பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கம் வெட்டப்பட்டது எப்படி, அந்த வரலாற்று பதிவில் இந்திய மக்கள் எப்படி வனபல தரப்பட்ட அரசியலில் சிக்கினார்கள் என்பதை பா. இரஞ்சித் உடைய வழக்கமான பாணியில் இருந்து சற்றும் விலகாமல் கூறியுள்ளார்.

தங்கலான் கதைக்களம்
1850ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தங்கத்தை தேடி தென்னிந்தியாவின் வட ஆர்க்காடு பகுதியை விலைக்கு வாங்கி சொரண்ட தொடங்குகிறார்கள். அந்த கோலார் பகுதியில் தனக்கென தன்னுடைய பாட்டன் விட்டுச் சென்ற சிறிய நிலத்தில் உழுதுண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் தங்கலான் குடும்பத்தினர். அதே ஊரில் பலரும் அப்பகுதியின் ஜமீன்தாரின் அடிமைகளாக இருக்கிறார்கள்.
தங்கலானின் தனிப்பட்ட நில அறுவடையை பொறுக்க முடியாத ஜமீன்தார் அந்த அறுவடையை அழிக்க, முதல் முறையாக ஒடுக்கமுறையை அனுபவிக்கிறான் தங்கலான். இதை தொடர்ந்து பெரிய துரையாக ஆங்கிலேயர் Clementன் வருகை பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
தங்கலான் பாத்திரங்கள்
‘தங்கலான்’ என்றால் அந்த குடியின் காப்பாளன் என்றும் ஒரு குடியை அழிவில் இருந்து மீட்பவர் என்ற கோணத்தில் கதை முழுவதும் நடிகர் சியான் விக்ரம் ‘Thangalaan’ பாத்திரத்தில் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து நடித்துள்ளார். பல இடங்களில் சிலிர்ப்பூட்டும் உடல் மொழியால் கதைக்கு வழு சேர்த்துள்ளார்.

‘கங்கம்மா’ பாத்திரத்தில் தாயின் பாசமும், தைரியமான குடும்ப தலைவியாகவும் ஜொலிக்கிறார் பார்வதி திருவோத்து. என்னதான் படத்தின் கதை ‘Thangalaan’ பற்றியதாக இருந்தாலும் பார்வதியுடன் வரும் காட்சிகளில் எளிதாக மக்களின் கவனத்தை ஈர்க்கிறார். கங்கம்மாள் பாத்திரத்தின் வசனங்கள், உணர்வுகள் என அனைத்தும் தத்ரூபமாக நடத்தியுள்ளார்.

மாளவிகா மோகனன் ‘ஆரத்தி’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பா. இரஞ்சித் முதலில் இந்த கதாப்பாத்திரத்துக்கு நடிகை மாளவிகா பொருந்துவாரா என்ற சந்தேகத்தில் அவரை தேர்ந்தெடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் ‘ஆரத்தி’ பாத்திரத்தை தனதாக மாற்றி ஒவ்வொரு முறையும் திரையில் தோன்றும்போதும் மிரட்டியுள்ளார்.
ஆங்கில நடிகர் டேனியல் கால்டிஜரோன் தெளிவாக இயக்குனரின் கண்ணோட்டத்தை பிரதிபலித்துள்ளார். முதல் பாதியில் தனக்கான பங்கை திரம்பட நடித்து, இரண்டாம் பாதியில் எப்போதும் ஆங்கிலேய வன்கொடுமையாளராக வந்துள்ளார்.
நடிகர் பசுபதி ‘சாமியார்’ பாத்திரத்தில் தற்போதும் நிலவிவரும் சமூக சாதிய வேற்றுமைகளை நக்கலாக பேசும் பாத்திரமாக வந்துள்ளார். அதோடு துணை நடிகர்களாக நடித்துள்ள அனைவருமே அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கதைக்கு உதவியுள்ளனர்.
படத்தின் பலம்
அந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப அனைத்து நடிகர்களும் கச்சிதமாக பொருந்தியுள்ளார்கள். அவர்களின் உச்சரிப்பு மற்றும் நடிப்பும் எதார்த்தமாக அமைந்து படத்தை ரசிக்கும்படியாக உள்ளது.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் பின்னணி இசை மட்டுமில்லாமல் பாடல்களையும் மிக அழகாக அமைத்துள்ளார். முக்கியமாக ‘லானே தங்கலானே’ பாடல் மற்றும் ‘மினிக்கி மினிக்கி’ பாடல்கள் கதைக்கு பொருத்தம்.
திரைக்கதையில் பா. இரஞ்சித் ஒரு தெரிந்த பழைய கதையையும் ஆர்வத்துடன் எழுதியுள்ளார். ஏற்கனவே கோலார் தங்க வயல் பற்றியும் ஆங்கிலேயர் காலத்தின் கொடுமைகள் பற்றியும் பலமுறை பார்த்திருந்தாலும், ‘தங்கலான்’ படம் திரைக்கதையால் தனித்து நிற்கிறது.
படத்தின் ஒளிப்பதிவு மட்டுமே கதையின் ஓட்டத்தை பரபரப்புடன் வைக்கிறது. முக்கியமாக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் கடந்த காலம், பகல் மற்றும் இரவு என்ற மாற்றங்களை அருமையாக காமித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் படங்கள்…
படத்தின் பலவீனம்
இயல்பான பா. இரஞ்சித் படத்தை பௌல இந்த வரலாற்று படத்திலும் சாதி பிரிவினை பற்றிய உரையாடலும், சமூகத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை பேசியிருப்பது எதிர்பார்த்லாக அமைந்தது.
தங்கலான் படத்தின் முடிவில் ஒரு பெரிய நம்பிக்கையும், வருங்காலத்துக்கான பெரிய எழுச்சியையும் சேர்த்து மக்களை சிந்திக்க வைக்கிறார். ஆனால் இந்த படத்தில் Thangalaan என்ற பாத்திரத்துக்கு எழும் எதிரிகள் வெள்ளைத் தோல் ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் உடன் இருக்கும் இந்திய குறுநில முதலாளிகளும் என்பதை முதல் பாதி முழுவது ம் பேசியுள்ளார்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரலாற்று திசைமாற்றங்கள் நடப்பதும், அதில் நல்லதும் கெட்டதும் இணைந்தே இருப்பதும் எதார்த்தம் தான். அப்படி வேப்பூர் பெண்கள் முதல் முறையாக புடவைக்கு blouse அணிவதும், Thangalaan சட்டை அணிந்து முற்போக்குச் சிந்தனைகளை பேசுவதும் எந்தளவுக்கு இன்று ஏற்றக்கொள்ளப்படும் என்பது கேள்விக்குறி.
ஆக மொத்தம் ‘தங்கலான்’ இயல்பான ஆங்கிலேயர் ஆட்சி கதையில் சமூக சீர்திருத்த கருத்துக்களை கலந்த இயல்பான படம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com