இயக்குனர் வெற்றிமாறனின் முக்கியமான படங்களில் சமீபகாலத்தில் பெரிதும் பரிந்துரைக்கப்பட்ட படமாகவும் இருந்தது 2023ம் ஆண்டு வெளியான ‘விடுதலை 1’ படம். 1987ல் நடக்கும் கதைக்களத்தில் ஒரு பிரிவினைவாத தலைவரை கைது செய்ய சிறப்பு காவல் திரை பிரிவில் இணையும் ஒரு இளம் காவலரின் கண்ணோட்டத்தில் கதை தொடங்கி, அதிலிருந்து தற்போது ‘விடுதலை 2’ படத்தின் கதைக்கு வித்திட்டுள்ளது.
விடுதலை 2 படத்தின் திரைக்கதை
முதல் பாகத்தின் முடிவில் பிடிபட்ட போராளி பெருமாள் வாத்தியார், அவரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான அனுபவங்களையும், அவரை போராட்டக்களத்திற்கு ஈர்த்த சம்பவங்கள், சமூக அநீதிகள் ஆகியவற்றை பற்றி பகிரும் படம் தான் விடுதலை 2. காவல் துறைக்குள் இருக்கும் அரசியலுக்கு நடுவே பெருமாள் வாத்தியாரின் கதையால் கடமைக்கும் தனிப்பட்ட கண்ணியமான கோட்பாடுகளுக்கும் நடுவே சிக்கி குழப்பத்தில் உள்ள காவலாளி குமரேசன் மற்றும் சிறு குழுவினர் வாத்தியாரை கைது செய்து தங்களின் மற்றொரு பணிமேடைக்கு அழைத்த்துச் செல்லும் வழியில் தன்னுடைய வாழ்க்கைப் பாதையை கதையாக கூறுவது தான் விடுதலை 2 படத்தின் கதைக்களம்.
இந்த கதையில் பலதரப்பட்ட முதல் பாகத்தில் அறிமுகமான கதாபாத்திரங்களும் அவர்களின் கண்ணோட்டத்தில் அவரவரின் முடிவுகளால் கதையை எப்படி நகர்த்துகிறார், குறிப்பாக தலைமை செயலாளர், அமைச்சர் என இவர்களின் நெருக்கடியான முடிவுகளுக்கு அசையும் காவலர்களை எப்படி தன்னுடைய போராட்டக்கள கதைகளால் மாற்றுகிறார் வாத்தியார்? குமரேசனின் மனதில் உள்ள முன்பின் உரையாடலுக்கு குலத்துக்கும் தீர்வு கிடைக்குமா? இதையெல்லாம் புறம் தள்ளி இன்று சமுதாயத்தில் ஓரளவுக்கு ஏற்ற தாழ்வுகள் இல்லாதவாறு செய்ய இப்படியான போராளிகளின் பின்கதையும் அவர்களின் பேசப்படாத தியாகங்களையும் தீவிரமாக பேசியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
வாத்தியாராக விடுதலை முதல் பக்கத்திலேயே தனித்துவமான பதிவை விட்டுச் சென்ற விஜய் சேதுபதி, விடுதலை 2 படத்திலும் பெருமாள் வாத்தியார் யார்? அவர் ஆசிரியராக இருந்து போராளியாக மாறிய காரணம் என்ன என்பதை கதை காட்ட, ஒரு இளம் போராளியாக அதற்கான வியப்புடனும், வழிநடத்தும் கேகே அவர்களிடம் பாடம் கற்பதில் மாற்றத்தையும் நிகழ் காலத்தில் கைதானபோதும் தன்னுடைய அனுபவம் காட்டும் பொறுமையையும் மிக அழகாக காட்டியிருந்தார்.
We are excited to announce that Viduthalai Part 2 is coming to theaters worldwide on December 20. Get ready for the next chapter!#ViduthalaiPart2FromDec20
— RS Infotainment (@rsinfotainment) August 29, 2024
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4… pic.twitter.com/G3MDa4uFKc
சூரி தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் குமரேசனுக்கு எழுதப்பட்ட குறைவான வசனங்களை ஏர்த உடல்மொழியுடன் திறம்பட செய்துள்ளார். பெரும்பாரியான நடிப்பை முகபாவனைகளால் கடத்தும் சூரிக்கு குமரேசனாக இரண்டாம் பாகத்தில் பெரிய பங்கு இல்லை என்றாலும் தனித்து தெரிகிறார்.
