இந்திய சினிமாவின் சூழல், கதை சொல்லும் பாணி, திரைக்கதையில் நவீனத்துவம் என சினிமா பல முன்னேற்றங்களை கண்டுவரும் இந்த சூழலில் ஒரு ஹீரோ டேட் கொடுத்துவிட்டார், ஒரு தயாரிப்பு நிறுவனம் என்னை நம்பி பணம் போடுகிறது, நான் என்னுடைய அதே பழைய புளித்த மாவிலேயே தோசை சுடுவேன் என்று சுட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ‘ரத்னம்’.

கதை பாகவதர் காலத்துக்கதைதான். சிறுவயதில் தாயை இழக்கும் விஷாலை எடுத்துவளர்க்கிறார் சமுத்திரக்கனி. தன்னை வளர்க்கும் சமுத்திரக்கனிக்காக ஒரு கொலை சம்பவத்தை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்கிறார் விஷால். ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது பெரிய எம்எல்ஏ-வாக உருவெடுத்து நிற்கிறார் சமுத்திரக்கனி. அரசியல்வாதி சமுத்திரக்கனியின் வலதுகரமாக இருந்து தவறு செய்பவர்களைத் தூக்கிப்போட்டு மிதிக்கிறார் விஷால். இந்தசூழலில் தன் ஊரில் நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக வரும் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் கொல்லத்துரத்துகிரது. பார்ப்பதற்கு தன் அம்மா சாயலில் இருக்கும் பிரியா பவானி சங்கரை காப்பாற்றுவதற்காக வேலூரில் இருந்து ஆந்திராவுக்குப் பறந்துபோய் சண்டை போடுகிறார், வில்லன்களை சம்பவம் செய்கிறார் என அதே டெய்லர் அதே வாடகை!

சுகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.


கொஞ்சம் செண்ட்டிமெண்ட், நிறைய ஆக்ஷன், காமெடிக்கு யோகி பாபு என எல்லா ஹிட் ஃபார்முலாவையும் கலந்துகட்டி மிக்ஸியில் அடித்து அதில் என்ன வருகிறதோ அதைப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் ஹரி. ஆனால், சாரி சாரே… இந்த ரத்னத்தை ரசிக்கமுடியவில்லை!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]