Home Cinema News இந்த வாரம் OTT-யில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

by Sivaanantham RB

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். இன்னொரு புறம் பெரிய படம், சின்ன படம் என்று பார்க்காமல், எதுவாக இருப்பினும் அதை OTT-யில் வெளியான பிறகே பார்க்க விரும்பும் ரசிகர்களும் உண்டு. அவர்களுக்காக இந்த வாரம் OTT-யில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

மிஷன் சேப்டர் 1

24 65a7b29683618

அருண் விஜய் ஹீரோவாக நடித்த ‘மிஷன் சேப்டர் 1‘ இந்த ஆண்டு (2024) ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை ‘மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா’ போன்ற  படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நிமிஷா சஜயன், எமி ஜாக்சன், இயல் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த வாரம் இப்படம் ‘ஆஹா’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

ஹனுமான்

hanuman 1705073501 edited

தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்த ‘ஹனுமான்‘ இந்த ஆண்டு (2024) ஜனவரி 12-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் வினய், வரலக்ஷ்மி சரத்குமார், அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த வாரம் இப்படம் ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

ஆபரேஷன் லைலா

maxresdefault 2

ஸ்ரீகாந்த் நடித்த ‘ஆபரேஷன் லைலா‘ கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சித்திகா ஷர்மா, வின்சென்ட் அசோகன், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு எஸ்.கார்த்திகா மகாதேவ் இசையமைத்திருந்தார், கே.கே ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த வாரம் இப்படம் ‘சிம்ப்ளி சவுத்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இ-மெயில்

bg email edited

அசோக் நடித்த ‘இ-மெயில்‘ கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ராகினி திவேதி, ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், வனிதா, அக்ஷய் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த வாரம் இப்படம் ‘சிம்ப்ளி சவுத்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

பவுடர்

WhatsApp Image 2022 10 01 at 18.20.36

வித்யா பிரதீப் நடித்த ‘பவுடர்’ 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் விஜய்.ஸ்ரீ.ஜி இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நிகில் முருகன், ஷாந்தினி தேவா, மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, வையாபுரி, ஆதவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனை ‘G மீடியா’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த வாரம் இப்படம் ‘ஜியோ சினிமா’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

பெல்

1644872 whatsappimage2023 10 03at54007pm

குரு சோமசுந்தரம் – ஸ்ரீதர் இணைந்து நடித்த ‘பெல்’ கடந்த ஆண்டு (2023) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.வெங்கட் புவன் இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நிதிஷ் வீரா, பீட்டர் சக்கரவர்த்தி, துர்கா, ஜேக் அருணாச்சலம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனை ‘ப்ரோகன் மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த வாரம் இப்படம் ‘ஜியோ சினிமா’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

பில்டர் கோல்ட்

maxresdefault 3

விஜயபாஸ்கர் இயக்கி, நடித்த ‘பில்டர் கோல்ட்‘ 2021-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவ இளங்கோ, நடராஜ், சாய் சதீஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனை ‘சர்வைவல் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த வாரம் இப்படம் ‘ஜியோ சினிமா’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.