‘வணங்கான்’ இயக்குநர் பாலாவின் அடுத்த அழுத்தமான படைப்பு. அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், இயக்குநர் மிஷ்கின், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள இப்படம் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மீது நடக்கும் வன்முறையையும் பற்றிய படம். முன்கோபத்தால் தன் கண்முன் நடக்கும் அநீதிகளை கண்டு முரட்டுத்தனமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி அடிதடி சண்டைகளில் ஈடுபடும் கோட்டி (அருண் விஜய்), தன்னுடைய தங்கையுடன் கன்னியாகுமரியில் வாழ்ந்துவருகிறார். இவரின் முன்கோபம் பிடிக்க்கத்தை தங்கை தேவி (சாயா) அவரை படம் முழுவதும் கண்டிக்கிறார், இருப்பினும் அடங்காத கோபத்துடன் பலமுறை காவல் நிலையத்திற்கு சென்று சிறைப்படும் இவரை ஒரு மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்தில் காவலாளியாக சேர்த்துவிடுகிறார்கள். அங்கு நடக்கும் ஒரு அநீதியை கண்டு அவர் செய்யும் செயல் தான் படத்தின் கரு.
‘வணங்கான்’ படத்தின் திரைக்கதை
#Vanangaan from 10.01.25 …💥@IyakkunarBala 💥#VanangaanForPongal pic.twitter.com/ciuRHEw3PA
— ArunVijay (@arunvijayno1) December 6, 2024
படத்தின் முதல் பாதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இருவரும் அண்ணன் தங்கையாக கன்னியாகுமரியில் வாழ்ந்துவர, வாய் பேசமுடியாத காது செட்காத மாற்றுத்திறனாளி கோட்டியை காதலிக்கும் பெண் டீனாவின் காட்சிகள் பெரும்பாலும் முதல் பாதியை ஆக்கிரமித்தது. இடைவேளைக்கு முன்னர் தான் படத்தின் கதை ஆரமிக்கிறது. இரண்டாம் பாதியில் அந்த மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்தில் நடக்கும் குற்றமும் அதற்கு அருண் விஜய்யின் கதாபாத்திரம் செய்யும் செயல் மற்றும் அதன் பின் சட்டரீதியான விசாரணை தான் மீதி கதை.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
இயக்குனர் பாலாவின் படங்களில் அனைத்திலும் தனித்துவமிக்க, வித்தியாசமான கதாபாத்திரங்கள் இருப்பது வழக்கம். அப்படி வணங்கான் படத்திலும் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான இதுவரை அவரிடம் எதிர்பார்க்காத ஒரு நடிப்பு வெளிப்பட்டிருந்தது. சண்டை காட்சிகளிலும், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் வசனங்களே இல்லாமல் செய்கை மொழி வழியாக தன்னுடைய திறமையை அசத்தலாக வெளிப்படுத்தியுள்ளார்.
#Vanangaan soothing 3rd single "Mugilin Mele" out now..🎶🎶@IyakkunarBala @gvprakash @vhouseofficial #VanangaanFromJan10https://t.co/yA4HXysAjE pic.twitter.com/5ynDox2yu5
— ArunVijay (@arunvijayno1) January 6, 2025
இயக்குனர் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்கள் இப்படத்தின் கதையோட்டத்திற்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி திரைக்கதையை சற்றே சுவாரசியமாக எடுத்துச்சென்றது. இவர்களுடன் நடிகைகள் ரோஷினி பிரகாஷ் மற்றும் நடிகை சாயா ஆகியோரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருந்தனர்.
படத்தின் பலம்
படத்தின் முக்கிய தூணாக நடிகர் அருண் விஜய் தன்னுடைய முழு அர்ப்பணிப்பை கொடுத்து, ஒரு முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பால் படத்தின் பல காட்சிகளில் ஒரு மாற்றுத்திறனாளியின் உள்ளுணர்வையும், கோபத்தையும் வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் பாலா.
படத்தின் பாடல்கள் மற்றும் இசை படத்தில் வரும் கதை மற்றும் காட்சிகளை விட ஒரு பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையில் இறுதி காட்சியில் வரும் பாடலும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் அமைத்த பின்னணி இசையும் படத்தை மற்றொரு உணர்ச்சி மிகுதிக்கு மக்களை அழைத்துச்செல்லும்.
படத்தின் பலவீனம்
ஒரு மாற்றுத்திறனாளியின் வலி மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தான் புரியும் என்ற கதைக்கருவை மக்களுக்கு அறிமுகப்படுத்தாமல் படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் கதையை காட்டியது கதையின் போக்குடன் ஒன்றாமல் தெரிகிறது.
மாற்றுத்திறனாளிகள் மீது நடக்கும் குற்றச்சம்பவங்களையும், அவர்களின் இயலாமையை தங்களின் வக்கிரமான ஆசைக்காக பயன்படுத்தும் கொடூரத்தை மக்களுக்கு புரியவைக்கும் நோக்கத்துடன் காட்சியமைத்தும் அதை படத்தின் அங்கமாக கதையோட்டத்தில் இணைப்பதை தாண்டி அதை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்துவது முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பெண்கள் மீது நடக்கும் அநீதி மற்றும் வன்கொடுமைகளை பெரியாத்திரையில் காட்சிப்படுத்துவதில் உள்ள வழிமுறைகள் பற்றிய நுண்ணறிவு சமீபத்தில் பேசுபொருளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வணங்கான் படம் இயல்பான இயக்குனர் பாலாவின் படமாக, அழுத்தமான மற்றும் ஆழமான கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டுள்ளது. திரைக்கதையாக ஒரு குறிப்பிட்ட கதைக்கருவை வைத்து சட்டத்தை கையில் எடுக்கும் வகையில் படத்தின் நாயகன் செயல்படுவது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையவில்லை. இயக்குநர் பாலாவின் படங்கள் அப்படி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையும் அல்ல. மனதை கணப்படுத்தும் இறுதி காட்சி, உணர்ச்சி மிகுதியான கதைக்களம் என பலத்த இதயத்துடன் பார்க்கவேண்டிய படம் தான் வணங்கான்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]