தமிழ் சினிமாவில் இன்றும் Box Office வாக்குறுதியுடன் ஏறத்தாழ 50 ஆண்டுகள், பல கோடி ரசிகர்களை சம்பாதித்து முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு தீபாவளி போல கொண்டாடப்படுவதை போலவே ஹிந்தியில் ஈடு இணையில்லாத புகழுடன் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன்.
இந்த இரு முன்னணி சூப்பர் ஸ்டார்களும் இணைந்து ஒரு முழுமையான கமர்ஷியல் படத்தில் நடித்துள்ளனர். ‘வேட்டையன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சகட்டமாக இருப்பதற்கு மற்றொரு காரணம், இப்படத்தின் இயக்குனர் TJ ஞானவேல் உடைய கதை என்பதும் ஆகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு Tribute: ‘Vettaiyan Padai’ பாடல் வெளியானது!
‘வேட்டையன்’ படத்தின் கதைக்களம்
தமிழ் நாட்டில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடங்கும் கதையில் தற்போது நிஜத்திலேயே பள்ளி மாணவர்கள் மத்தியில் தலைவிரித்தாடும் போதை பழக்கத்தை கதையின் கருவாக எடுத்து, அதனால் நடக்கும் சமூக சீர்கேடுகளை குறிப்பிட்டு, காவல் துறையினரின் அலட்சியம் எப்படி இப்படியான குற்றங்கள் வளருகிரகித்து என கதை தொடங்குகிறது.
இந்த போதை பழக்கத்தை பரவாமல் தடுக்க, காவல் துறையினர் கையிலெடுக்கும் ஆயுதம் தான் ‘Encounter’. காவல் துறையில் குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று நியாயம் வழங்குவதை காட்டிலும் encounter செய்வதை வழக்கமாக கொண்டுள்ள Encounter Specialist தான் அதியன். ஒரு சின்ன போதை வழக்கை விசாரிக்க தொடங்கி, ஆழமான பல சமூக குற்றங்கள் வெளிப்படுகிறது. இந்த வழக்கை முடிப்பாரா? நிதி வழங்கபட்டதா என்பது தான் ‘வேட்டையன்’ படம்.
‘வேட்டையன்’ படத்தின் திரைக்கதை
கன்னியாகுமாரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அதியன், இந்தியளவில் தலைசிறந்த காவல் அதிகாரிகளில் ஒருவர். எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் அவரை தக்க காரணத்துடன் Encounter செய்வதில் பெயர்போனவர் அதியன். இவருக்கு சரண்யா (துஷாரா விஜயன்) என்ற அரசு பள்ளி ஆசிரியை ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அவர் பணியாற்றும் பள்ளியில் போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக கூற, அதை விசாரித்து அந்த வழக்கை Encounter கொண்டு முடிக்கிறார் அதியன்.
ஆசிரியை சரண்யா பணியிடை மாற்றம் கேட்டு சென்னைக்கு செல்ல, அங்கும் அவரை இந்த பிரச்சனை தொடர்கிறது. ஆசிரியை சரண்யாவுக்கு நடக்கும் அநீதிக்கு பின்னல் இருக்கும் குற்றவாளியை தான் கண்டுபிடித்து அவனை Encounter செய்ய வேண்டும் என்ற முடிவில் களமிறங்குகிறார் அதியன். இவருக்கு துணையாக நக்கலான துறுதுறுவென இருக்கும் ‘Battery’ என்ற பேட்ரிக் (பஹத் பாசில்) ஒரு சைபர் வல்லுனராக வருகிறார்.
தமிழ்நாட்டின் மனித உரிமை வாரியத்தின் தலைவராக, பிரபல நீதிபதியாக வரும் நீதிபதி சத்யதேவ், காவல் துறையினரின் Encounter வழக்கத்தை வன்மையாக கண்டித்து, காவல் துறையினரின் செயலுக்கு எதிராக மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் அதிகாரியாக, அதியன் உடைய பழக்கத்தை கண்டிப்பார்.
