரையுலகில் நுழைந்து தன்னுடைய படத்தை இயக்க தயாரிப்பாளர்கள் பலரைச் சந்தித்து மனமுடைந்து கடைசியில் கதை திருட்டுக்கு ஆளாகி விரக்தியில் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார். ‘நிறங்கள் மூன்று’ படத்தில் இவருக்கான இடமும் பாத்திரமும் அமைந்தது வரவேற்புடையதாக அமைந்துள்ளது.
A glimpse into the chaotically beautiful world of ‘Vetri’.
— Karthick Naren (@karthicknaren_M) November 14, 2024
Sneak Peek releasing Tomorrow at 6PM. In cinemas worldwide from November 22nd 🎬🤍@Atharvaamurali @realsarathkumar @actorrahman @Ammu_Abhirami @Ayngaran_offl #NirangalMoondru pic.twitter.com/ClGK5tTbM8
நடிகர்கள் ரஹ்மான் மற்றும் சரத்குமார் தங்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் ரஹ்மான் குற்ற உணர்ச்சியுடன் தவிக்கும் தந்தையாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இளம் நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். தெளிவாக தன்னுடைய பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி அவரின் உணர்ச்சிகளால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
படத்தின் பலம்
இந்த படத்தின் வரவேற்புக்குப் பெரும்பகுதியாக அமைந்திருப்பது படத்தின் கதையும் நடிகர்களும் தான். எளிமையான கதைக்களத்தில் நுணுக்கமான திரைக்கதையைப் பயன்படுத்தி அதற்கு ஏற்ற நடிகர்களை இணைத்துள்ளார் இயக்குநர். குறிப்பாக இளம் நடிகர் துஷ்யந்த் மற்றும் நடிகர் அதர்வா ஆகியோர் தங்களின் நடிப்பால் ஈர்க்கிறார்கள்.
நிறங்கள் மூன்று is hitting the theatres worldwide from Tomorrow. The journey of this film from script to screen over the years is very dear to me & will cherish it. As a team we have put our heart & soul into this one. Watch it with an open mind. Hope you all like it, Please… pic.twitter.com/iQIch8YfSH
— Karthick Naren (@karthicknaren_M) November 21, 2024
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஆகியவை முதல் பாதி முழுவதும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியிலும் பரிட்சியமான கதை நகர்வைச் சற்றே விறுவிறுப்பாகியிருப்பது இவர்களின் முயற்சி தான். ஒளிப்பதிவாளர் திஜு டாமி மற்றும் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் ஆகியோரின் ஒத்துழைப்பால் பல காட்சிகள் எழுச்சியைக் கண்டுள்ளது.
படத்தின் பலவீனம்
புதுமையான கதை இல்லை என்றாலும் முதல் பாதியில் மக்களை ஈர்த்த திரைக்கதை இரண்டாம் பாதியில் ஒட்டாமல் தளர்வாக இருப்பதும், கதாபாத்திரங்களின் உணர்வுகள் பார்ப்பதற்குத் தெளிவாக அமைந்தாலும் உணர்ச்சிகரமாக அமையாமல் கதையின் ஓட்டமாக மட்டுமே அமைந்திருப்பது ரசிகர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது.
‘நிறங்கள் மூன்று’ ஒரு எளிமையான கதைக்களத்தில், புதுமையான கதாபாத்திரங்களுடன் விறுவிறுப்பான திரில்லர் படமாக அமையவில்லை என்றாலும் பெரிதாகத் தளர்வு இல்லாமல் கதையிலிருந்தும் விலகாமல் ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]