Home Cinema News இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். அவர்களுக்காக இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் வெளிவந்திருக்கிறது.

by Naveen Dhayalan

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். அவர்களுக்காக இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…  

டியர்

Untitled design 53

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘டியர்’. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரோகிணி, காளி வெங்கட், இளவரசு, கீதா கைலாசம், நந்தினி மாதேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஏப்ரல் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

ரோமியோ

1191034 edited 1

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘ரோமியோ’. இந்த படத்தை இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஏப்ரல் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

வல்லவன் வகுத்ததடா

tumblr 388c95c338bebec3574cf9ad2095c95c c284a6f6 1280 edited

தேஜ் சரண்ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘வல்லவன் வகுத்ததடா’. இந்த படத்தை இயக்குநர் விநாயக் துரை இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு சகிஸ்னா சேவியர் இசையமைத்துள்ளார், கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை (ஏப்ரல் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

வா பகண்டையா

sddefault edited

ப.ஜெயகுமார் என்பவர் இயக்கியுள்ள புதிய படம் ‘வா பகண்டையா’. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் விஜயா தினேஷ், ஆர்த்திகா, நேலன், யோகி ராம், நிழல்கள் ரவி, சுந்தர்ராஜன், மனோபாலா, அப்புக்குட்டி, காதல் சுகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார், வி.ஆர்.ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.