ராஜா ராணி, நேரம், நய்யாண்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக தமிழில் இருந்துவந்தவர் Nazriya . தற்போது Web Series மூலம் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார்.
8 வயது முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நஸ்ரியா 19 வயதில் ஹீரோயின் ஆக மலையாளம், தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் Nazriya. நேரம், ராஜா ராணி போன்ற படத்தில் நஸ்ரியாவின் கியூட் ரியாக்சன், குழந்தைத்தனம் என ரசிக்கவைத்தார்.

முன்னணி நடிகையாக இருக்கும் போதே பகத் பாசிலை திருமணம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பின்னர் மலையாள சினிமாவில் நடித்து வந்த Nazriya 2014 -ஆம் ஆண்டு ஜெய் உடன் நடித்த திருமணம் எனும் நிக்கா படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை.
இந்நிலையில் இயக்குனர் A L. விஜய் தயாரிக்கும் புதிய Web Series மூலமாக தமிழ் சினிமா பக்கம் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளார். இதற்கான ஷூட்டிங் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் Web Series குறித்த அப்டேட் விரைவில் வெளியாகியுள்ளன.

இந்த வெப் தொடரில் Nazriya முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, நடராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகவுள்ள இந்த Web Series -ஐ சூர்யா பிரதாப் இயக்குகிறார்.

இதற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், படத்தின் கதை 1940 -களில் நடந்த ஒரு உண்மை சம்பவமான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு பற்றிய கதையை மையப்படுத்தி இந்த Web Series -ஐ எடுக்கவுள்ளனர். மேலும் அன்றைய சூப்பர் ஸ்டார் நடிகரான தியாகராஜர் பாகவதர் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளதாகவும். நஸ்ரியா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெப் சீரிஸின் படப்பிடிப்பு முடிந்து தீபாவளி சமயம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]