தமிழ் சினிமா படங்களை விடவும் Malayalam சினிமா படங்கள் தொடர் வெற்றியடைவதன் காரணம் கதைகளாக? நடிகர்களாக? ரசிகர்களா?
Malayalam சினிமாவிற்கு 2024 தொடக்கத்தில் இருந்தே வெற்றியைத் தொடர்ந்து வெற்றியாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக கேரளாவை தாண்டி தமிழ்நாட்டில் ரிலீஸான அனைத்து திரையரங்கிலும் மக்கள் கூட்டமாக திரண்டு பார்ப்பதும் 2024ல் அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் புதியதல்ல, இதற்கு முன்னரும் மலையாளம் படங்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இந்த வருடம் தொடர்ந்து வெளியாகும் எல்லா Malayalam படங்களும் வெற்றிநடை மட்டுமல்லாமல் அதிகம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு காரணம் மலையாள படங்களின் கதைகளும்,நடிகர்களின் மாறுபட்ட நடிப்பும் தான் காரணம். மலையாளத்தில் இந்த ஆண்டு மம்முட்டி நடித்த ‘பிரம்மயுககம்’, இளம் நடிகர்கள் நடித்த ‘பிரேமலு’, தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ‘மஞ்சமல் பாய்ஸ்’ படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்தது.
பிரம்மயுகம்- Malayalam

பிரம்மயுகம் படத்தில் முன்னணி நடிகர் மம்முட்டி இதுவரை கண்டிராத முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த காலத்தில் நடக்கும் கதையை முழுமையாக கருப்பு வெள்ளை படமாக எடுத்து அதில் மம்முட்டி போன்ற உச்ச நட்சத்திரத்தை ஒரு பேயாக நடிக்க வைத்து, திரையில் ஒருவித மர்மத்தை தருவது இதுவரை நடக்காதது. தமிழில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த உச்ச நட்சத்திரமும் தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை விட்டுவிட கூடாது என்று இருக்கும்போது, நடிகர் மம்முட்டி இந்த மாதிரி புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவது ஒரு முக்கிய காரணம். இந்த வருடம் வெளியான ‘காதல்’ படத்திலும் நடிகர் மம்முட்டியின் சவாலான கதாப்பாத்திரத்தை பலரும் ஏற்க மறுத்தாலும் அவரின் துணிச்சலான முன்னெடுப்பு அவரை தனித்துவமிக்க நடிகராக மீண்டும் நிலைநாட்டுகிறது.
பிரேமலு- Malayalam

பிரேமலு படத்தில் இளைஞர்களின் புத்துணர்ச்சியான காதலை இக்கால மற்ற சீரியஸான காதல் படங்களில் இருந்து வேறுபட்டு எடுத்துள்ளது பெரிய பலம். சமகால இளம் காதலர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை பேசிய தமிழ் படம் ‘லவ்வர்’ வெற்றியும் இதே ஆண்டில் அமைந்தது, இரு மாறுபட்ட கதைகளும், சரியான அளவில் கச்சிதமான பாத்திரங்கள் வழியாக கூறினாள் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதை காட்டுகிறது.
மஞ்சுமல் பாய்ஸ்- Malayalam

மஞ்சுமல் பாய்ஸ் கேரளாவை விடவும் தமிழ்நாட்டில் இதுவரையில் அதிகம் வசூலித்த மலையாள படமாக சாதனை படைத்தது. இதற்கு காரணம் படத்தின் கதையில் பெரும்பாலான பங்கு குணா படத்தை சார்ந்தும், தமிழ் நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது இருந்தாலும் இதில் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நண்பர்கள் பட்டாளத்தை அழகாக காமித்து அதை வைத்து கதையை நகர்த்திச் சென்றிருப்பார் இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவல்.
ஆவேஷம்- Malayalam

ஃபகத் ஃபாசில் நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கி வலைதளங்கள், திரையரங்குகள் என பிரபலமாகி வரும் படம் ‘ஆவேஷம்’. இயல்பான கதையான ஜூனியர் – சீனியர் கதையை ஒரு பிரம்மாண்ட கதாப்பாத்திரத்தை, இதுவரை ஒப்பீடு செய்ய முடியாத புது பாத்திரமாக உருவாக்கி அதில் ஃபகத் ஃபாசிலை நடிக்க வைத்து ஆரவாரமான வெற்றியை பெற்றுள்ளார் இயக்குனர் ஜித்து மாதவன். முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில் கதாநாயகனாக மட்டும் தன்னை சுருக்கி கொள்ளாமல் அவரை கடக்கும் பல நல்ல பாத்திரங்களை சுலபாக தனதாக்கி, பலதரப்பட்ட ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். இப்படியான வித்தியாசமான சவாலான பாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடிக்கும் நடிகர்கள் மிக குறைவு. இதுவும் இந்த மலையாள படங்களை ரசிகர்கள் தேடி சென்று பார்ப்பதற்கு ஒரு காரணம்.
சமிக்கீலா, லாப்பட்டா லேடீஸ்- Hindi

இதுபோல் சமீபத்தில் ஹிந்தி சினிமாவும் விழித்துக் கொண்டு நல்ல கதை ஆழம் கொண்ட படங்களை வெளியிட்டு வருகிறது. சமிக்கீலா மற்றும் லாப்பட்டா லேடீஸ் போன்ற படங்கள் வெகு நாட்களுக்கு பிறகு பாலிவுட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு பெரிய மாற்றம் தமிழ் சினிமாவில் தேவை. முழுநீள கமர்ஷியல் படங்களை ஸ்டார் அந்தஸ்துக்காக மட்டும் முன்னணி நடிகர்கள் தேர்ந்தெடுத்து நடிப்பதும், பிரபல கதைகளை தாண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இயல்பான கதைகளை திரைப்படங்களில் பார்க்க எப்போதும் மக்கள் தயாராக இருப்பார்கள் என்பதை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் உணர்வதும் இன்றைய அவசியம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]