Home Movie Reviews சமுத்திரக்கனி நடிப்பில் திரு. மாணிக்கம் படத்தின் தமிழ் விமர்சனம்

சமுத்திரக்கனி நடிப்பில் திரு. மாணிக்கம் படத்தின் தமிழ் விமர்சனம்

'மாயாண்டி குடும்பத்தார்' பட இயக்குனர் நந்தா பெரியசாமி  சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் 'திரு. மாணிக்கம்' படம் ஒரு எளிமையான கதைக்களத்தை உணர்ச்சிகளின் மிகுதியாக உள்ளடக்கி தத்துவங்களை மட்டுமே காரணியாக காட்டியுள்ளது.  

by Vinodhini Kumar

நேர்மையின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு நடிகர்கள் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி, இளவரசு மேலும் பலர் நடித்துள்ள படம் ‘திரு. மாணிக்கம்’. இயக்குனர் நந்தா பெரியசாமியின் வலுவான தத்துவத்தை தாங்கும் திறன் கொண்ட கதைக்களத்தில் சற்றே சலிப்பான திரைக்கதையால் தடம் மாறி வழக்கமான சமூகப் படமாக மாறியுள்ளது. 

திரு. மாணிக்கம் திரைக்கதை

தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள குமுளியில் லாட்டரி கடை நடத்தி தன்னுடைய மனைவி, இரண்டு மகள்கள் மாமியாருடன் அழகான எளிமையான வாழ்க்கை நடத்திவருபவர் மாணிக்கம். இவரின் குடும்ப பிரச்சனைகள் பல இருந்தும் தனக்கான ஒரு அழகிய வாழ்க்கையை உருவாக்கி அதில் மகிச்சியுடன் இருக்கும் குடும்பத்தினர் என கதை தொடங்க, ஒரு நாள் அவரின் கடையில் லாட்டரி சீட்டு வாங்கும் பெரியவர் (பாரதிராஜா), வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பணம் கொடுக்க முடியாமல் இருக்க, அவரிடம் பணம் ஏதும் எதிர்பார்க்காமல் கருணை காட்டுகிறார் மாணிக்கம். இருப்பினும் பணம் கொடுத்துவிட்டு தான் லாட்டரி சீட்டை பெறுவேன் எனக் கூறி ஊருக்கு செல்கிறார் பெரியவர். அவர் எடுத்த லாட்டரி சீட்டிற்கு 1.5 கோடி பரிசு அறிவிக்க, அதை  சேர்க்கச் செல்கிறார் மாணிக்கம். இதையரிந்த மாணிக்கத்தின் குடும்பத்தினர் அவரை தடுக்க முயற்சிக்க, கடைசியில்  அந்த பரிசு? நேர்மையான மாணிக்கத்திற்கு பலன் கிடைத்ததா? என்பது கதை. 

தனித்துவமான கதாபாத்திரங்கள்

இப்படத்தில் தனித்துவமான கதாபாத்திரங்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது என்றாலும் திறம்பட தங்களின் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்தவர்கள் என்று சிலரை குறிப்பிடலாம். முதலில் கதையின் நாயகனான மாணிக்கம் என்ற பாத்திரத்தை தனக்கு வழக்காமான பாணியில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இவரின் மற்ற சமூக அக்கரைக்கு கொண்ட படங்களை போலவே இப்படத்திலும் நேர்மையான ஒரு பாத்திரமாக நடித்து, எந்த இடத்திலும் அதிலிருந்து விலகாமல் நடித்துள்ளார். 

நடிகை அனன்யா பல அன்டுகளுக்குப் பின் தமிழில் நடித்துள்ளார். சுமதி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுதிதியுள்ளார். தன்னுடைய வாழ்க்கைக்கும் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர் முன்னெடுக்கும் எதிர்ப்பு பார்ப்பவர்களுக்கு ஒற்றுப்போகும் வகையில் உள்ளது. 

இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா அவர்களின் நுணுக்கமான நடிப்பால் பலமுறை உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். அவருக்கே ஏற்ற தனி சொல்லாடலுடன் தழுதழுத்த குரலில் வயதின் மூர்ப்பையும் தன்னுடைய மகளுக்காக ஏதும் செய்யமுடியாமல் தவிக்கும் தவிப்பையும் திறம்பட வெளிக்காட்டியுள்ளார். 

படத்தின் பலம் 

திரு. மாணிக்கம் படத்தின் முதல் பாதியில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விலகிய விதமும், அவர்களுக்குள் ருக்கும் உறவுமுறையை ஆலகால காட்டிய விதமும் அந்த குடும்துடன் ஒன்றை வைக்கிறது. படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் தங்களின் அனுபவங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளது படத்தின் பெரிய பலம். 

இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளில் சமுத்திரக்கனியின் நடிப்பும் அதற்குப் பின் அவரின் கதாபாத்திரம் கடந்து வரும் பாதையால் ஏற்படும் மாற்றமும் என கதையை இரண்டாக பிரிக்கும் பொது கதையில் ஒரு நகர்வு ஏற்பட அதன் வலி இரண்டாம் பாதிக்கு ஆவல் கிடைக்கிறது. 

படத்தின் பலவீனம் 

முதல் பாதியில் ஒரு அழகிய குடும்பத்தையும் அந்த சின்ன வட்டத்தில் உள்ள குறைகளையம் நிறைகளையும் காட்டி மக்களை கவர்ந்து அவர்களுக்காக வருத்தப்பட வைத்த இயக்குனர் இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனியின் பின்கதையை கூறியபோது அந்த உணர்ச்சிகளை கடத்த தவருகிறார். 

படத்தின் தொடக்க முதல் அனைவருக்கு தெளிவான ஒரு தத்துவத்தை மேலும் மேலும் ஒரண்டாம் பத்தி வரை கூறியுள்ளது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. சமுத்திரக்கனியை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தாலும் அவரின் பாதையில் நடக்கும் இடஞ்சல்களுக்கும் குடும்பத்தார் ஏற்படுத்தும் சிக்கல்களும் சேராமல் தனித்து பயணிப்பது திரைக்கதையில் சேராமல் இருக்கிறது. 

New Year 2025: ஜனவரி 1 அன்று தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு திரைப்படங்கள்

குமுளியில் லாட்டரி சீட்டு கடை நடத்தும் சாதாரண மனிதர் மாணிக்கம் எப்படி திரு. மாணிக்கம் ஆனார் என்பதை நேர்மையின் வழியில் சொல்லத் தொடங்கி திரைக்கதையில் சுவாரசியம் இல்லாமல் தத்துவங்களை மட்டும் கூறியிருப்பது படத்தை ஒருமுறை மட்டுமே பார்க்கும்படி செய்துள்ளது.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.