தமிழில் ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிபி சத்யராஜ், தற்போது 2 வருட பெரிய இடைவேளைக்குப் பிறகு ஒரு கிரைம் திரில்லர் படத்துடன் அசத்தலான கம் பேக் கொடுத்துள்ளார். புதுமுக இயக்குனர் இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில் ’10 Hours’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
Dear Friends,
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 9, 2025
Here’s the Official Trailer of Ten Hours!Kindly retweet and share it with your family and friends!😊🙏🏻❤️
Releasing very soon!https://t.co/dkw3O40MhJ#TenHours#TenHoursOfficialTrailer #TenHoursTrailer #SSR19@5starsenthilk@DuvinStudios@ilaya_director…
10 Hours படத்தின் ட்ரைலர் விமர்சனம்
சென்னையில் இருந்து கிளம்பும் தனியார் இரவு பேருந்தில் ஒரு கொலை நடக்க, அதை ஒருவர் மட்டும் காவல் துறைக்கு அறிவிக்கிறார். மற்ற பயணிகள் உறங்கும் நேரத்தில் நடக்கும் இந்த கொலையை செய்தவர் நிச்சயமாக அந்த பேருந்தில் தான் இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் காவல் அதிகாரி சிபி சத்யராஜ் விசாரணையை தொடங்குகிறார். 10 மணிநேர பேருந்து பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு நடுவே கொலையாளி இருக்கிறாரா? கொலை நடப்பதற்க்கான காரணம் என்ன? கொலையாளி யார்? காவல் நிலையத்தில் மேலும் ஒரு கொலைத் தாக்குதல் நடந்ததர்க்கும் இதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? இப்படி பல சுவாரசியமான கேள்விகளை கிளறி எழுப்பும் வகையில் ’10 Hours’ படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது. இந்த படம் முதலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் குறிப்பிடப்படாத தேதியில் வெளிகாவுள்ளது.
10 Hours பட நடிகர்கள் மற்றும் படக்குழு
சிபி சத்யராஜ்
கஜராஜ்
திலீபன்
ஜீவா ரவி
சரவணன் சுப்பையா
ராஜ் ஐயப்பா
இளையராஜா கலியப்பெருமாள் – இயக்குனர்
ஜெய் கார்த்திக் – ஒளிப்பதிவாளர்
KS சுந்தரமூர்த்தி – இசையமைப்பாளர்
டுவின் ஸ்டுடியோஸ் – தயாரிப்பு நிறுவனம்
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]