Home Cinema News இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். அவர்களுக்காக இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் வெளிவந்திருக்கிறது.

by John Kamalesh

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். அவர்களுக்காக இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…  

வல்லவன் வகுத்ததடா

VallavanVaguthadhada

தேஜ் சரண்ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘வல்லவன் வகுத்ததடா‘. இந்த படத்தை இயக்குநர் விநாயக் துரை இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு சகிஸ்னா சேவியர் இசையமைத்துள்ளார், கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

ஃபைண்டர்

FINDER

பிரபல நடிகர் சார்லி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘ஃபைண்டர். இந்த படத்தை இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கியதுடன், முக்கிய ரோலிலும் நடித்திருக்கிறார். மேலும், சென்ராயன், நிழல்கள் ரவி, தாரணி, ப்ரனா, நாசர் அலி, கோபிநாத் ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு சூர்ய பிரசாத் இசையமைத்துள்ளார், இ.பாபு அந்தோணி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.

சிறகன்

Siragan 1

பிரபல நடிகர் கஜராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘சிறகன்’. இந்த படத்தை இயக்குநர் வெங்கடேஸ்வராஜ் இயக்கி, எடிட் செய்திருக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜீவா ரவி, வினோத், ஆனந்த் நாக், பூவேந்தன், பாலாஜி வெங்கட்ராமன், மாலிக், ஹர்ஷிதா ராம், ஹரி சாணக்யா, ஆனந்த் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ராம் கணேஷ்.கே இசையமைத்துள்ளார். இப்ப்படம் வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.  

ரூபன்

Rooban 2

விஜய் பிரசாத் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘ரூபன்’. இந்த படத்தை இயக்குநர் ஐயப்பன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் காயத்ரி, ஆறுமுகம், ராஜா, இளங்கார்த்திகேயன், சார்லி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு அரவிந்த் பாபு இசையமைத்துள்ளார், ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராம்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகுகிறது.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.