Home Cinema News இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின்  லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின்  லிஸ்ட்!

by Sivaanantham RB

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். அவர்களுக்காக இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…  

கள்வன்

gv prakash kalvan 044831337

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘கள்வன்’. இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கிறார் பி.வி.ஷங்கர். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாரதிராஜா, தீனா, ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று (ஏப்ரல் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

தி ஃபேமிலி ஸ்டார்

Untitled design 29

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள புதிய தெலுங்கு படம் ‘தி ஃபேமிலி ஸ்டார்‘. இந்த படத்தை இயக்குநர் பரசுராம் இயக்கியுள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாள் தாகூர் டூயட் பாடி ஆடியுள்ளார். இதற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

ஒயிட் ரோஸ்

maxresdefault 1

பிரபல நடிகை ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்திருக்கும் புதிய படம் ‘ஒயிட் ரோஸ்’. இந்த படத்தை இயக்குநர் கே.ராஜசேகர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஆர்.கே.சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நக்ஷத்ரா, சசிலயா, தரணி ரெட்டி, வர்ஷினி, ராஜசிம்மன், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சுதர்சன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

டபுள் டக்கர்

2012235 double tuckerr movie

‘போதை ஏறி புத்தி மாறி’ பட புகழ் தீரஜ் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘டபுள் டக்கர்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் மீரா மகாநதி இயக்கியுள்ளார். இதில் தீரஜ்ஜிற்கு ஜோடியாக ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

இரவின் கண்கள்

iravin kangal 1461813

பாப் சுரேஷ் என்பவர் ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கும் புதிய படம் ‘இரவின் கண்கள்’. சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதில் மிக முக்கிய ரோல்களில் டோலி ஐஷு, கிரி துவாரகிஷ், செல்வகாந்தன், அழகு ராஜா, தருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சார்லஸ் தனா இசையமைத்துள்ளார், கீதா கரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

ஒரு தவறு செய்தால்

oru thavaru seidhal et00393742 1712124703 edited

மணி தாமோதரன் என்பவர் இயக்கியிருக்கும் புதிய படம் ‘ஒரு தவறு செய்தால்’. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் பாரி, ஸ்ரீ, உபசனா, சுறா சுரேந்தர், சந்தோஷ், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘KMP பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு கே.எம்.ராயன் இசையமைத்துள்ளார், விஜய கிருஷ்ணா & மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படம் நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

ஆலகாலம்

500x300 2051030 whatsappimage2024 04 04at60348pm

‘காலா’ புகழ் ஈஸ்வரி ராவ் நடித்திருக்கும் புதிய படம் ‘ஆலகாலம்’. இந்த படத்தை இயக்குநர் ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சாந்தினி தமிழரசன், ஜெய கிருஷ்ணமூர்த்தி, தங்கதுரை, பாபா பாஸ்கர், தீபா, கோதண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார், சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.