Home Cinema News IAS கனவு To  தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகை- Raashii Khanna

IAS கனவு To  தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகை- Raashii Khanna

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக தனது 10 வருடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் Raashii Khanna. 

by Sudhakaran Eswaran

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக தனது 10 வருடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் Raashii Khanna. 

டெல்லியில் உள்ள செயின்ட் மார்க்ஸ் சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்து, டெல்லி லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஆங்கிலம் படிப்பில் பட்டம் பெற்றார். பள்ளி கல்லூரி படிக்கும் போதே பாடுவதில் ஆர்வம் கொண்டு பல மேடைகளில் பாடி வந்தார். 

Raashii Khanna

பள்ளி படிக்கும் போது நன்றாக படித்து வந்த Raashii Khanna IAS ஆஃபீஸ்ர் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவில் இருந்தார். ஆனால் மாடலிங் துறையில் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி நடிப்பின் பக்கம் திரும்பினார்.   

பள்ளி படிக்கும் போது சற்று குண்டாக இருந்தார். அதனால் பல உருவ கேலிக்கு ஆளானார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.   

முதன் முதலில் 2013-ல் மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஓரளவு வரவேற்பை பெட்ரா நிலையில் தெலுங்கு படமான “மனம்” படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். 

Actress Raashii Khanna

இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தராத Raashii Khanna-விற்கு 2014-ல் மூன்றாவது படமான “ஓஹலு குசகுசலாடே” என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஆக நடித்து அசத்தியிருந்தார்.  

புதுமுக நடிகர்களை கொண்டு நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. சுதீப் கிருஷ்ணன், ரவி தேஜா, கோபி சந்த், ராம் பொதினேனி, சாய் தரம் தேஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தி வந்தார். 

தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்த Raashii Khanna தமிழில் “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 

அதன் பின்னர் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் என தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். இனியையாக பேசும் குணம், எல்லாரையும் மதிக்கும் பண்பு என தென்னிந்திய சினிமாவில் தன்னை நிலை நிறுத்தினார்.    

World Famous Lover poster

விஜய் தேவர்க்கொண்டவுடன் நடித்த “World Famous Lover” படம், தனுஷ் உடன் “திருச்சிற்றம்பலம்”, கார்த்தியுடன் “சர்தார்”, சுந்தர் சி -ன் “அரண்மனை 3 மற்றும் 4” என தனது கேட்ராக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்தார். 

Farzi poster

இதற்கிடையே “ருத்ரா” என்ற கிரைம் த்ரில்லர் web series மற்றும், “Farzi” என்ற த்ரில்லர் web series ஆகிய இரண்டு சீரிஸ்கள் ரசிக்கும் படியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து தற்போது 10 வருடங்களை கடந்துள்ளார். 

திறமையான நடிப்பு, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நிறைய கற்றுக்க வேண்டும் என்ற எண்ணம் போன்றவை Raashii Khanna-விடம் அதிகமாக இருப்பதால் இனி வரும் காலங்களில் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வர அதிகம் வாய்ப்புள்ளது.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.