ஒரு கட்டத்தில் கல்வி துறையில் நடக்கும் போதை பழக்கம், நுழைவு தேர்வுகளின் பின்னணியில் நடக்கும் பண அரசியல் என பல சமூக பிரச்சனைகளை பேசி, படத்தில் அங்கங்கே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன், நிச்சயமான ப்ளாக்பஸ்டர் படமாக வெளியாகியுள்ளது ‘வேட்டையன்’.
குற்றவாளிகளை encounter மூலமாக வேட்டையாடும் வேட்டையனாக ரஜினிகாந்தும், சத்தியத்துக்கு துணை நின்று, நிதி வழங்க அநீதியால் முடியாது என்ற கோட்பாட்டுடன் அமிதாப் பச்சன், படத்தின் நகைச்சுவை கதையோட்டத்தை தனியாக தாங்கி பிடித்து, சுவாரசியமான பேட்ரிக் பாத்திரத்தில் பஹத் பாசில், கண்ணியமான காவல் துறை அதிகாரி ரூபாவாக ரித்திகா சிங் ஆகியோர் இப்படத்தின் வெற்றிக்கு வலுவான காரணங்களாக இருப்பார்கள்.
‘வேட்டையன்’ கதாபாத்திரங்கள்
தைரியமும், நேர்மையும் கொண்டு குற்றவாளிகளை வேட்டையாடும் ‘அதியன்’ பாத்திரத்தில் தனக்கே உரித்தான ஸ்டைலில் அசத்தியுள்ளார். பல இடங்களில் தன்னுடைய வசீகரமான screen presence ஆல், வெறும் பின்னணி இசையில் இன்றும் அதிரடி காட்டியுள்ளார். 73 வயதிலும் அவர் திரையில் தோன்ற, விசில் பறக்க வரவேற்பு கிடைப்பது அனைவராலும் சாதிக்க முடியாத ஒரு புகழ் ஆகும்.
ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக இன்றும் வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். ஒரு பக்கம் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைலால் கலக்க, முதல் பாதியில் அவருக்கு ஈடு கொடுத்து எதிர்புறம் நிற்கும் ஒரு திரை ஆளுமையாக ‘சத்யதேவ்’ என்ற பாத்திரத்தை ஈர்த்துள்ளார் அமிதாப் பச்சன். இரண்டாம் பத்தியில் இவரின் Monologue, இவரின் நடிப்புக்கு தமிழ் ரசிகர்களுக்கு அத்தாட்சி.
போலீசுக்கு துணைபோகும் திருடன், ‘Battery’ என்ற பேட்ரிக் பாத்திரத்தில் படத்தின் முதல் காட்சி முதல் இவரின் உணர்ச்சிகரமான பாவனைகளும், நக்கல் கலந்த நகைச்சுவையும் என இதுவரை தமிழில் வில்லனாகவே பார்த்த பஹத் பாசிலை, ஒரு படத்தின் நகைச்சுவை பாத்திரமாக எழுதியது சுவாரசியமாக அமைந்தது.
‘சரண்யா’ என்ற உணர்ச்சிகரமான,நேர்மையான ஆசிரியர் பாத்திரத்தில் நடிகை துஷாரா விஜயன் கச்சிதமாக பொருந்தியுள்ளார். முக்கியமாக கன்னியாகுமரியின் வட்டார வழக்கை அருமையாக படத்தில் பேசியுள்ளார். இவரின் பாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்து அதற்கு ஏற்ப நன்றாக நடித்துள்ளார்.
Step into the action with @ritika_offl as she brings her fierce energy to VETTAIYAN 🕶️ Witness the power-packed behind-the-scenes from Script to Screen. 🎬#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/fhKARxfaqk
— Lyca Productions (@LycaProductions) October 9, 2024
ரித்திகா சிங் ஒரு வளர்ந்து அவரும் இளம் காவல் துறை அதிகாரியாக ‘ரூபா’ என்ற கதாபாத்திரத்தில் தைரியமான சண்டை காட்சிகளிலும், துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் தமிழ் சினிமா பாட்ஜ்ஜிரங்களில் நிச்சயமாக ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பின் இந்த படம் நிலையாக இருக்கும்.
