2024 -ல் ஜூன் மாதம் வரை 120-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் வெறும் 6 படங்கள் மட்டுமே ரசித்து கொண்டாட கூடிய வகையில் Hit ஆகி உள்ளது.
பெரிய ஹீரோக்களின் படங்கள் முதல் பாதியில் பெரிதாக வரவில்லை என்றாலும் ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியானது. இவை எதிர்பார்த்த வெற்றியை தந்ததா என சொல்ல முடியாத வகையில் சுமாரான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

பொங்கல் சமயம் வெளியான கேப்டன் மில்லர், அயலான் போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியில் சுமார் என்றுதான் கூற வேண்டும். ரஜினியின் லால் சலாம் வசூலில் ஓரளவு வெற்றி பெற்றாலும், ரசிக்கும் படியாக கொண்டாட படவில்லை.
இப்படி மற்ற மொழி படங்களான ப்ரேமலு, மஞ்சுமல் பாய்ஸ், ஆவேசம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதற்க்கு முக்கிய காரணம் கதை தேர்வு தான். சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களில் பெரிய ஹீரோக்கள் இல்லை என்றாலும் ரசிக்கும் படியாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ரசித்து வருகின்றனர்.

நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிறப்பான கதையை கொண்டு படம் எடுத்தால் ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை. அப்படி தமிழில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக கலக்கிய படம் “கருடன்”.
விடுதலை 1-ல் சூரியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது வெளியான கருடன் படத்தில் சூரியின் கேரக்டர் தமிழ் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. இதற்க்கு முக்கிய காரணம் கதைக்கு தேவையானதை சூரி சிறப்பாக செய்திருப்பார்.
அரண்மனை 4, மகாராஜா போன்ற படங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டில் கருடன், கேப்டன் மில்லர், லால் சலாம், அயலான் போன்ற படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் 2024 -ல் வெளியான படங்களில் ரசிக்கும் படியாக இருந்தவை. ஸ்டார், லவ்வர் போன்ற சிறிய ஹீரோ படங்களும் ரசிக்கும் படியாக இருந்தது.
இதில் கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம் போன்ற படங்கள் விமர்சன ரீதியில் பெரிதாக பேசப்பட்ட வில்லை. அரண்மனை 4, கருடன், மகாராஜா ஆகிய மூன்று படங்கள் மட்டுமே இதுவரை வசூல் மற்றும் விமர்சன ரீதியில் கொண்டாடப்பட்ட படமாகவுள்ளது.
இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் கூறும் போது “முதல் பாதியில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இரண்டாவது பாதியில் பல முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியாகவுள்ள நிலையில் அவை வெற்றி பெரும் பட்சத்தில் முதல் பத்தியில் ஏற்பட்ட இழப்பை சரியா செய்ய எதுவாக இருக்கும்” என்று கூறியுள்ளனர்.

2024ல் இந்தியன் 2, ராயன், கங்குவா, Goat, வேட்டையன், போன்ற படங்கள் அடுத்த 2 மாதத்தில் ரிலீஸுக்கு காத்துக்கொண்டுள்ளது. முதல் பாதியில் தமிழ் படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகாத குறையை இரண்டாவது பாதியில் வெளியாகும் படங்கள் சாரி செய்யும் என நம்பலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]