Stand Up நகைச்சுவையாளர் அபிஷேக் குமார், நடிகர் சேத்தன், நடிகை தேவதர்ஷினி, ஆனந்த் சாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘தலைவெட்டியான் பாளையம்’. நகரத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர், ஒரு கிராமத்தின் ஊராட்சிமன்ற secretary ஆகிறார். அந்த ஊரில் அவர் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களை பேசும் கதையாக இது உருவாகியுள்ளது.
When a city boy meets the village life, what could possibly go wrong? Or right? 🤔#ThalaivettiyaanPaalayamOnPrime, Sept 20 pic.twitter.com/LtwJbf8OxK
— prime video IN (@PrimeVideoIN) September 16, 2024
தொலைக்காட்சியில் பிரபலமான தொடராக ஒளிபரப்பான ‘மர்மதேசம்’ தொடரின் இயக்குனர் நாகா, முதல் முறையாக ஒரு web series -ஐ இயக்கியுள்ளார். ஹிந்தியில் இதே Amazon Prime Video -வில் 3 சீசன்களாக ஒளிபரப்பான ‘Panchayat‘ தொடரின் தமிழ் ரீமேக் ஆகும்.
நகரத்து பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்), ஒரு ‘தலைவெட்டியான் பாளையம்’ என்ற கிராமத்துக்கு கிராம பஞ்சாயத்து அலுவலக செயலாளர் (secretary) ஆக வேலை கிடைத்து செல்கிறார். தன்னுடைய IIM கனவை நினைவாக்க இந்த வேலையை செய்துகொண்டே CAT தேர்வுக்கு தயாராக திட்டம் போடுகிறார். இதில் ஆவர் எதிர்பார்க்காத பல இன்னல்களை அவர் சந்திக்க நேர்கிறது, அதையெல்லாம் எப்படி அவர் கடந்து வரும் மக்கள், சூழல்கள் என அனைத்தையும் பேசும் தொடர் இது.
Panchayat மற்றும் தலைவெட்டியான் பாளையம்
ஒரிஜினல் கதையில் உள்ள கதாபாத்திரங்கள், கதைக்களம், கருத்துக்கள் என பல இடங்களில் ஹிந்தியில் எடுக்கப்பட்ட கதைக்கு நிகராக தமிழில் எடுத்துள்ளார்கள். ஒவ்வொரு எபிசோடும் ஹிந்தியில் வெளியாகியுள்ளபடியே வசனங்களும் பல இடங்களில் பொருந்த எடுத்திருப்பது, ‘Panchayat’ தொடரை பார்த்த ரசிகர்களுக்கு புரியும்படியாக இருந்த்தது.
ஹிந்தி பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டிய குழந்தை கட்டுப்பாடு போன்ற கருத்துக்களை நீக்கி, தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்ப மாற்றியதும் ஒரு மாற்றமாக உள்ளது. பல இடங்களில் தமிழ் கிராமத்தின் இயற்கையான தனித்தன்மை படமாக்கப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்கள்
சித்தார்த் (Secretary) – அபிஷேக் குமார்
மீனாட்சி தேவி (பஞ்சாயத்து தலைவி) – தேவதர்ஷினி
மீனாட்சி சுந்தரம் (பஞ்சாயத்து தலைவர்) – சேத்தன்
பிரபு (துணை தலைவர்) – ஆனந்த் சாமி
லட்சுமிபதி (உதவியாளர்) – பால் ராஜ்
இந்த தொடரின் நிறைகள்
நிஜமாகவே ‘எருமைவெட்டியான் பாளையம்’ என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்ததால், திரையில் ஒரு கிராமத்து வாழ்வியலை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். கிராமங்களுக்கு என்றுள்ள நய்யாண்டித்தனமான நகைச்சுவையும், ஒரு அழகான வாழ்வியலும் இதில் தெரிகிறது.

நகைச்சுவையான பல காட்சிகள் சரியாக பொருந்தி, நடிகர்களுக்கு இடையே உள்ள புரிதலை காட்டுகிறது. முக்கியமாக அபிஷேக் குமார் பல இடங்களில் புரியாமல் தவிப்பதும், அதற்கு சேத்தன் மற்றும் ஆனந்த் சாமியின் நக்கலான பேச்சும் புன்னகைக்க வைக்கிறது.
ஒரு கிராமத்தில் எந்த ஒரு விழாவோ, துக்கமோ அனைவரும் பங்குபோட்டு பகிர்வதும், எப்படி இன்றும் அவர்களின் நம்பிக்கைகள் மாறாமல் செழிப்பாக இருப்பதையும் பேசியுள்ளார்கள். முக்கியமாக முருங்கைக்காய், Monitor, TVS வண்டி என பல பொருட்களை பிரதானமாக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த தொடரின் குறைகள்
ஹிந்தியில் நடிகர் ஜிதேந்திரா குமார் உடைய பாத்திரத்துக்கான ரசிகர்களை தமிழில் அபிஷேக் குமார் சம்பாரித்து சற்றே கடினமான வேலையாக இருந்தாலும், நகைச்சுவை கலைஞராக இருக்கும் அபிஷேக் இந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக பல இடங்களில் இல்லை.
அதேபோல் பஞ்சாயத்து துணை தலைவர் மற்றும் உதவியாளர் பாத்திரங்களும் ஹிந்தியில் வெளியான தொடரில் பலரின் மனதை கவர்ந்த பாத்திரங்கள். தமிழில் பல நாட்களுக்கு பின்னர் நடிகர் ஆனந்த் சாமி திரையில் தோன்றியிருந்தாலும், அவருக்கான பங்கு குறைவாகவே இருந்தது. முக்கியமாக அத்தான் அத்தான் என நடிங்கர் சேத்தன் உடைய பாத்திரத்துக்கு துணை போவது போன்றதாக இது அமைந்தது.

Thalaivettiyan Palayam விமர்சனங்களை தாண்டி, ஒரு எளிமையா எளிமையான, நகைச்சுவையான தொடராக அமையும். ‘Panchayat’ தொடரை பார்க்காத பலருக்கும் இந்த தொடர் பிடிக்கலாம், ஹிந்தியில் பார்த்த பார்வையாளர்கள் பல இடங்களில் ஒப்பிட்டு குறைகளை சுட்டிக்காட்டுவார்கள்.
அடேங்கப்பா!! 100 கோடிக்கு Kanguva படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய Amazon Prime!
3 சீசன்களாக இந்தியா முழுவதும் பிரபலமான தொடரை தமிழில் ரிமேக் செய்வதால் ஏற்படும் பின்னடைவுகள் இந்த ‘தலைவெட்டியான் பாளையம்’ தொடரிலும் இருக்கிறது, ஆனால் இதில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் இதை ஒரு எளிமையான, லேசான தொடராக மாற்றியுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]