ராணா டகுபதி வழக்கமான ஒரு corporate வில்லனாக, குறைவான வசனங்களே இருந்தாலும், சில காட்சிகளில் முக்கியமாக சண்டை காட்சிகளில் சிறப்பாக பயனாகியுள்ளார்.
மஞ்சு வாரியார் ரஜினிகாந்தின் மனைவியாக ‘தாரா’ என்ற பாத்திரத்தில் வழக்கமான துணைவியாக நடித்துள்ளார். இவருக்கான ஒரு ஆக்ஷன் காட்சியிலும் ‘மனசிலாயோ’ பாடலை போல திரையரங்கில் கைதட்டல் பெறுகிறார்.
‘வேட்டையன்’ படத்தின் பலம்
TJ ஞானவேல் அவர்களின் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தேவையான கமர்ஷியல் நுட்பங்களும் சேர்ந்து ஒரு நல்ல கமர்ஷியல் படமாக, நிச்சயமான ப்ளாக்பஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இயக்குனரின் பத்திரிக்கையாளர் அனுபவம் இப்படத்தின் Crime திரில்லர் கதைக்கு உதவியுள்ளது.
#FahadhFaasil – The show stealer 🤩🔥⭐️#Vettaiyan pic.twitter.com/Hx3UQ66O0J
— TimesOfCinema (@timesofcinema_) October 10, 2024
Source: X (Time Of Cinema)
முழுமையாக ஆக்ஷன் படமாக எடுத்துச்செல்லாமல் அதில் நகைச்சுவையை கலக்க, திரைக்கதைக்கு இடையூறாக இல்லாதவாறு நடிகர் பஹத் பாசில் உடைய கதாபாத்திரம் அங்கங்கே தேவையான காமெடி செய்வது பொருத்தம்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் உடைய இசையில் ‘Hunter Vantaar’ பாடல் எப்படி ‘ஜெயிலர்’ படத்தில் ‘Hukkum’ பாடல் ஆக்ஷன் காட்சிகளுக்கு உதவியையோ, அதே போல முதல் வந்த ‘மனசிலாயோ’ பாடலும் படத்தின் பலமாக அமைந்துள்ளது.
‘வேட்டையன்’ படத்தின் பலவீனம்
பல பிரபல நடிகர்களை படத்தில் சேர்த்து அவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் தர முடியாமல் சில காட்சிகளை சேர்த்திருப்பதாக தெரிகிறது. இது ரசிகர்களே கணிக்கும் படியாக ஒரு ஆக்ஷன் கதையில் சேராமல் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களின் குரலை AI மூலம் மாற்றி இப்படத்தில் தமிழ் பேச வைத்துள்ளது நம்பும்படியாக இருந்தாலும், பல இடங்களில் முக்கியமான காட்சிகளில் sync ஆகாமல் இருப்பது அந்த குறையின் மீது கவனத்தை இருக்கிறது.
மொத்தத்தில் ‘வேட்டையன்’ ஒரு பக்கா கமர்ஷியம் ஆக்ஷன் படமாக, சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படமாகவும், வசூல் ரீதியாக களைகட்டும் என்றாலும், படத்தில் சொல்ல வரும் கருத்தான ‘காவல் அதிகாரிகள் குற்றவாளிகளை வேட்டையாடாமல், மக்களின் காப்பாளர்களாக இருக்க வேண்டும்’ என்பதற்கு மாறாக தலைப்பு மட்டும் கமர்ஷியல் படத்துக்கானதாக அமைந்துள்ளது. வார இறுதியில் ஒரு நல்ல என்டேர்டைன்மெண்ட் படமாக, இயல்பான கதையில் பலமான ஆக்ஷனுடன் வெளியாகியுள்ளது ‘வேட்டையன்’.