1970 காலகட்டத்தில் இருந்து பெரும்பாலான படங்கள் காதல், சண்டை, செண்டிமெண்ட் நிறைந்த படங்களாகவே வெளிவந்திருந்தது. அந்த கால கட்டத்தில் திரில்லர் படங்கள் குறைவாகவே வந்தாலும் ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருந்தது. அந்தவகையில் 1970 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் வெளியான சைக்கோ, Thriller படங்கள்.
சிகப்பு ரோஜாக்கள்

1978-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜாவின் மாறுபட்ட முயற்சியில் வெளியான இந்த படத்தில் பாக்யராஜ் இவருக்கு உதவியாக கதையை எழுதியிருப்பார். இசைஞானி இளையராஜா இசையமைத்து, கே.ஆர்.ஜி புரொடக்சன் இந்த படத்தை வெளியிட்டு இருக்கும். கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட்டானது. 70 காலகட்டத்தில் பெரிதாக சொல்லும் படியாக த்ரில்லர் படங்கள் வராத நிலையில் இந்த படத்தை வெளியிட்டு அனைவரையும் மிரட்டினார் பாரதிராஜா. இந்த படத்தில் பெண்களை வெறுக்கும் சைக்கோ கதாப்பாத்திரத்தில் மிரட்டலாக கமல் நடித்திருப்பார். இந்த காலகட்டத்தில் வந்த மன்மதன், ராட்சசன் போன்ற சைக்கோ திரில்லர் படங்களுக்கு அடித்தளமிட்டதே சிகப்பு ரோஜாக்கள் படம் தான். இந்த படத்தில் கமல் மற்றும் ஜானகி கூட்டணியில் பாடப்பட்ட “நினைவோ ஒரு பறவை” என்ற பாடல் இன்றளவும் ரசிக்கும் படியாக இருந்து வருகிறது.
மூடு பனி

1980-ல் பாலு மஹிந்த்ரா இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான படம் மூடு பனி. இதில் பிரதாப், ஷோபா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு வீட்டை மட்டுமே மைய்யப்படுத்தி கதையை அமைத்திருப்பார் இயக்குனர். அவர் இயக்கிய படங்களில் இந்த படம் அவருக்கு பெரிய அளவில் பேசப்படும் படமாக அமைந்தது. சைக்கோ கதாப்பாத்திரத்தில் பிரதாப் இறந்த தனது அம்மாவின் எலும்பை வீட்டில் வைத்து பார்ப்போருக்கு பயத்தை காட்டியிருப்பார். அங்கிருந்து கதாநாயகி எப்படி தப்பிப்பார் என்பது தான் கதை. பெரிதாக வசனம் இல்லாமல் இசை மற்றும் நடிப்பை மட்டுமே வைத்து அனைவரையும் மிரட்டியிருப்பார். “என் இனிய பொன் நிலாவே” என்ற பாடல் இந்த படத்தில் சூப்பர் ஹிட்டானது.
கரையெல்லாம் செண்பகப்பூ

1981-ஆம் ஆண்டு ஜீ.என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான படம் கரையெல்லாம் செண்பகப்பூ. பிரதாப், ஸ்ரீப்ரியா, சுமலதா, சுந்தர் ராஜ், மனோரமா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி யாரும் எதிர்பாக்காத வகையில் இருந்தது.
பாடும் பறவை

1985-ஆம் ஆண்டு வம்சி இயக்கத்தில் வெளியான படம் பாடும் பறவை. கார்த்திக், பானுப்ரியா, சரத் பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஒரு சிறிய மலை கிராமத்தில் நடைபெறும் கொலையை கண்டு பிடிக்க கார்த்திக் செல்வார். காட்டுப்பகுதியில் உள்ள புலிகள் மனிதரை கொள்வதாக ஊர் மக்கள் நம்பி வந்த நிலையில் கார்த்திக் கொலைகாரனை கண்டு பிடித்தாரா என்பது தான் மீதி கதை. கிளைமேக்ஸ் வரை திரில்லராக கதையை கொண்டு சென்றிருப்பார் இயக்குனர்.
சஸ்பென்ஸ் Thriller படங்களுக்கு முன்னோடி… Balu Mahendra’வின் மாறுபட்ட படைப்பு…
சபாஷ்

2000-ஆம் ஆண்டில் இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில் பார்த்திபன், திவ்யா உன்னி, ரஞ்சித் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் சபாஷ். ஒரு விபத்தில் கண் பார்வை இழந்த பார்த்திபன் தனது மனைவி இறந்ததில் சந்தேகம் கொண்டு கண் பார்வை தெரிந்தும் தெரியாததை போன்று நடிப்பார். பார்த்திபன் மனைவியை கொன்றது யார் என்பது தான் மீதி கதை. ரஞ்சித் பார்த்திபன் ஆகியோர் நண்பர்களாக நடித்திருப்பார்கள்.
சிநேகிதியே

2000-ஆம் ஆண்டில் பெண்களை மட்டுமே மையப்படுத்தி வெளியான படம் சிநேகிதியே. ஜோதிகா, தபு, சர்பணி முக்கர்ஜி, லட்சுமி, மனோரமா ஆகியோர் நடித்த இந்த படத்தை பிரியதர்சன் இயக்கியிருப்பார். கல்லூரி நண்பர்கள் காதல் வாழ்க்கையை மையப்படுத்தி சஸ்பென்ஸ், திரில்லர் கொண்டு படத்தை எடுத்திருப்பார். கிளைமேக்ஸ் கட்சியில் தபு, ஜோதிகா நடிப்பு சிறப்பாக இருக்கும். கிளைமேக்ஸ் காட்சியில் இடம் பெரும் “ராதை மனதில்” பாடல் சூப்பர் ஹிட்டானது.
மக்களின் பொழுதுபோக்கிற்கு காதல், செண்டிமெண்ட், சண்டை, போன்ற படங்கள் மட்டுமல்ல திரில்லர், திகில் போன்று பயத்தை ஏற்படுத்தும் விதமாக படங்கள் வந்தால் கூட அதனை ரசிக்கும் மனநிலையை கொண்டுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]