Home Cinema News 2024 இந்திய தேர்தல் களத்தை பிரதிபலித்த அரசியல் படங்கள்! 

2024 இந்திய தேர்தல் களத்தை பிரதிபலித்த அரசியல் படங்கள்! 

இந்திய தேர்தல் களத்தின் பரபரப்பையும், அதில் நடிக்கும் தந்திரமான அரசியல் பின்னணியும் பற்றி பேசும் LKG, Mandela, Sarkar, Ko, Saguni படங்கள். 

by Vinodhini Kumar

இந்திய தேர்தல் களத்தின் பரபரப்பையும், அதில் நடிக்கும் தந்திரமான அரசியல் பின்னணியும் பற்றி பேசும் LKG, Mandela, Sarkar, Ko, Saguni படங்கள். 

Mudhalvan (1999) 

Mudhalvan

இயக்குனர் சங்கரின் தைரியமான திரைக்கதையில் நூறு நாட்கள் ஓடிய வெற்றி படம் ‘முதல்வன்’. தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் புகழேந்திக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சரை நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அந்த நேர்காணலில் நேர்ப்படையான கேள்விகளுக்கு முதலமைச்சரிடம் பதில் இல்லாமல் ஒரு நாள் முதல்வராக ஆக புகழேந்திக்கு சவால் விடுவார். ஒரே நாளில் ஏற்படும் மாற்றங்கள், நியாயமான அரசியல்வாதி என்ற முரண்பாட்டை உடைக்கும் திரைக்கதை என முதல்வன் படம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அரசியல் படம்.

Aayutha Ezhuthu (2004) 

அரசியல் படங்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் புதிய முயற்சியாக மூன்று கதைகளின் ஒன்றுபட்ட படம் ‘ஆய்த எழுத்து’. சூரியாவின் கதாப்பாத்திரம் ஜார்ஜ் ரெட்டி என்ற நிஜ மனிதரின் கதையில் இருந்து தழுவியது. அரசியல் என்பதின் கண்ணோட்டத்தையும், இளைஞர்கள் அரசியலில் இறங்க வேண்டுவதன் முக்கியத்துவத்தையும் பேசும் படம். மைக்கேல் கதாப்பாத்திரம் தனது அறிவையும் ஆற்றலையும் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் தன்னுடைய நாட்டின் வளர்ச்சிக்கு உதவ நினைப்பது, இன்பா தன்னை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதை அறிந்தும் அறியாமல் எதார்த்தத்தை வெளிப்படுத்துவது என படம் முழுவதும் அரசியல் நுணுக்கங்கள் பல. 

Ko (2011) 

Ko movie

இயக்குனர் K.V ஆனந்தின் முக்கியமான வெற்றி படம் ‘கோ’. ஜீவா ஒரு நாளிதழில் புகைப்பட நிபணராக பணிபுரிந்து, சமூகத்தில் நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவார். அப்படி மூத்த அரசியல்வாதி ஒருவர் ஆட்சிக்கு வர செய்யும் மூடத்தனமான விஷயங்களை நாளிதழில் பதிவிட தொடங்கும் பிரச்சினைகள் தான் கதையின் அடிப்படை. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அரசியலில் இறங்க, அதை கடைசியில் ஆதரிக்கும் வகையில் படத்தை முடித்த இருப்பார் இயக்குனர். நல்ல வரவேற்பு பெற்று, புதுமையான கதையை படமாக்கி விருதுகளும் வென்ற படம். 

Saguni (2012) 

Saguni

காமெடி கலந்த அரசியல் படமாக அமைந்த ‘சகுனி’ படத்தில் நடிகர் கார்த்தி, சந்தானம் நடித்துள்ளனர். தன்னுடைய பாரம்பரிய வீட்டை புதிய ரயில் நிலையம் அமைக்க இடிக்க போவதை அறிந்து, ஆளும் கட்சியின் அரசியல்வாதியை பார்க்க சென்னைக்கு வரும் சாமானியன் கார்த்தி. அங்கே நடக்கும் அரசியல் சிக்கல்களை கண்டு இவரே ஒரு அரசியல் அறிஞராக மாறி ஒரு வட்டிக்கு விடும் பெண்ணை சென்னை மேயராக வெற்றி பெற வைப்பார். எதிர் கட்சியில் சேர்ந்து அந்த வேட்பாளரை முதலமைச்சராக்கி அரசியலின் அந்தரங்கத்தை வெளிப்படையாக காட்டும் படம். 

Sarkar (2018) 

Sarkar

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு தன்னுடைய தேர்தல் வாக்கை பதிவிட வந்த விஜய், தன்னுடைய வோட் ஏற்கனவே வேறோரு நபரால் பதிவிடப்பட்டது தெரிந்து அதை பற்றி விழிப்புணர்வு செய்வது கதையின் தொடக்கம். பின்னர் முதலமைச்சராக பதவியேற்கும் கட்சி இது போன்ற கள்ள வோட்டால் வெற்றி பெற்றதை விஜய் எதிர்ப்பார். தேர்தல் ஆணையம் மற்றுமொரு தேர்தலை வைக்க முடிவெடுக்கும் கதையாக அமையும். இயக்குனர் A R முருகதாஸ் எழுத்துரு ஜெயமோகன் உடன் இணைந்து டயலாக் எழுதி, படத்திற்கு பலம் சேர்த்திருந்தார். 

LKG (2019) 

LKG movie

லால்குடி கருப்பையா காந்தி என்ற வார்ட் கவுன்சிலர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார். கதையை கேட்க இயல்பான சாமானியன் பெரிய கனவை எட்டும் கதையாக தெரிந்தாலும், நடைமுறையில் அரசியல் என்பது வெளிப்புறத்தில் காட்டப்படும் வெள்ளை சாயம் இல்லை என்றும் அதற்கு பின்னால் இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் வெளிச்சம் போட்டு காட்டும் படம். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை பாராட்டியும் இதையும் எப்படி அரசியலாக்குகிறார்கள் என்பது தான் கதை. காமெடி, கருத்து என சரிசமமாக கலந்து எடுக்கப்பட்ட படத்தை இயக்கியவர் K. R. பிரபு. RJ பாலாஜியின் தெளிவான நடிப்பும் உள்ளடக்கிய படம். 

Mandela ( 2021) 

Mandela

இளம் இயக்குனர் மடோன் அஷ்வின் முதல் படத்திலேயே அதிரடியான அரசியல் உண்மைகளை போட்டு உடைத்து, ஒவ்வொரு வோட்டின் முக்கியத்துத்தை எளிய மக்களுக்கு கொண்டு சேர்த்தார். சாதி பிரிவினையால் சரிசமமாக பிறந்து கிடக்கும் ஊரில் சவரம் செய்யும் மண்டேலாவின் ஒரு வோட்டால் கிராம் பஞ்சாயத்து தேர்தல் முடிவை மாற்ற முடியும். அந்த ஒரு வாக்கிற்கு இரண்டு தரப்பும் வைக்கும் விலை, அதனால் அந்த ஊரில் நிகழும் மாற்றங்களும் மனமாற்றங்களும் சமூகத்தில் நடக்க ஏங்கும் எதார்தத்தை காட்டியது. இரண்டு தகுதியான தேசிய விருதுகளையும் அள்ளிய படம் ‘மண்டேலா’.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.