கென் கருணாஸ் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் எப்படி துடிப்பான, கோவை முனைப்புடன் நடக்கும் கதாபாத்திரத்தில் நடித்தாரோ, அதேபோல விடுதலை 2ம் பாகத்திலும் முதல் பாதியில் தெளிவான நடிப்பை காட்டியிருக்கிறார். அவரின் காட்சிகள் சமூகத்தில் நடக்கும் கொடூரங்களை சுட்டிக் காட்டி உணர்ச்சிகளை தூண்டும் விதமாக அமைந்தது.
மஞ்சு வாரியர் மகாலக்ஷ்மி என்ற பெண் போராளியாக, தனிப்பட்ட வன்முறையை கடந்தும், ஆதிக்க குணம் கொண்ட தன குடும்பத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் என ஒரு தனித்துவமான கம்பிரமான பாத்திரத்தில் வருகிறார். அவரின் பாத்திரத்தின் அடித்தளம் தெரியாமல் போனாலும் அவரின் தரப்பில் கதாபாத்திரத்தை நன்றாக வெளிக்காட்டியுள்ளார்.
படத்தின் பலம்
இயக்குனர் வெற்றிமாறன் ஒரு புது காவலாளியின் கண்ணோட்டத்தில் அரசாங்கமே தேடும் ஒரு ‘பிரிவினைவாதியை’பிடிக்கும் முனைப்புடன் முதல் பாகத்தையும் அதே போராளியின் கண்ணோட்டத்தில் அவரின் பின்கதையையும் காட்ட நினைத்ததும், அதற்கு அவர் பயன்படுத்திய கதைகள், கருப்பன் என்ற ஆயுதம், தத்துவங்களும் கொள்கைகளும் நிச்சயம் பேசப்பட வேண்டியவை.
ஒரு கதையில் ஒன்றிரண்டு பாத்திரங்களை தனித்துவமாக எழுதுவதே சவாலாக அமையும் நிலையில் காவல் துறையில் எப்படியாவது, எதை செய்தாவது அதிகாரத்துவமான நிலையினுள் இருக்கவேண்டும் என நினைக்கும் சேத்தன் அவர்களின் கதாபாத்திரம், அரசாங்க அதிகாரியாக விடிந்தால் கேள்விகளில் சிக்காமல் இருக்க தந்திரமாக யூகிக்கும் ராஜிவ் மேனனின் பாத்திரம் எழுதியதாக்கட்டும், இவர் இருவரிலும் சேராமல் நடுநிலையில் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியுள்ள இளம் காவலாளி போன்ற பாத்திரங்களை கதையில் சேர்த்திருப்பது அற்புதம்.
படத்தின் பலவீனம்
கதையோட்டத்தின் பல்வேறு இடங்களில் தேவையான கருத்துக்களை நெற்படையாக பகிர்ந்தாலும், வசனங்கள் வாயிலாகவும், பின்னணி குரல் கொண்டும் பெருவாரியான படத்தை நகர்த்தியுள்ளது கதையின் கருவை மீண்டும் மீண்டும் மனதில் பதிய வைக்க செய்யும் முயற்சியாக செய்கிறது.
The revolution returns with more intensity, more drama, & more power! Watch #ViduthalaiPart2 on big screens from today!
— RS Infotainment (@rsinfotainment) December 20, 2024
Film by #VetriMaaran
Book tickets here: https://t.co/VGUgLXc0N1
An @ilaiyaraaja Musical… pic.twitter.com/9ryJLI3YAj
விடுதலை 1 மற்றும் 2ம் பக்கங்களில் முக்கியமான கதாபாத்திரங்களாக காட்டப்பட்ட மகாலட்சுமி மற்றும் தமிழரசி ஆகியோரின் முக்கியத்துவத்தை காட்டினாலும் கதையில் அவர்களுக்கான தனித்துவமான கருத்துக்களை வெளிப்படையாக காட்டாதது வெறுமையாக தெரிகிறது. முதல் பாகத்தில் முக்கியமான பத்திரமாக வந்த தமிழரசி இரண்டாம் பாகத்தில் ஒரே ஒரு காட்சியில் வருவதும், பெண் போராளியான மகாலட்சுமியின் பின்னணியை இன்னும் தெளிவாக காட்டியிருந்தால் படத்துக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
விடுதலை 2 அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் போராட்டத்தின் வழியாகவும் அயராத முயற்சிகளாலும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய போராளிகளின் தியாகத்தை தெளிவாக பேசினாலும் அதை கதை முழுவதும் மீண்டும் மீண்டும் வசனங்களால் பேசியிருப்பது கதையை தளர்ச்சியடைகிறது.