Home Cinema News 2024’ல் மாஸாக களமிறங்கப்போகும் டாப் ஹீரோக்களின் தமிழ்ப்படங்கள்!

2024’ல் மாஸாக களமிறங்கப்போகும் டாப் ஹீரோக்களின் தமிழ்ப்படங்கள்!

2024-ம் ஆண்டின் முதல் பாதி Tamil Cinema'வில் மிகப்பெரிய சொதப்பல். எந்தப் பெரிய படங்களும் இல்லாமல் தியேட்டர்கள் எல்லாம் காலியாக, மலையாளப் படங்கள் எல்லாம் தமிழில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றிபெற்றுவிட்டன!

by Sudhakaran Eswaran

2024 சொதப்பாலாக முடிந்தாலும் இரண்டாம் பாதி மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமே ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என எல்லா பெரிய ஹீரோக்களின் படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகயிருக்கின்றன.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையில் முதலில் ரிலீஸாகயிருப்பது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலனின் இரண்டாவது படம் இது. 40 வயது நாயகனாக விஜய் சேதுபதி இதில் நடித்திருக்கிறார். 

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் வருகிற ஜூன் 13ம் தேதி ரிலீஸாகயிருக்கிறது. இந்தியன் தாத்தாவாக இந்தப்படத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறார் கமல்.

சூர்யாவின் ‘கங்குவா’

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் டபுள் ஆக்‌ஷன் படமான கங்குவா ஜூன் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் ‘கங்குவா’ படம் சூர்யாவின் ஃபிலிமோகிராஃபியில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தனுஷின் ‘ராயன்’!

தனுஷ் எழுதி இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ படம் ஜூலை மாதம் ரிலீஸாகயிருக்கிறது. சென்னை ராயபுரத்தை சுற்றி நடக்கும் இந்தக் கதை வெற்றிமாறனின் ஸ்டைலில் ஒரு ராவாவான வடசென்னை படமாக இருக்கும் என்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’!

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ‘அமரன்’. இந்தியப் போர் வீரரான முகுந்த் வரதராஜனின் பயோபிக் திரைப்படமான இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவரும் முனைப்பில் இருக்கிறார்கள்.

ரஜினியின் ‘வேட்டையன்’!

ஜெய்பீன் இயக்குநர் த.செ.ஞானவேலின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘வேட்டையன்’. சமூக அவலங்களை வேட்டையாடி விளையாடும் கதாபாத்திரம் ரஜினிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். 

அஜித்தின் விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கிவரும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போது பிரேக்கில் இருக்கிறது. விரைவில் இந்தப்படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என்கிறார்கள். இந்த ஆண்டு ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு இந்தப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்யின் ‘GOAT’

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்துவருகிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான ‘GOAT’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.